இடுகைகள்

பெலுடா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துப்பறியும் கதைகளின் அணிவகுப்பு! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  சென்னையில் விநாயகர் சதுர்த்தி பாடல், சோறு, பூஜை என அமர்க்களப்பட்டது. கடலில் சிலைகளை கரைக்கச் செய்யும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். விகடன் இதழ்கள் சிலவற்றை நிறுத்துவது பற்றி அறிந்திருப்பீர்கள்.  டெலிகிராம் செயலியில் நிறைய மின்நூல்கள் கிடைக்கின்றன. தினசரி பத்திரிக்கைகளையும் இதிலேயே படித்துக்கொள்ள முடிகிறது. பத்திரிகைகள், மாத இதழ்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சரி, தவறு என்பதைவிட காலமாற்றத்திற்கேற்ப மக்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இப்படி படிக்கும் செய்திகள் மனதில் நிற்குமா என்று கேட்கிறார்கள். தேவையான விஷயங்களை இதில் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.  இணையத்தில் இந்த வகையில் ஏராளமான செய்திகள், மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  தாளின் விலையேற்றம், நூல்களை சேமிக்க முடியாதது என இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உண்டு. சத்யஜித்ரேயின் பெலுடா சீரிசில் இரண்டு கதைகளைப் படித்தேன்.  பம்பாய் கொள்ளையர்கள், தங்கவேட்டை என்று இரண்டு நூல்களும் நன்றாக இருந்தன. மொழிபெயர்ப்பு வீ.பா. கணேசன் . மொத்தம் இந்த வரிசையில் இருபது நூல்கள் உள்ளன.  வங்காளத்தில் பியோம்க

பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!

படம்
புத்தக விமர்சனம் பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை சத்ய ஜித்ரே பெலுடா தொடர்கதை வரிசை தமிழில்: வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம் இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான்.  பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ். பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என