கிராமம், பழங்குடிகள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவ மாணவர்கள் சிகிச்சையளிக்க முன்வரவேண்டும் - நேரு உரை
மருத்துவத்தில் இந்தியா தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமக்கு முன்னும் பின்னும் ஏராளமான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தேவையும் சேவையும் இந்தியாவைக் கடந்தும் கூட இருந்துள்ளது. இன்று யோசிக்கும்போது தொன்மை மருத்துவர்கள், வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மக்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவர்கள் திறமையான மருத்துவர்களாக இருந்ததோடு, காலத்தால் மேம்பட்ட சிகிச்சை முறையைக் கையாண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதேசமயம், நாம் இன்னும் பழைமையான முறைகளை விட்டு நவீனமாக காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. மக்களுக்கு அதிகளவு உதவி தேவைப்படும் சமயத்தில் கூட அறிவை புத்துயிர்ப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது செயல்படவிருக்கும் மருத்துவ நிறுவனம், அறிவியலை அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். பழைமையான முறைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறவில்லை. அவை சரியானதாக இருந்து லாபம் கிடைக்க கூடியதாக இருந்தால் அதை பின்பற்றலாம். பழை...