இடுகைகள்

பியோம்கேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல்,பேராசை, பொறாமை - மூன்று உயிர்கள் பலி -பியோம்கேஷ் வெப்சீரிஸ்

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் பியோம்கேஷ் சீசன் 3 ஷாஜாரூர் கந்தா அனிர்பன் பட்டாச்சார்யா சுப்ரதா த த்தா ரிதிமா கோஷ் பேனா நிப் ஒன்றால் பிச்சைக்கார ர், கடைக்காரர் என அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அடுத்ததாக யார் சாவார்கள் என மேற்கு வங்காளமே ஆவலோடு எதிர்பார்க்கும்போது தொழிலதிபர் தேவிஷ் பன்றி முள்ளால் தாக்கப்படுகிறார். ஆனால் அதில் ஒரு திருப்பம். தொழிலதிபர் தப்பித்து விடுகிறார். எப்படி? உண்மையில் இந்த பேனா நிப் கொலைகாரர் யார் என்பதை பியோம்கேஷ் கேள்வி கேட்டு, நாடகம் போட்டு டான்ஸ் ஆடி கண்டுபிடிக்கும்போது வருவது வேறு என்ன? எரிச்சலும் கொட்டாவியும்தான். பெரிய திருப்பங்கள் ஒன்றுமில்லை. காதல்தான் அனைத்து களேபரங்களுக்கும் காரணம். திறமை இருந்தால் காசு இருக்காது. காசிருப்பவர்கள், தம் மீது வயிற்றெரிச்சல் படுபவர்களுக்கு தரவேண்டும் என்பது என்ன தலைவிதியா?  தீபா என்ற முகர்ஜி குடும்ப பெண், பத்தாவது படித்து முடிக்கிறார். அப்போதே அவருக்கு கல்யாணம் என்கிறார் அவரின் தாத்தா. ஆனால் தனக்கு பிடித்த வேறு ஜாதி காதலனுடன்தான் கல்யாணம்  என்று என்கிறார் தீபா. அந்தக் காதலர் யார் என அடித்தாலும் சொல்ல மறுக்க

என்னைக்கொல்பவன் யார்? - பியோம்கேஷை மிரட்டும் புதிய வழக்கு!

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் அனிர்பன் பட்டாச்சார்யா, சுப்ரதா தத்தா, ரிதிமா கோஷ் சக்ரபோர்த்தி நடிக்கும் பியோம்கேஷ் சீசன் 2 இயக்கம் சௌமிக் சட்டோபாத்யாய இம்முறை வித்தியாசமான வழக்கை பியோம்கேஷ் எதிர்கொள்கிறார். தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தே அதனைக் கண்டுபிடிக்க காசு கொடுக்கிறார் ஊதாரி ஸ்த்ரீ லோலரான சத்ய காம்தாஸ். தான் இறக்கப்போகிறோம் என்பதை விட யார் மூலம் இறக்கப்போகிறோம் என்பதை அறியவே அவர் விரும்புகிறார்.  அப்போது பணத்தேவையில் இருந்த பியோம்கேஷ் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, துப்பு துலக்க சுசித்திரா எம்போரியம் செல்கிறார். அங்கு, அதன் முதலாளியான தாஸின் அப்பாவைச் சந்திக்கிறார். ஆனால் அவர்களின் வருகையைக் கண்டுபிடித்துவிட்ட தாஸ், அவர்களுக்கு அவராகவே கம்பளிக் கோட்டை தேர்ந்தெடுத்து 230 ரூபாய் பில்லை 100 ரூபாயாக குறைத்து தருகிறார். கூடவே என்னை பின்தொடர்ந்து வராதீர்கள் என எச்சரிக்கிறார்.  அப்போது தாஸின் காதலில் விழுந்து, கற்பைப் பறிகொடுக்கிறார் அன்னபூர்ணா தேவி. அவரின் கடையில் வந்து நின்று கல்யாணத்திற்காக கெஞ்சுகிறார். அங்கு கண்ணீர் மல்க நிற்பவருக்கு,  உடனே புடவை ஐந்தைக் க

உண்மை ஆய்வாளரின் குற்றவழிப் பயணம்- பியோம்கேஷ் பக்சி

படம்
பியோம்கேஷ்  ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் தமிழில்... இயக்கம் - சயானந்தன் கோசல் மூலக்கதை - சராதிந்து பந்தோபாத்யாய பியோம்கேஷ் - அனிர்பன் பட்டாச்சார்யா அஜித் - சுப்ரதா தத் ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் வடிவம் என்கிறார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பியோம்கேஷ், உண்மை ஆய்வாளர். தன்னை டிடெக்டிவ் என்று கூட சொல்லிக்கொள்வதில்லை. அவருடன் எழுத்தாளர் அஜித் உடன் இருக்கிறார். அவர் அவ்வளவு சுதாரிப்பான புத்திசாலி அல்ல; ஆனால் பியோம்கேஷ் சொல்வதைச் செய்வார்.  கதை 1 முதல் கதை போதைப்பொருட்களை விற்கும் மருத்துவர், தன்னை தெரிந்துகொண்ட சிலரைக் கொலை செய்கிறார்.இதனைக் கண்டுபிடிக்கும் பியோம்கேஷ், அவரை கத்தியும் கையுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். கதை நடப்பது 1930 ஆம் ஆண்டு. வேட்டி கட்டிக்கொண்டு ஓடுவது, உதைப்பது, நொடிக்கொருமுறை தீப்பெட்டியை தொடையில் தட்டி யோசிப்பது என அனிர்பன் பட்டாச்சார்யா நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். வயதான நிறைய சொத்துக்களை வைத்துள்ள பெருசுகளை வரிசையாக போட்டுத் தள்ளுகின்றனர். யார் காரணம் என்று தேடுகிறார்கள். ஆனால் பிடிக்க முடியவில்லை. அதி புத்திசால