இடுகைகள்

ஆர்பிஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்காயின் மீது கிளம்புது புது மோகம்! -

படம்
  பிட்காயின் கிரிப்டோகரன்சிகளை பலரும் வாங்கி விற்க முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இதனை முறைப்படுத்த அரசு ஏதும் செய்யவில்லை. இதனை ரிசர்வ் வங்கி இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறலாம்.  முறைப்படுத்தல் இந்தியர்கள் பெரும்பான்மையோர் தங்களது சேமிப்புகளை  பிட்காயினில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் போட்டு வைத்தால் கிடைக்கும் வட்டியும் இப்போது குறைந்துவிட்டது. அதில் போட்டு வைத்து கடனை இன்னொரு  வட இந்திய வியாபாரிக்கு வட்டிக்கு கொடுத்துவிட்டால் சொந்தப்பணமும் காணாமல் போய்விடுமே? எனவே, வரி பிரச்னை இல்லாமல் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் பிட்காயின் ரூபாய்க்கு எதிரிதான். பணமோசடிக்கும் பயன்படுத்தப்படலாம். அதனைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். முதலீடு செய்யும் பணத்தை ஒருவர் மோசடியில் பறிகொடுக்கவும் கூடுதல் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.  அனுமதி ஆர்பிஐ இதற்கு எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சியை தடுப்பதற்கான சட்டத்தை ஆர்பிஐ உருவாக்கினாலும் அதனை மத்திய அரசு இன்னும் நாடாளுமன்றத்தில

கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

படம்
  தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன.  அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம்.  கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது.  சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது.  அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.  அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந்தந்த நிறுவனங்களில்தான் பணத்த

ஜாலி பிட்ஸ்! - இந்திய ரூபாய்களை சீல் வைத்து வைத்து பயன்படுத்திய பாக் அரசு

படம்
பிட்ஸ்! இந்தியாவில் 1954 முதல் 1978 ஆம்  ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பணத்தாட்கள் புழக்கத்தில் இருந்தன.  சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, இந்திய ரூபாய்களில் பாகிஸ்தான் அரசு என்று சீல் வைத்து சில காலம் பயன்படுத்தியது.  ஒரு ரூபாய் நோட்டு மட்டும் நிதித்துறை செயலாளரின் கையொப்பத்தோடு வெளியாகிறது.  பத்து ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தயாரிக்க அரசுக்கு 6.10 ரூபாய் செலவாகிறது.  நாணயங்கள் அச்சிடும் இடங்களைக் கண்டறியும் விதமாக  டயமண்ட் (மும்பை), நட்சத்திரம் (ஹைதராபாத்), புள்ளி (நொய்டா) ஆகிய வடிவங்கள் பதிக்கப்படுகின்றன.  

வாராக்கடன் வசூலிப்பில் பேட் பேங்க் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது!

படம்
        பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது . இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி தற்போது பேட் பேங்க் என்ற கான்செப்டை கையில் எடுத்துள்ளது . இத்தனை ஆண்டுகளாக இதனை பலர் கூறியபோதும் மறுத்து வந்த ரிசர்வ் வங்கி தற்போது இதனை செயல்படுத்த என்ன காரணம் என்று பார்ப்போம் . பேட் பேங்க் என்பது வணிக வங்கிகள் வழங்கிய வாராக்கடன்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்காக அமைக்கப்படும் வங்கி . இந்த வங்கி யாருக்கும் கடன்களை வழங்காது . யாரிடமும் டெபாசிட்களைப் பெறாது . கடன்களை குறிப்பிட்ட கால அளவில் திரும்ப பெறும் நடவடிக்கைகளை செய்யக்கூடியது . வணிக வங்கிகளின் இருப்பில் உள்ள வாராக்கடன்களை திரும்பப் பெற்றுத்தர பேட் பேங்க் உதவுகிறது . வாராக்கடன்களை வாங்கிய அளவுக்கு குறைந்தாலும் முடிந்தவரை வேகமாக மீட்க முயல்கிறது . முன்னார் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் , பேட் பேங்க் முறைக்கு தனது நூலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை இன்னுமொரு நிறுவனம் அமைத்து அதற்கு மாற்றிவிட்டால் எப்படி நிலைமை முன்னேறும் என்று எழுதியிருந்தார் . அமெரிக

ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

படம்
                கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம் ! சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம் , தமிழகம் , தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது . எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது ? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம் , பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர் . கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன . இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு , ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும் . கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள் . கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும் . போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்க

மூத்த குடிமகன்களுக்கான வட்டி குறைவது இயல்பானதுதான்!

படம்
சக்தி காந்த தாஸ் ஆர்பிஐ ஆளுநர் கரன்சி செயல்பாடு புதிய எல்லையைத் தொட்டுள்ளது? சதவீத அளவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு குறைந்தளவே மக்களிடம் புழங்கி வருகிறது. வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் ரூபாயின் புழக்கம் மக்களிடம் அதிகமாகத்தான் இருக்கிறது. இது விரைவில் குறையும் என நம்புகிறேன். வட்ட சதவீதம் குறைந்தால் அது மூத்தவர்களுக்கு பாதகமாகும் என்பதை அறிந்துள்ளீர்களா? பணவீக்கம் குறையும் போது வட்டி சதவீதமும் குறைவது வழக்கமானதுதான். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும்போது வட்டி எட்டு சதவீதமாக இருக்கும். அது குறையும்போது வட்டி 4 சதவீதமாக குறைவது இயல்புதானே! வெளிநாடுகளிலும் கூட இந்திய கடன் பத்திரங்களை வாங்க முடியும் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்களே? நாங்கள் அரசு கடனை நிர்வாகம் செய்யும் மேலாண்மை அமைப்பு மட்டுமே. அதை மட்டுமே செய்கிறோம். கடன், வட்டி பிரச்னைகளை குறித்து அரசுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். அரசின் வேறு முடிவுகளை பற்றி நாங்கள் பதில் கூறமுடியாது. முழுக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை சரியாக செயல்படுகிறதா? நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதே? அவ

ஆர்பிஐ - கருவூல உண்டியல்

படம்
கருவூல உண்டியல் இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும். 91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன. 91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன. பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது. செய்தி: ஆர்பிஐ, ஷா அகாடமி