இடுகைகள்

குடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர்களின் தவறான வளர்ப்பால் சிலுவை சுமக்கும் இரட்டையர்கள்! இரட்டா - ஜோஜூ ஜார்ஜ்

படம்
  இரட்டா -ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி இரட்டா ஜோஜூ ஜார்ஜ் இடுக்கி மாவட்டத்திலுள்ள வாகாமன் காவல்நிலையம். அங்கு, பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை ஒப்படைக்க விழா ஒன்றை நடத்துகிறார்கள். வனத்துறை அமைச்சர் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் உள்ளே ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர்கள் என அங்கு நிற்கும் மூன்று போலீஸ்கார்களைப் பிடிக்கிறார்கள். சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் யார் குற்றவாளி என கண்டறிவதே படம். இறந்துபோனவரான வினோத், வாகாமனில் உதவி ஆய்வாளர். அவருக்கு சகோதரரான பிரமோத், அதே காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இறந்தவரான வினோத், கொலையை விசாரிக்கும் பிரமோத் இருவருமே இரட்டையர்கள். ஆனால், 17 ஆண்டுகளுக்கு மேலாக துவேஷமாக வன்மத்தோடு வாழ்கிறார்கள். வினோத் கொல்லப்பட என்ன காரணம் என்பதை எஸ்பி விசாரிக்க, மூன்று போலீஸ்காரர்களின் வாக்குமூலம் வழியாக கதை நகர்கிறது. இறந்துபோன வினோத் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம். அவர், மனதில் சகோதரர் பிரமோத் பற்றிய ஒரு தீராத கோபம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை காவல்நிலையத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், விசாரணையில் பிரமோத்தைக் கூட

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள

நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

படம்
பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்