இடுகைகள்

போன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி

படம்
  2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன் உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது. சோபி சராரா டிவி இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில் மக்

காதலர்களை போனை மாற்றிக்கொள்ளச் சொல்லும் பெண்ணின் அப்பா! லவ் டுடே - பிரதீப், இவானா

படம்
  லவ் டுடே பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா இசை யு1 இயக்கம் பிரதீப் ரங்கநாதன்   நிகிதா, பிரதீப் என இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கமாகித்தான் டேட்டிங் சென்று காதலிக்க தொடங்குகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதாக சொல்லிக்கொள்கிறார்கள். கல்யாணம் பற்றி பேசப் போகும்போது நிகிதாவின் அப்பா, இருவரும் ஒரு நாளுக்கு இருவருடைய போன்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்கிறார். இதனால் ஏற்படும் களேபரங்கள்தான் படம். படத்தை இயக்குநர் பிரதீப் குடும்ப படம் என்றாலும் முழுப்படத்தையும் குடும்ப ஆட்கள் தனித்தனியாக வந்து பார்த்துக்கொள்ளலாம். படம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. 2கே கிட்ஸ்களுக்கான படம். எப்போதும் போனை கையில் வைத்துக்கொண்டே அனைத்து உறவுகளையும் அனைத்து வசதிகளையும் பெற்று நுகரும் ஆட்களுக்கு அதன் வழியாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பேசுகிற படம்.   நேரடியாக ஒருவரைச் சந்தித்துப் பேசுவதும், அதன் வழியாக உறவு வளர்வதும், சமூக வலைத்தளங்களின் வழியாக உறவு வளர்வதும் எப்படியானது என்பதை படத்தில் சில இடங்களில் நகைச்சு

பின்தங்கும் ஆங்கில நூல்கள் வாசிப்பு!

படம்
  திறமைக்கான வாய்ப்பு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மருத்துவர் முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம் . அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும் . அதில் சாதித்து வெல்ல முடியும் . நான் வேலை செய்யும் இதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர் . இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம் . எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது . ஆனால் , நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது . இதுவரையிலும் பிறரிடம் நான் செய்த வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது . இப்போது முழங்கால் வலி மட்டுப்பட்டுள்ளது . இதனால் நடக்க முடிகிறது . உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன் . இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன் . அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம் எனத் தோன்றுகிறது . அன்பரசு 13.8.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------ டிஜிட்டல் வடிவில் மாறும் வாசிப்பு

அந்தரங்க ரகசியங்கள் உடைபட நண்பர்கள் கூட்டத்தில் நடைபெறும் கொலை! 12 Th Man - ஜீத்து ஜோசப்

படம்
  12th Man மோகன்லால் (நடிகர், தயாரிப்பு) இயக்கம் - ஜீத்து ஜோசப்  கல்லூரி நண்பர்கள் பதினொரு பேர், ரிசார்ட் ஒன்றுக்கு வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்யப்போகும் நண்பன் கொடுக்கும் பார்ட்டி அது. அங்கு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். அது வினையாக அதன் விளைவாக ஏற்படும் குழப்பமும், கொலையும் அதுதொடர்பான விசாரணையும்தான் படம்.  பதினொரு நபர்களை படத்தின் டைட்டில் கார்ட் போடும்போதே அறிமுகப்படுத்திவிடுகிறார்கள். இதனால் கதையில் இவர்களைப் பற்றி தனியாக சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. கல்லூரி கால நண்பர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் இன்னொருவர் மீது புகைச்சலும் பொறாமையும் இருக்கிறது இதனை வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துகிறார்கள். முக்கியமான மேத்யூ, ஷைனி ஆகியோர் தான் படத்தை நகர்த்திச்செல்லும் முக்கியமான பாத்திரங்கள்.  மேத்யூ, ஃபிடா ஆகியோர் கல்லூரி கால தோழர்கள் மேலும் தொழிலும் ஒன்றாக் இருக்கிறார்கள். இவர்களை ஷைனி ஒன்றாக இருக்கிறார்கள், பழகுகிறார்கள் என எப்போது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். தேள் போல கடினமான வார்த்தைகளை எளிதாக பேசுகிறார்.  இதில் ஃபிடா திருமணமாகி விவாகரத்த

இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்

படம்
1 இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.  தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி.  தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர் பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக பிறருடன் தொடர்புகொள்

176 பிறந்த தினத்தை கொண்டாடும் அறிவியலாளர்! - அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

படம்
  பெல், அறிவியலை நாடியது அவருடைய அம்மாவுக்காகத்தான். அவருக்கு காது கேட்பதில் பிரச்னை இருந்தது. இதனை சரிசெய்யவே அறிவியலில் தீர்வுகளை தேடிக்கொண்டிருந்தார். அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் அப்பா, குரல்வளையின் அமைப்பு போன்ற இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இதனை விசிபிள் ஸ்பீச் என்று பெயரிட்டு அழைத்தார்.  பெல், பல்வேறு அறிவியல் சமாச்சாரங்களை தன் அப்பாவிடமிருந்து தான் கற்றுக்கொண்டார். 1870ஆம் ஆண்டு பெல்லின் குடும்பம் கனடாவிற்கு சென்றது. பெல் தொடர்ந்து காது கேளாமை பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதுபற்றி பிறர் கற்க பள்ளி ஒன்றைத் திறந்தார். பேச்சு நுட்பம், குரல் அமைப்பு முறை என்பதுதான் இதன் பெயர். 1872இல் பாஸ்டன் நகரில் இந்த பள்ளியைத் தொடங்கி நடத்தினார்.  காது கேளாமைக்கான ஆராய்ச்சியின்போதுதான் தகவலை கருவிகள் வழியாக அனுப்பினால் என்ன என்று தோன்றியது. இதற்கான ஆராய்ச்சிகளையும் செய்யத் தொடங்கினார். 1876ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, பெல்லும் அவரது உதவியாளருமான தாமஸ் வாட்சன் ஆகிய இருவரும் டிரான்ஸ்மீட்டர் வழியாக தகவல் ஒன்றை அனுப்பினர். பக்கத்து அறைக்கு அனுப்பிய தகவல் இதுதான். மிஸ்டர் வாட்சன் இங்கு வாரு

5ஜிக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை!

படம்
மினி பேட்டி! டாக்டர்  ராபர்ட் டேவிட் கிரைமெஸ், இயற்பியலாளர் 5 ஜி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்கிறார்களே? ஐ.நாவின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு கூறிய தகவல்களை வைத்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் அது 2பி எனும் குறிப்பிட்ட ரேடியோ அலை சார்ந்தது. இந்த அலை புற்றுநோயை உண்டாகும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கட்டிகளை மூளையில் உண்டாக்கும் என்பது உண்மையா? உலக நாடுகளில் பயன்படுத்தும் அனைத்து போன்களும் குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இந்த போன்களில்தான் நாம் நெடுநேரம் நண்பர்களிடம் உறவுகளிடம் பேசி வருகிறோம். மேலும் இதில் பயன்படும் ரேடியோ அலைகள் உங்களை பாதிக்கும் அளவு அயனிகள் கொண்டவை அல்ல. 5ஜி அலைவரிசையில் டிரான்ஸ்மிட்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. இது ஆபத்தில்லையா? ட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு அதிகம் என்று கூற முடியாது. தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ளவே இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 ஜி பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள் பரவுகின்றன? பிற தொழில்நுட்ப வசதிகள் போன்றதல்ல 5ஜி. உலகில் பல்வ