இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்திலுள்ளவர்களை திறமைசாலிகளாக உருவாக்கி வருகிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, ஜோகோ

படம்
            ஶ்ரீதர்வேம்பு ஜோகோ கிராமத்தில் நிறுவனத்தை தொடங்கி நடத்தும்போது எது சரியாக இருக்கும் , எது வேலைக்கு ஆகாது என நினைக்கிறீர்கள் ? பைபர் ஆப்டிக் வயர்கள் இணையத்தை இணைப்பதால் வீடியோ தரம் சிறப்பாக உள்ளது . அதேசமயம் ஆங்கிலம் சிறப்பாக பேசும் ஆட்களை கிராமத்தில் தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது . நிறைய ஜெர்மன் , ஜப்பானிய நிறுவனங்கள் எப்படி ஆங்கிலம் இல்லாமல் கூட உலக சந்தையை அணுகுகிறார்களோ அதேவழியில் நாமும் இந்திய தொழில்வளத்தை உயர்த்தவேண்டும் .    ஸ்டார்ட்அப் என்றாலே நிறைய போட்டிகள் உள்ளன . ஒப்பீடுகள் வருகின்றன . எப்படி சமாளிக்கிறீர்கள் ? நான் நேற்று கூட என் கிராமத்தினருடன் சேர்ந்து 12 கி . மீ . தூரம் நடந்து சென்றேன் . இப்போது என்னை பில்கேட்ஸூடன் ஒப்பிடுவீர்களா ? இந்த எலிப்பந்தயம் மீது எனக்கு விருப்பமில்லை . உங்களுக்கு மிகப்பெரும் ஆதாயம் தரும் விஷயம் இதிலிருந்து நீங்கள் விலகி வாழ்வதுதான் . உங்களுக்கு அரசியலில் சேரும் எண்ணம் உண்டா ? நான் அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நினைக்கவில்லை . ஜோகோவில் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன . இதற

பௌர்ணி நிலவு ஒளி மனிதர்களின் மனநிலையை பாதிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியம் ! ரியல் : கதிர்வீச்சிலும் கூட சமாளித்து வாழும் என்று கூறப்படுவது , கரப்பான் பூச்சி . மனித இனத்திற்கு பாக்டீரியா , ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தியபடி வாழும் இந்த பூச்சி இனம் , பத்தாயிரம் ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்து வருகிறது . மரம் , இலை ஆகியவற்றை உண்டு , நைட்ரஜன் சத்தை நிலத்திற்குப் பெற்றுக் கொடுக்கிறது . இயற்கையின் உணவுச்சங்கிலியில் கரப்பான் பூச்சி முக்கியமானது . எனவே , அவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம் . அதன் இனத்தை ஹிட் ஸ்ப்ரே அடித்து கொல்ல நினைக்காதீர்கள் . தற்போதைக்கு இம்முயற்சி சாத்தியமல்ல . உலகிலுள்ள அனைத்து மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யத்தொடங்கினால் சூழல் மேம்படும் ! ரியல் : நிச்சயமாக சூழல் மேம்படும் . இந்திய குடிமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயன்றால் , கழிவுகளை நிலத்தில் கொட்டுவது குறையும் . இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் கழிவுகள் உருவாகின்றன . இந்த எண்ணிக்கை 2030 இல் 165 மில்லியனாக

அனைவருக்கும் ஒரே ஊதியம் என்பது சமூக வேறுபாடுகளை ஒழிக்கும்! உண்மையும் உடான்ஸூம்

படம்
            பேய்விளக்கு (Ghost lights) வெளிச்சத்தை வேற்றுகிரகவாசிவாசிகள் ஏற்படுத்துகின்றனர் . ரியல் : வேற்றுகிரகவாசிகள் என்ற கருத்தே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை . அப்புறம் எப்படி அவர்கள் பேய்விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும் ? காரில் வேகமாக சாலையில் செல்லும்போது , அதிலுள்ளவர்களுக்கு சாலையின் குறிப்பிட்ட இடங்களில் தானாக வெளிச்சம் தோன்றியது . இதனை பேய்விளக்கு வெளிச்சம் என்கின்றனர் . அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா , டெக்ஸாஸ் ஆகிய நகரங்களிலும் , உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெளிச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது . ஆனால் இந்த வெளிச்சம் தோன்றுவதற்கான காரணங்கள் அறிவியல்பூர்வமாக விளக்கப்படவில்லை . வேகமாகச் செல்லும் காரின் விளக்குகள்தான் , பார்ப்பவர்களுக்கு இயக்கமின்றி பேய்விளக்கு வெளிச்சமாக தோன்றுகின்றன என சிலர் சொன்னாலும் அது நிரூபிக்கப்படவில்லை . வேற்றுகிரகவாசிகள் , பேய் , பூமித்தட்டு நகர்வு என பல்வேறு காரணங்களை இந்த வெளிச்சத்திற்கு காரணமாக மக்கள் சொல்லி வருகின்றனர் . ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுகள் இன்றும் மக்களின் பயன்பாட்டில் உள்ளன . ரியல் : ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுக

நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      1. ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன . ரியல் : இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை . ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது . அதன் பெயர் ஓவர்டூன் . இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது . இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து . ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன . பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ் . இருண்ட , மேகங்கள் சூழ்ந்த , வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் , தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன . இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன . 2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை ! ரியல் : அவசியமில்ல

உலகில் ஜோம்பிகள் உருவாக வாய்ப்புள்ளதா? உண்மையும் உடான்ஸூம்

படம்
      உலகில் ஜோம்பிகள் உருவாவது சாத்தியம்தான் ! ரியல் : 1968 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில திரைப்படங்கள் வழியாக ஜோம்பிகள் பற்றி சிந்தனைகள் பேசப்படத் தொடங்கின . சாபம் அல்லது நுண்ணுயிரிகளின் தாக்குதல் காரணமாக ஜோம்பிகள் எனும் சதை தின்னும் கொடூர மனிதர்கள் உருவானதாக காமிக்ஸ்கள் , சாகச நாவல்கள் கூறின . பூமியில் நிலவும் கடும் குளிர் , அனல் வெயில் , மழை , புயலுக்கு இவர்கள் தாக்குப்பிடித்து வாழ முடியாது . மூளை செயல்படாதபோது , உடல் உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படாது . ஜோம்பிகள் பெரும்பாலும் தலையில் அதிகம் காயங்களோடு இருப்பதால் , அவர்கள் நடந்துவருவது , ஒருவரைத் தாக்குவது சாத்தியமில்லை . நுண்ணுயிரிகள் தாங்கள் தாக்கும் உயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் . ஜோம்பிகள் நுண்ணுயிரி தாக்குதலால் இறப்பதற்கே வாய்ப்பு அதிகம் . ஐம்புலன்கள் வேலை செய்யாது , செரிமானத் திறன்கள் இல்லை என்பதால் ஜோம்பிகள் பூமியில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை . நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது ரியல் : உண்மை . இங்கு நம்மை சுமந்து பல்வேறு நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களின் எந