2020 இல் கற்றுக்கொண்டதை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்! ஆலியா பட், இந்தி நடிகை
ஆலியாபட்
இந்தி நடிகை
2020ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்தித்துள்ளோம். இக்காலகட்டத்தை எப்படி சமாளித்தீர்கள்?
நான் பெருந்தொற்று காலத்தை எழுதுவதில் செலவிட்டேன். இது மனிதர்களுக்கும் பூமிக்கும் கூட எளிதான கால கட்டம் அல்ல என்பது உண்மை. இந்த ஆண்டில் கற்ற விஷயங்களை அடுத்த ஆண்டில் பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை.
2021இல் நீங்கள் நடித்த பிரம்மாஸ்திரா, கங்குபாய் கதியாவடி என்ற இரு முக்கியமான படங்கள் வெளிவரவிருக்கின்றன. ஆர்ஆர்ஆர் என்ற படம் 2022இல் வெளியாகவிருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் படத்தை தேர்நெதடுப்பது கதை மற்றும் எனது கேரக்டர் சார்ந்து மட்டும்தான். இவற்றோடு இயக்குநரின் படங்கள் பேசும்படியாக இருந்தால் படம் பெரிதாக தோன்றும். படங்கள் என்பது முழுக்க இயக்குநரின் தோளில்தான் உள்ளது. அவர் எப்படி கதையை சொல்லவேண்டும் என நினைக்கிறாரோ அதைப்பொறுத்து படம் பெரியதாகவே பட்ஜெட்டிலோ அமையும்.
ஆடைகளுக்கான பிராண்டு எப்படி உருவாக்கவேண்டும் என்று தோன்றியது?
நாம் பயன்படுத்திவரும் ஆடைகளுகளுக்கான மற்றொரு பிராண்டு என்பதை நான் உருவாக்கவில்லை. இந்தியக்குழந்தைகளுக்கான பிராண்டு என்பது சந்தையில் இல்லை. நான் சிறுபெண்ணாக இருந்தபோது, உலகை சிறுபெண் காப்பாற்றுவது போல நிறைய கதைகளை படித்துள்ளேன். அதனால் சூழலுக்கு உகந்த உடைகளை உருவாக்க நினைத்தேன். லாக்டௌன் வந்துவிட்டதால் அதனை உடனே அறிவிக்க முடியாமல் போய்விட்டது.
சூழலுக்கு உகந்த ஆடைகள் என்றால் அதற்கென வடிவமைப்பாளர்கள் தேவையா?
இது எளிதல்ல. பொருட்களை எளிதாக கிடைப்பது பொறுத்து அனைத்துமே மாறும். சூழலைப் பொறுத்து நிறைய பிராண்டுகள் இருந்தால் நன்றாக இருக்கும். இங்கு அப்படி பிராண்டுகள் உருவாகவில்லை. நம்முடைய கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காணவேண்டும்.
சுகானிசிங்
கருத்துகள்
கருத்துரையிடுக