இடுகைகள்

சாபம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் ஆவியைச் சுமந்து திரியும் சக்தி வாய்ந்த சிறுவனின் வாழ்க்கை - ஜூஜூட்சு கைசென்

படம்
  இறுதிப் போர் வில்லன் ஜூஜூட்சு கைசென் 0 - நான்கு நண்பர்கள் ஜூஜூட்சு கைசென் அனிமேஷன் யூடா என்ற சிறுவன் ஜூஜூட்சு ஹை எனும் பள்ளிக்கு வருகிறான். இவன், அழிவு சக்தியை தன்னுடைய உடலில் கொண்டிருக்கிறான். இவனை கிண்டல் செய்யும் பள்ளி நண்பர்களை தனது ரிகா சான் என்ற சக்தி மூலம் அடித்து துவைத்ததில் பலருக்கும் வெண்டிலேட்டர் வைக்கும் நிலை.   அனிமேஷனில் முதல் காட்சியே தெருவிளக்கை கீழிருந்து காட்டும் காட்சிதான். இந்த படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உள்ளன. அதிக சண்டைக்காட்சிகள் கொண்டுள்ள படம். படத்தின் கான்செப்ட் என்னவென்றால், ஒருவர் பிறர் மீது காட்டும் அன்பு, கோபம், வருத்தம், வன்மம், பழிக்குப்பழி உணர்ச்சி என இவை அழிவு சக்திகளை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்குபவர்கள் எல்லாம் தங்கள் சக்தியை கட்டுப்படுத்த முயலவேண்டும். இல்லாதபோது அது உலக மக்களை அழிக்கும் ஆபத்தாக மாறும். யூடாவை தனது பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர், அவனுக்குள் இருக்கும் சக்தியைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். இதற்கான பயிற்சிகளைக் கொடுக்கிறார். இப்படித்தான் அவனுக்கு பாண்டா கரடி, சாப வார்த்தைகளை வீசும் இனுமாகி சான், பேசுவதை விட கத்தி பொ

இந்தியர்கள் அனைவருமே காமசூத்திரத்தை படிக்கவேண்டும்! - எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு

படம்
  ஸ்ரீமொயி  பியு குண்டு எழுத்தாளர் எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு சீதா கர்ஸ் என்ற நூலை எழுதுவதற்கு என்ன காரணம்? சிற்றின்பம் என்பது த த்துவம், உடல் சார்ந்த தூண்டுதல், ஆன்மிக அனுபவம் என்று கூறலாமா? இந்த நூல் பெண்ணியம் சார்ந்த சிற்றின்ப நூல். இது என்னுடைய இரண்டாவது நூல். மும்பையில் பத்திரிகையாளராக வேலை செய்தபோது சீதா கர்ஸ் நூலுக்கான ஐடியா தோன்றியது. இந்த நேரத்தில் நான் ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் துணிகளை காயப்போடுவது, கூண்டில் உள்ள கிளிகளுக்கு உணவிடுவது ஆகியவற்றை செய்துகொண்டிருப்பார். அப்போது அவரின் ஜாக்கெட்டில் உள்ள பட்டன்கள் போடப்படாமல் இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பார். இதுதான் சீதா கர்ஸ் நூலிலுள்ள மீராவின் பாத்திரத்தை உருவாக்க காரணமாக இருந்தது.  இந்த நாவலுக்கு எதற்கு சீதாவின் சாபம் என்று பெயர் வைத்தீர்கள்.  இதில் சீதாவுக்கு எந்த இடமுமில்லை. சீதா, ராமனின் மனைவி. அவளை அவளது வாழ்வில் விரும்பிய ஒருவன் ராவணன்தான். அவனும் கூட அவளை கடத்திச்சென்று வைத்திருந்தாலும் அவளை தொடக்கூட இல்லை. ஆனால் அந்த ஆசைக்காக அவன் கொல்லப்

அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!

படம்
  cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ்   ஜானியின் அசுரவேட்டை காமிக் பிடிஎப் டைம்ஸ் தமிழில் ஜானி வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை. 18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள்  நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை. காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது. புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள் காமிக்ஸ் நூல்