இடுகைகள்

குக்கீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களைக் கண்காணிக்கும் பெரு நிறுவனங்கள்! - தகவல் சேகரிப்பில் கொட்டும் லாபம்!

படம்
                பழக்கங்களை பின்பற்றுதல் காலையில் எழுகிறீர்கள் . எழுந்த உடனே பெரும்பாலும் முகங்களை கூட இப்போது எல்லாம் யாரும் கழுவுவதில்லை . உடனே போனில் பேஸ்புக் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ள பதிவுகளை பார்க்கிறோம் . இரவில் தூங்கும்போது மாறியுள்ள விஷயங்களை எப்படி கவனிப்பது ? பின் கிளம்பி அலுவலகம் சென்று இணையத்தில் ஷூ வாங்குவது பற்றி தேடுகிறீர்கள் . இன்ஸ்டாகிராமில் காபியை குடிப்பது போன்ற புகைப்படத்தை டீ பிரேக்கில் பதிவிடுகிறீர்கள் . சிறிதுநேரத்தில் இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் புதிய ஷூக்கள் பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கும் . எப்படி என்று இந்நேரம் யூகித்திரப்பீர்கள் . அனைத்து வலைத்தளங்கள் நுழைந்தவுடன் குக்கீஸ்கள் நம்மை பின்தொடர அனுமதி கொடுப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் . இந்த குக்கீஸ்கள்தான் நாய்க்குட்டிபோல நம்மைப் பின்தொடர்ந்து வந்து பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றன . அதனால்தான் விளம்பரங்கள் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்றன . சில சமயங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது , கூகுள் இந்த விளம்பரம் பொருந்தவில்லையா என்று கேள்வி கே