இடுகைகள்

பால்யம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுதிய வரலாற்றுக் கதையில் குரூர இளவரசனுக்கு மனைவியாக மாறும் எழுத்தாளர்!

படம்
            different princes சீன டிராமா 33 எபிசோடுகள் வரலாற்றுக்கதை எழுதும் இளம்பெண், தொடர்கதையாக இணையத்தில் எழுதி வெளியிட்டுவருகிறார். ஒருநாள் தனது கதையின் இறுதியில், பழிவாங்கும் எண்ணம் கொண்ட இளவரசன், நல்ல இளவரசனையும், அவனது மனைவியையும் அம்பு எய்து கொன்று ஆட்சியைப் பிடிப்பதாக எழுதி கதையை நிறைவு செய்கிறாள். ஆனால், அதை கதையை வாசித்த வாசகர்கள் ஏற்கவில்லை. நல்லவன் இறக்க கூடாது. வில்லன் வெல்வது போல உள்ளது என அறம் சார்ந்த கேள்வியை எழுப்புகிறார்கள். ஆனால், எழுத்தாளரான நாயகி முடியாது. நான் எழுதியபடி வில்லன்தான் வெல்கிறான் என உறுதியாக கூறுகிறாள். கணினி அவளை தொன்மைக் காலத்திற்கு கூட்டிச் செல்கிறது. அங்கு, அவளை தீயசக்தி இளவரசன் மணந்துகொண்டு முதலிரவு அன்றே கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அதிலிருந்து எழுத்தாளர் நாயகி மீண்டு எப்படி தன்னைக் காத்துக்கொண்டு தீயசக்தி இளவரசனை திருத்துகிறாள் என்பதே கதை. இக்கதையை சுருக்கமாக சொன்னால், கதை எழுதும் எழுத்தாளரே அவரது கதையில் ஒரு முக்கிய பாத்திரமாக மாறினால்.. என வைத்துக்கொள்ளலாம். எழுத்தாளருக்கு நல்லவன் கெட்டவன் என பேதம் இல்லை. இரண்டு...

ஆளுமை பிறழ்வுக்கு என்ன காரணம்?

படம்
  ஆளுமை என்பதை நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். சுய முன்னேற்ற நூல்களில் ஆளுமை என்பது முக்கியமான வார்த்தையும் கூட. ஒருவர் பேசுவது, சிந்திப்பது, செயல்படுவது ஆகியவற்றில் தனது கலாசாரம் சார்ந்த தன்மைகளை தாண்டி இருப்பது ஆளுமைக் குறைபாடு அல்லது பிறழ்வு என கூறலாம். அதாவது சமூகத்தை சீர்திருத்துபவர்களை இதில் உள்ளடக்க முடியாது. குறிப்பிட்ட தன்மையில் யோசிப்பது, செயல்படுவது ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல், மனம் என இரண்டுமே பாதிக்கப்படும் நிலை என புரிந்துகொள்ளலாம். உளவியலாளர், ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு உண்டா இல்லையா என சோதனை மூலம் உறுதி செய்ய முடியும். ஆளுமை பிறழ்வு அல்லது குறைபாடு வகையில் மொத்தம் பத்து வகைகள் உள்ளன. பாரனாய்டு, ஸிசோய்டு, ஸிசோடைபால், ஆன்டி சோசியல், பார்டர்லைன், ஹிஸ்டிரியோனிக், நார்சிஸ்டிக், அவாய்ட்ன்ட், டிபென்டன்ட்,ஆப்செசிவ் கம்பல்சிவ். இவற்றைப் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் திகைப்பாகவே இருக்கும். எப்படி உச்சரிப்பது என்பது முக்கியல்ல. என்ன அறிகுறிகள், பாதிப்பை குறைத்து கட்டுப்படுத்துவது மட்டுமே அவசியமானது. மனநல குறைபாடுகளுக்கு தீர...