இடுகைகள்

சீனதொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

சாப விடுதலைக்காக குன்லூன் கல்லறைக்குச் செல்லும் தொல்பொருள் குழு! - குன்லூன் டாம்ப் - சீனதொடர்-

படம்
  குன்லூன் டாம்ப் குன்லுன் டாம்ப் 2022 சீன டிவி தொடர் மூல நாவல்- கேண்டில் இன் தி டாம்ப் – ஸாங் மூ யே ராகுட்டன் விக்கி ஆப் சாகசத் தொடர் இயக்குநர் – ஃபெய் ஸென் ஷியாங்       ஓல்ட் ஹூ, ஃபேட்டி, ஒல்ட் ஜின், ஷிர்லி யாங் இந்த நால்வரும் தொன்மையான பொருட்களை தேடித் திரியும் ஆட்கள். கல்லறைகளுக்குள் நுழைந்து பொருட்களை தேடி எடுத்து வந்து விற்பதுதான் வேலை. ஒருமுறை இப்படியான வேலைக்கு செல்லும்போது ஓல்ட் ஹூ (ஹூ பாயி), ஃபேட்டி (வாங் கை சுவான்) ஷிர்லி யாங் ஆகியோரை வைரஸ் ஒன்று தாக்குகிறது. தொன்மை கலாசாரப்படி கல்லறைக்குள் நுழைபவர்களை தாக்கும் சாபம் இது. இதன் பெயர் ரெட் ஸ்பாட் கர்ஸ். இதன்படி இதற்கு பரிகாரமாக தீயசக்தி ராஜ்யமான குன்லுன் எனும் இடத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் போகாவிட்டால் வைரஸ் தாக்கி உயிர் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த மூவரையும் பயன்படுத்தி பொக்கிஷங்களை சம்பாதிக்க தொன்மை பொருட்களை விற்பவரும் செல்வந்தருமான மிங்க் யூ ஒரு மறைமுகத் திட்டம் வகுக்கிறார். இதன்படி, பொக்கிஷங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் தன் தந்தை குன்லூன் டாம்பில் இறந்துபோய்விட்டார். உடலை மீட்க வேண்டும் என்

சொத்துக்காக நடக்கும் கொடூர கொலைகள்! - யுவர் சீக்ரெட்

படம்
  யுவர் சீக்ரெட் சீன டிவி தொடர் யூட்யூப் லூ பே சான், காவல்துறையில் தடயவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். டிடெக்டிவ் லாவோ கண்டுபிடிக்கும் கொலைகளுக்கான பிரேத பரிசோதனைகளை லூதான் சோதனை செய்து கண்டுபிடிக்கிறார். இருவருமே வேலை காரணமாக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். இந்த நிலையில் அங்கு தடயவியல் படிப்பின் இன்டர்ன்ஷிப்புக்காக கூ சூ என்ற இளம்பெண் வருகிறார். அவரைப் பார்த்ததும் லூ பே சான், இந்த பெண் எனக்கு தேவையில்லை என்று சொல்லுகிறார். ஆனால் அதற்கு அந்த பெண் குற்றவுணர்ச்சியுடன் பேசினாலும் நான் உங்களிடம்தான் வேலையைக் கற்றுக்கொள்வேன் எனக் கூறுகிறாள். உண்மையில் லூ பே சான், கூ சூ என்ற இருவரின் உறவு என்ன, லூ பே சான் எதற்கு  அந்த பெண்ணை வெறுக்கிறார், அவமானப்படுத்துகிறார் என்பதுதான் 37 அத்தியாயங்களைக் கொண்ட  டிவி தொடரின் மையம்.  குடும்ப ஆதிக்கம், சொத்துரிமை, போதைப்பொருட்கள் வியாபாரம் என ஏராளமான விஷயங்களில் கதை நகருகிறது. அடிப்படையான கதை என்பது லூ குடும்பத்திற்கும், கூ சூ குடும்பத்திற்குமான பிரச்னைதான்.  லூ குடும்பத்தில் பே சென் என்பவர் கார் விபத்தில் இறந்துவிட, அதில் இரட்டையரான லூ பே சான் என்பவர் மட்

அம்னீசியா பலவீனத்துடன் துரோகத்தை களையெடுக்கும் குற்றவியல் அதிகாரி! ரீபார்ன் - சீன தொடர்

படம்
            ரீபார்ன் சீனத்தொடர் 28 எபிசோடுகள் நகரில் உள்ள புகழ்பெற்ற குற்றக்குழுவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் சிலர் செய்யும் துரோகத்தால் தனது சகாக்களை போலீஸ் அதிகாரி இழக்கிறார் . உண்மையில் அந்த துரோகத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவர்களை அழிப்பதே கதை . பொதுவாக உடலில் நோய் , ஊனம் கொண்ட நாயகர்களை தொடரில் படத்தில் நடிக்கவைப்பது பார்வையாளர்களிடையே எப்படி இவர் வெல்வார் என எதிர்பார்ப்பை உருவாக்கும் . இந்த தொடரில் நாயகனுக்கு அம்னீசியா பிரச்னை உள்ளது . தலையில் தோட்டா பாய்ந்து அதன் சில்லுகள் மூளையில் தேங்கி நிற்கின்றன . ஆபரேஷன் கூட செய்யமுடியாத நிலை . முழங்காலில் தோட்டா பாய்ந்ததில் தினசரி காலில் பதினைந்து மில்லி சீழை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . இந்த சிக்கல்களோடு குற்றவியல் பிரிவின் துணைத்தலைவராக குழுவை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது . என்கவுண்டர் சம்பவத்தில் தனது அத்தனை சகாக்களையும் பலி கொடுத்துவிட்டு கோமாவிலிருந்து எழுந்து வருபவரை பலரும் கைதட்டி வரவேற்று பதவி உயர்வு கொடுக்கின்றனர் . அதில் உரையாற்ற சொல்லும்போது , தனது விருதை து