இடுகைகள்

சீனா - விண்வெளி ஆராய்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவில் சீனா!

நிலவின் அறியாத பக்கத்தில் சீனா! நிலவின் அறியாத பக்கத்தில் தெற்குப்புறமாக சீனாவின் சாங்4 விண்கலம் இறங்கியுள்ளதாக சீன ஊடகங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் உள்ளன. ஆனால் இந்த மகிழ்ச்சிகர செய்தியை சீனாவின் சீனா டெய்லி, மற்றும் சிஜிடிஎன் ஊடகங்கள் பகிர்ந்துகொண்டு அதனை அழித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு திடீரென நிலவுப்பயணம்? அதிலுள்ள கனிமங்களைக் குறித்து அறியத்தான். ”சீனா உலகளவில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்துவருவதற்கு சிறந்த சாட்சி இது. சீனாவின் அதிகார வளர்ச்சிக்கு விண்வெளியும் தப்பாது” என புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலியாவின் கொள்கை கழகத்தைச் சேர்ந்த மால்கம் டேவிஸ். அசத்தும் சாதனை என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது நாசா. அமெரிக்கா, ரஷ்யாவின் வழியில் பயணிக்கும் சீனா விரைவில் நிலவுக்கு டைக்னோநட் எனும் தன் நாட்டு விண்வெளி வீரர்களை அனுப்பும் வாய்ப்பு இதன் மூலம் உறுதியாகி உள்ளது. பிறநாடுகளை ராணுவ பலம் மூலமும், கடன்களை கொடுத்து வளைக்கும் சீனா, விரைவில் விண்வெளியிலும் தன் ஆதிக்கத்தை நிறுவ வாய்ப்பு உள்ளது.