சர்வதேசியவாதி நூலில் இருந்து
நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது. ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம். காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...