இடுகைகள்

அருந்ததிராய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

படம்
                நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க . பூர்ணச்சந்திரன் காலச்சுவடு பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள் , நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார் . 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது . படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம் . அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார் . மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது , அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது . அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது . ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோ