இடுகைகள்

கொடுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாஜி கொடுமைகளை உலகறியச் செய்தவர்! - ஹென்ரிக் ராஸ்

படம்
போலந்து புகைப்படக்காரர் ஹென்ரிக் ராஸ் போலந்து நாட்டை நாஜிப்படையினர் ஆக்கிரமித்தனர். ஆண்டு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இப்போரின் விளைவாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு லோட்ஸ் கெட்டோ சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் யூத புகைப்படக்காரரான ஹென்ரிக் ராஸ், லோட்ஸ் கெட்டோ நகரில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சிறைக்கைதிகள் அடையாள அட்டை பணிக்கான புகைப்படங்களை இவரே எடுத்தார். இவர் யூதர் என்ற அடையாளம் தெரிந்தால் தானும் தன் குடும்பமும் சித்திரவதை செய்து கொல்லப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1944 ஆம் ஆண்டு கோடையில் மட்டும் 44 ஆயிரம் மக்கள் நாஜிப்படையின் சித்திரவதை, பட்டினியால் இறந்துபோனார்கள். இவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டும், நச்சு வாயு சேம்பர்களில் அடைக்கப்பட்டும் இறந்தனர். இம்மக்களை பதிவு செய்த ராஸ் உதவியால்தான், அன்று நடந்த ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிந்தது. சிலுவைப்போர்களாலும மக்கள் வதைபட்டு இறந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இனத்தை பழிகூறி அதனை வேட்டையாடி அழித்த சுவடுகள் என்பது ஹிட்லரின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இறுதியில் ரஷ்ய செம்

சிரிய சிறைகளில் என்ன நடக்கிறது தெரியுமா?

படம்
நம்பிக்கை நாயகர்கள்!  - அலி அபு டென் சிறை. இருட்டில் முழ்கிய அறைக்குள் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. அலி அபு டென் அப்போதுதான் தூங்கி எழுந்தார். சிறிது நேரத்தில் காலை உணவுக்கான அழைப்பு வந்தது. ஒரு முட்டையை வேகவைத்து ஐந்து பேர் சாப்பிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கதவுகள் திறக்கப்பட உணவுக்கூடத்திற்கு சக கைதிகளோடு வந்தார். அங்கு கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. சிறைக்காவலர் சோறு, கோழிக்குழம்பில் சிறுநீர் பெய்துகொண்டிருந்தார். தாயோழி என லெபனான் கைதி ஆவேசமாக முன்னேற, அபு உடனே அவரைத் தடுத்தார். உணர்ச்சியை கட்டுப்படுத்தியபோதுதான் அக்கைதி உணர்ந்தார். தான் அப்படி காவலரை சத்தமாக சொன்னால், எலும்புகள் மொத்தமாக நொறுக்கப்படும் என்று. திரைப்படத்தில் ஒரு காட்சி! இது அபுவுக்கு மட்டுமல்ல; சிரியாவில் சிறைப்பட்ட கைதிகள் தினசரி சந்தித்து வந்த கொடுமைகள்தான் அவை. அவற்றை அபு பின்னாளில் திரைப்படமாக்கியபின்தான் அக்கொடூரங்களை உலகம் அறிந்தது. சிறை என்பது தனி உலகம். பெரும்பாலும் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாத அங்கு, உருப்படியான செயல்கள் நடக்கும் என குழந்தை கூட நம்பாத