இடுகைகள்

மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களால் உருவாக்கப்படுவதே உண்மையான நெருக்கடி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் உண்மையான நெருக்கடி ஜே கிருஷ்ணமூர்த்தி காப்புரிமை (ஆங்கில மூலம்) – கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா வரலாறு முழுவதும் பார்த்தால், அதில் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகள் நம்மை ஆச்சரியத்திலும் அதேசமயம் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும்படி அமைந்துள்ளது. பல்வேறு வல்லுநர்கள் கூறிய கணிப்புகள், அறிவுஜீவிகளின் கருத்துகள் என அனைத்தையும் கடந்து   உருவாகும் பல்வேறு மோசமான சூழல்கள் மனிதர்களை ஆதரவில்லாத நிலையில் தள்ளியிருக்கின்றன. நெருக்கடியான நிலை, பொய் ஆகியவற்றுக்கு இடையே வாழ்க்கை அமைந்துள்ளது. நாம், இந்த வாழ்க்கையை வாழவே பெருமளவு ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்கிறோம். ஆனால், வாழ்க்கை பற்றிய உண்மையான தேடல், மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் பற்றி யோசிப்பதில்லை. இப்படி வாழும் வாழ்க்கையால் உலகில் பெரும் நெருக்கடி நேருமா இல்லையா என்பது பற்றி நாம் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. உண்மையில் அப்படி கேள்வி கேட்டால் கூட அந்த சூழ்நிலையை நேரடியாக எதிர்கொள்ள பயப்படுகிறோம். அடுத்து நீங்கள் வாசிக்கப்போவது ஜே கிருஷ்ணமூர்த்தி 1934-1985 வரையிலான காலகட்டத்தில் பேசிய உரை, எழ

சமூகத்தில் தனியாக வாழ்வது சாத்தியமா?

படம்
அகம் புறம்  ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கே.ஒருவர் ஏன் சமூகத்தில் வாழ வேண்டும், அவர் தனியாகவே வாழ முடியுமே? ப. உங்களால் தனியாக வாழ முடியுமா? கே.நான் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரே காரணம், எனது பெற்றோர் இங்கு வாழ்வதுதான்.. ப. உங்களுக்கு வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமைந்தால் நீங்கள் சமூகத்தில் வாழ மாட்டீர்களா? நீங்கள் தனியாக வாழ முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை ஆகியவற்றுக்காக இன்னொருவரை சார்ந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் தனியாக வாழ்ந்துவிடமுடியாது. தனியாக இருப்பது என்பது ஒருவர் இறக்கும்போது மட்டுமே நடக்கும். வாழும்போது வாழ்க்கை என்பது உங்கள் அப்பா, அண்ணன், வணிகர், பிச்சைக்காரர் என யாராவது ஒருவரைச் சார்ந்துதான் அமையும். நீங்கள் இந்த உறவுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்குள் எந்த முரண்பாடும் எழவில்லையென்றால், நீங்கள் தனியாக வாழ்வது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. கே. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த சமூகத்தில் நாம் சுதந்திரமாக இருக்க முடியாதா? ப. நீங்கள் மனிதர்கள் கொள்ளும்

பங்குனி விழாவில் விழி பிதுங்கும் மயிலாப்பூர்!

படம்
  மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித்திருவிழா பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. கபாலீஸ்வரரின் விழாக்களில் பிரபலமானது. பல லட்சம் பேர் வந்து ஊரை இறைவனின் சிலையுருவங்களோடு சுற்றி வருவார்கள். கூடவே பக்தர்களுக்கு தண்ணீர் கலக்கிய மோர், சாச்சி, முக்தி மசாலாக்களால் மணக்கும் தக்காளிச்சோறு என நிறைய  சோறு போடும் வணிக நிறுவனங்கள் வருவார்கள். மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அன்று தங்களை அன்ன தாதாவாக கருதிக்கொண்டு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். பாலகுமாரன் சொல்லுவது போல, இப்படி அன்னம் வழங்குவதும் ஒருவித வேண்டுதல்தான். வயிற்றுப்பசியை  அணைத்து தனது நலம் நாடுவதுதான். புண்ணியம் தேடுவதுதான்.  அன்னதானம் நடந்தபிறகு மத்தள நாராயணன் தெரு, கடைவீதி, கச்சேரி சாலை என அனைத்து இடங்களிலும் சாலை எண்ணெய்யில் நனைந்து கிடக்கும். சோற்று பருக்கைகள், இன்ஸ்டன்ட் சோற்றுத் தட்டுகள், பாக்குத் தட்டைகள் என ஏராளமாக நிரம்பிவிடும். எனக்கு இதைப் பார்ப்பது பிடிக்கும். நகரை பகலிலும் இரவிலும் பார்க்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு வேளையிலும் நகரம் தனித்தன்மையான இயல்பில் இருக்கும். பகலில் பார்க்கும் நகரம் இரவில் காணக்

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று

சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பை கண்டுபிடித்தவர்! - ஜேன் குட்டால்

படம்
  ஜேன் குட்டால் மாணவர்களுக்கான பத்திரிக்கையில் வேலை செய்தாலும் கூட இயற்கை தொடர்பான ஆய்வாளர் ஜேன் குட்டாலை, யார் அவரு, அவ்வளவு ஃபேமஸா என்று கேட்டு விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்கள். எனவே அவரைப் பற்றி பேசிவிடலாம்.  ஜேன் குட்டால் இளமையில்.. யாரு சாமி இவர்?  ஜேன் குட்டால் 1934ஆம் ஆண்டு பிறந்தவர். ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி லண்டனில் ஹாம்செட்டில் பிறந்தவரின் பெற்றோர் தொழிலதிபர் - எழுத்தாளர் என வேறுபட்டவர்கள்.  மனிதர்கள் அல்லாத விலங்குகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்பவர் ஜேன். மேலும் மானுடவியல் ஆய்விலும் பேரார்வம் கொண்டவர். சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான ஆய்வில் இவரே முன்னோடி. ஜேனின் சிறுவயதில் அவரது அப்பா மார்டிமோர் ஹெர்பர்ட், சிம்பன்சி பொம்மையை வாங்கிக்கொடுத்தார். அதன் பெயர் ஜூபிலி. அந்த பொம்மை ஜேனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த நாள் தொடங்கி சிம்பன்சி பற்றிய ஏராளமான விஷயங்ளை தேடி படிக்க த் தொடங்கினார்.  தனது இருபத்தாறு வயதில் தான்சானியில் உள்ள காம்பே ஸ்ட்ரீம் தேசியப் பூங்காவில் சிம்பன்சி ஆய்வில் மூழ்கினார். அறுபது ஆண்டுகள் இந்த ஆய்வை செய்தார். இதில்தான் சிம்பன்சிகளின் தகவல்தொடர்ப

மனிதர்களின் கதையைத்தான் புகைப்படங்கள் மூலம் சொல்ல நினைக்கிறேன்! - டேனியல் பிரைஸ்

படம்
  ஜொனாதன் டேனியல் பிரைஸ் ஃபேஷன் போட்டோகிராபர் புகைப்படக்காரராக மாற எந்த அம்சங்கள் உங்களைத் தூண்டின? சிறுவயதில் புகைப்படம் பற்றிய நிறைய நினைவுகள் இருந்தன. 1970களில் லண்டனில் எனது அம்மா பாடகராக வேலைசெய்துகொண்டிருந்தார். அவரது புகைப்படம்தான் இக்கலை மீதான என் முதல் ஈர்ப்பு. புகைப்படங்களை வைத்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தேன். ஆனால் 17 வயது வரையிலும் அதுபற்றிய தீவிரம் வரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம்களை பயன்படுத்தித்தான் நான் புகைப்படக்கலையைக் கற்றுக்கொண்டேன்.  உங்கள் வேலையை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்? நான் பழைய நினைவுகளில் காதலன். எனது வேலையைப் பார்த்தால் அதனை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளுவீர்கள். ஆண்களை புகைப்படங்களாக எடுக்கும்போது மென்மையான டோன் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தின் வழியாக ஒரு கதையை சொல்ல முயல்கிறேன்.  உங்களது லென்ஸ் வழியாக நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? மனிதர்கள்தான் என்னுடைய ஆர்வமான பொருள். மனிதர்களை புகைப்படம் எடுப்பதன் வழியாகத்தான் அவர்களின் வாழ்கையை நான் அறிய முடியும். இந்த வகையில் தான் மக்களின் மனிதநேயத்தை ந

காடுகள் அழிவதை மக்களுக்கு சொல்லவே படம் எடுத்தேன்! - அமித் வி மஸ்துர்கார்

படம்
                        அமித் வி மஸ்துர்கார் இந்தி திரைப்பட இயக்குநர்     ஒரு இயக்குநராக உங்களை எப்படி வரையறுப்பீர்கள் ? நான் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய இயக்குநர் கிடையாது . நான் திரைப்படம் உருவாகும் முறையை ரசித்து செய்கிறேன் . அதில் அனைத்துமே எனக்கு முக்கியம்தான் . எனக்கு படத்தின் கதைக்கரு பற்றி ஆராய்ச்சி செய்வது பிடிக்கும் . நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் . படத்தின் ஒளிப்பதிவு , இசை , படத்தொகுப்பு ஆகியவற்றை நான் விரும்பியே செய்கிறேன் . ஒரு படத்தை உருவாக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டே உருவாக்க நினைக்கிறேன் . திரைப்படம் என்பது காதலுடன் செய்யப்பட வேண்டியது அவசியம் . நியூட்டன் படத்தை உருவாக்கியபிறகு அடுத்து உடனே படம் செய்ய அழுத்தம் இருந்ததா ? ஆமாம் . நியூட்டன் படம் உருவாக்கி வெளியிட்டபிறகு ஓராண்டுக்குப் பிறகு அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டேன் . நிறைய பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வா்ய்ப்பு கிடைத்தது . ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லை . நா்ன் அடுத்து எடுக்கப்போகும் படம் ஆழமாக இருக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , வ

பருவம் தாண்டியும் பால் குடிக்கும் மனிதர்கள்!

படம்
  பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.  பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும்.  பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது.  1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி விற்பனைக்கு

குடும்பத்தில் ஒன்றாக இணையுங்க ப்ரோ! ஓவர் தி ஹெட்ஜ் 2006

படம்
                ஓவர் தி ஹெட்ஜ் அனிமேஷன்    Director: Tim Johnson, Karey Kirkpatrick Produced by: Bonnie Arnold Screenplay by: Len Blum, Lorne Cameron, David Hoselton, Karey Kirkpatrick     போக்கிரியாக பிறரது உணவைத் திருடி தின்று வாழும் நரி , தனக்கு ஏற்பட்ட வாழ்வா சாவா சூழ்நிலையில் உயிர்பிழைக்க செய்யும் பிரயத்தனங்களே கதை . கதையின் லைன் சின்னதுதான் . நரி கரடிக்கு மக்கள் கொடுத்துள்ள தீனியை திருடுகிறது . போதும்கிற எண்ணம் நரிக்கு வராமல் போக அத்தனை தீனியையும் திருடுகிறது . அதனை கொண்டுபோகும் போது ஏற்பட்ட லாஜிஸ்டிக் பிரச்னையால் கரடி உறக்கம் கலைந்து விழித்துவிட அப்புறம் என்ன சண்டைதான் . இதில் கொள்ளையிட்ட தீனி அனைத்தும் சாலையில் விழுந்து வாகனங்களில் அரைபட்டு நாசமாகிறது . கோபமாகும் கரடி பௌர்ணமி வரை டைம் கொடுத்து ஸ்னாக்ஸை வாங்கித் தரச்சொல்லுகிறது .   அதற்காக நரி அப்பாவி குடும்பம் ஒன்றை பயன்படுத்திக்கொள்கிறது . இதனால் அந்த குடும்பத்திற்கு நேரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை காமெடி , நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள் . தனியாக இருப்பதை விட குடும்பமாக ஒன்றாக சேர

இயற்கைக்கு நெருக்கமாக வாழும் விலங்கு கொயேட்(சிறியவகை ஓநாய்)!

படம்
        coyote       மொபி விலங்குநல ஆர்வலர் ! நீங்கள் விலங்கு நல ஆர்வலராக உள்ளீர்கள் . வீகன் உணவுப்பழக்கத்தையும் பிரசாரம் செய்கிறீர்கள் ஏன் ? எனக்கு ஒன்பது வயதாகும்போது விலங்குகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன் . அவற்றின் வாழிடம் , வாழ்க்கை ஆகியவற்றை நாம் மதிக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , எனது உணவுப்பழக்கத்தை நான் மாற்றிக்கொண்டு வீகனாக மாறினேன் . இயற்கையோடு ஒருவர் எப்படி இணைந்து வாழவேண்டுமென நினைக்கிறேன் ? இன்று காட்டிலிருந்து பல்வேறு வைரஸ்கள் பரவி வருவதாக செய்திகளில் கூறப்படுகின்றன . மனிதர்கள் சுயமாக காடுகளிலுள்ள விலங்குகளை பாதுகாக்க உறுதி எடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது . இனியும் இதில் நாம் கவனமின்றி இருந்தால் , ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் . இதன் பொருள் நாம் காட்டு விலங்குகளோடு நெருங்கி வாழ்ந்தால் பயன்கள் கிடைக்கும் என்பதல்ல . அவைகளுக்கான இடத்தை நாம் பறிக்க கூடாது என்பதுதான் . கொயோட் ( சிறியவகைஓநாய்கள் ) உங்களுக்கு பிடித்துப்போனதான் காரணம் என்ன ? சிறிய வகை ஓநாய்களை லாஸ் ஏஞ்சல்ஸில் நீங்கள் பார்க்கமுடியும் . அவற்றின்

மூளை பற்றி நாம் அறியாத தகவல்கள்! - புத்தகம் புதுசு!

படம்
        புத்தகம் புதுசு ! ஃபாசில் மேன் தி க்வெஸ்ட் ஃபார் தி ஓல்டஸ்ட் ஸ்கெலிடன் அண்ட் தி ஒரிஜின்ஸ் ஆஃப் ஹியூமன்கைண்ட் கெர்மித் பட்டீசன் . மனிதர்கள் எங்கே எப்படி தோன்றினார்கள் , இடம்பெயர்ந்தார்கள் என்று அறிய பலருக்கும் ஆர்வம் உண்டு . அதைப்பற்றிய நூல்தான் இது . இந்த நூலில் ஆசிரியர் உலகிலேயே தொன்மையான மனிதரின் மண்டையோட்டை முன்வைத்து அவர் எங்கு தோன்றினார் என்பதை சுவாரசியமாக விவரிக்கிறார் . செவன் அண்ட் எ ஹாஃப் லெசன்ஸ் அபவுட் தி பிரெய்ன் லிசா ஃபெல்டுமன் பெரட் மூளை பற்றி இல்லாத்தும் பொல்லாததுமாக ஏராளமான கட்டுரைகள் , தகவல்கள் உள்ளன . அவற்றை ஆராய்ந்து ஆசிரியர் எது சரி , எது தவறு என விளக்கியுள்ளார் . நாம் சிந்திப்பது எப்படி , இடது , வலது மூளை பாகங்களின் பங்களிப்பு நம் வளர்ச்சியில் என்பதைப் பற்றிய விவரிப்பு அருமையாக உள்ளது . வாட் டு எக்ஸ்பெக்ட் வென் யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ரோபோட்ஸ் தி ஃப்யூச்சர் ஆஃப் ஹியூமன் ரோபாட் கொலாபரேஷன் லாரா மேஜர் அண்ட் ஜூலி ஷா ரோபோட்டுகள் இப்போது மனிதர்களின் வேலையை பறித்து வருகின்றன . பெருந்தொற்று சூழ்நிலை இதனை வேகப்ப

ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும்!

படம்
            ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும் ! சாகாவரம் என்ற வார்த்தையின் மீது ஆசைப்படாதவர்கள் யார் ? இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் . நோயின்றி இருபது ஆண்டுகள் வாழலாம் என ஒரு மாத்திரையை டிவி சேனலில் விளம்பரம் செய்தால் நொடியில் அவை விற்றுத தீர்ந்துவிடும் . காரணம் , உயிர்வாழும் ஆசைதான் . தற்போது , ஆயுளை நீட்டிப்பதற்கான ஆராய்ச்சியில் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் நாய்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் . பல்லாயிரம் ஆண்டுகளாக நாய் இனம் , நம்முடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன . அவற்றுக்கு வயதாவது மனிதர்களை விட வேகமாக நடக்கிறது . இந்த ஆராய்ச்சி மூலம் அவற்றுக்கும் , மனிதர்களுக்கும் வயதாவது பற்றிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள் . அமெரிக்காவில் நாய்களின் வயது பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது . இதில் 80 ஆயிரம் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன . ” நோய்களை குணப்படுத்துவதற்கு நாம் முயற்சிப்பது நமது ஒட்டுமொத்த ஆயுளைக் குறைத்துவிடுகிறது . புற்றுநோய் , இதயநோய் , ஆகிய நோய்கள் ஏற்பட்டால் ஒருவர் அதிக நாட்கள் வாழ்வது கடினம் . நாம் வயதாவதைத் தடுக்க உடலின் மூ