பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

 


எழுத்தாளர் சஹர் மன்சூர்







தரிபா லிண்டெம்

எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ்


தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார். 

தரிபா லிண்டெம்


இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார். 


யஷாஸ்வினி சந்திரா

எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ்



கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்றுக்கு முன்னதாகவே குதிரை பற்றி ஆராய்ச்சி செய்ய ஐந்து ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். பல்வேறு வேலைகளுக்கு இடையில் நூலை தொடர்ச்சியாக எழுதி இதோ இப்போது வெளியிட்டுவிட்டார். 



குதிரை பற்றி எழுதியதால் நூல் உடனே விற்றுவிடும், வாசகர்கள் வாங்கிவிடுவார்கள் என்றெல்லாம் தான் நினைக்கவில்லை என்பவர், தற்போது இரண்டு நூல்களை எழுதிக்கொண்டு இருக்கிறார். கட்டுரை, நாவல் எழுதுபவர்களுக்கான தேவை இருக்கிறது. உங்களுக்கு பின்னே பதிப்பகம் நின்றால் போதும். உங்கள் நூலை வாசகர்கள் கவனிப்பார்கள். அதற்குமேல் உங்கள் ஐடியா அவர்களுக்கு பிடித்திருந்தால் நூல் விற்கும் என்றார் சந்திரா. 

லிண்ட்ஸே பெரிரா

எழுத்தாளர், பத்திரிகையாளர் 

காட்ஸ் அண்ட் எண்ட்ஸ்


லிண்ட்ஸே பெரிரா




பத்திரிகையாளர், ஆசிரியராக பணியாற்றியுள்ள பெரிரா எழுதியுள்ள முதல் நாவல் இது. இன்று சமூக வலைத்தளங்களில் வாசகர்கள் நூல்களை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். இவர்கள், முன்னர் இருந்ததை விட வெளிப்படையானவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால்தான் பதிப்பகங்கள் கூட புதியவர்களை ஏற்று எழுத வைக்கிறார்கள். நான் எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்விகளைத்தான் நூலாக எழுதினேன் என்கிறார் பெரிரா. 


சஹர் மன்சூர்

எழுத்தாளர்

பேர் நெசசிட்டிஸ் - ஹவ் டு லிவ் எ ஜீரோ வேஸ்ட் லைஃப்

பெங்குவின்ராண்டம் ஹவுஸ்




2017ஆம் ஆண்டு கிடைத்த ஐடியா இது. இதனை இதுதொடர்பான வல்லுநர் டிம் டி ரிட்லர் என்பவருடன் இணைந்து நூலாக எழுதியிருக்கிறார் சஹர். 2019இல் நூலை எழுத தொடங்கினர். ஆஸ்திரேலியாவில் டிம்மும், பெங்களூருவில் சஹரும் வெவ்வேறு நேரத்தில் நூலை எழுத தொடங்கினர். பிறகு ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் நூலைப் பற்றி ஆலோசனை செய்து நூலை நிறைவு செய்துள்ளனர். இப்போது நூல் வெளியாகி வாசகர்களிடையே வெற்றியும் பெற்றுள்ளது. 


பினான்சியல் எக்ஸ்பிரஸ் (இதற்கு முன்னால் பதிவிட்ட பதிவும் கூட..)





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்