சுபாஷ் சந்திரபோஸை எதற்காக நினைவுகூர வேண்டும்?- 125ஆவது பிறந்த தின ஆண்டு

 











2022ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் பிறந்து 125  ஆண்டுகள் ஆகிறது. தேசியத் தலைவராக இவரது பெயர்களை தமிழ்நாட்டில் நிறைய குழந்தைகளுக்கு வைத்துள்ளனர். ஆனால் இதேபோல தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரை வட இந்தியர்கள் வைத்துள்ளார்களா என்றால் மிகவும் குறைவு. இதைப்பற்றி இன்று (20.1.2022) கூட தமிழ் இந்துவில் ஆசை சிறப்பான கட்டுரை எழுதியுள்ளார். 

நாம் வட இந்தியர்கள் அளவுக்கு மத, ஜாதி வெறியர்கள் கிடையாது என்பதால் கொல்கத்தாக்காரரான போஸ் பற்றி எழுதலாம். எழுதியதை படிக்கலாம். நமது மனப்பாங்கு அத்தகையது. 

1897ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ், ஒடிஷாவின் கட்டாக்கில் பிறந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடிய தலைவர்களில் முக்கியமானவர். இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிலும் அங்கம் வகித்தார். சோசலிச கொள்கைகளுக்கு ஏற்ப காங்கிரஸ் அமைப்பில் இருந்து பிரிந்து தனி அமைப்பை உருவாக்கினார். 

1918ஆம் ஆண்டு கொல்கத்தாவில் த த்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்தான் இதற்காக படித்தார். 1916ஆம் ஆண்டு இந்திய கலாசாரம் பற்றி ஆங்கில பேராசிரியர் தவறாக ஏதோ பேசியிருக்கிறார். பிறர் ஒதுங்கிப் போனாலும் போஸ் அதைப்பற்றி யோசிக்கவில்லை. ஆசிரியரை எப்படி அப்படி பேசலாம் உதைத்து உண்மையைப் புரிய வைக்க முயன்றார். அவரின் செயல்பாட்டைப் பார்த்து மிரண்ட பிரசிடென்சி கல்லூரி அவரை படிப்பிலிருந்து நீக்கி கல்லூரியை விட்டு  வெளியேற்றியது. 

1921ஆம் ஆண்டு போஸ் காந்தியை சந்தித்தார். அப்போதே இருவருக்குமான வேறுபாடுகள் வெளியே தெரிய வந்தன. கருத்தியல், பார்வை என இரண்டுமே வேறுபட்ட ஆளுமைகள். ஆனால் இருவரின் லட்சியமும் சுதந்திரப் போராட்டமும், அதிலிருந்து பெறவேண்டிய விடுதலையுமாக இருந்தது. 

1938இல் காங்கிரஸ் கட்சியில் இதுவே பிளவுகளை ஏற்படுத்தியது.  சுயராஜ்யம் என்பதை ராணுவம் மூலம் அழுத்தம் கொடுத்துத்தான் வெல்ல முடியும் என்பதை போஸ் நம்பினார். சுதந்திரத்தை காந்தியின் போராட்டங்களில் வெல்ல முடியும் என்பதில் போஸிற்கு பெரிய நம்பிக்கை இல்லை. 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். போஸின் செயல்பாடுகள், பேச்சு ஆகியவற்றை கவனித்த ஆங்கிலேயர் பீதியானார்கள். எனவே,  போஸை கைது செய்து வீட்டுக்காவலில் அடைத்தனர்.  அங்கிருந்து சாதுரியமாக தப்பியவர், சோவியத் யூனியனுக்கு சென்றார். பிறகு ஜெர்மனிக்கு சென்றார். 

அங்கு நாஜிக்கள் ஜெர்மனியை ஆட்சி செய்துகொண்டிருந்தனர். அவர்கள் இந்திய விடுதலைக்கு உதவுவதாக கூறினர். 1943ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானிய அரசின் உதவியுடன் ஐஎன்ஏ என்ற ராணுவப்படையை உருவாக்கினார். ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற ராணுவம் அவசியம் என்பதை போஸ் உறுதியாக நம்பினார்.   உங்கள் ரத்தத்தைக் கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என்று சொன்னார் போஸ். அதுதான் ஐஎன்ஏவின் முக்கியமான சுலோகன் கூட.  ஜப்பானிய படைகளுடன் இணைந்து ஆங்கிலேயேர் மற்றும் பிற காமன்வெல்த் நாட்டுப் படைகளை எதிர்த்து போரிட்டார். 

இப்போரில் ஐஎன்ஏ படை பேரிழப்பை அடைந்தது. 1945ஆம்ஆண்டு போஸ் தைவானில் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போதும் கூட மன்சூரியா என்ற இடத்தை அடைந்து சோவியத் யூனியனின் உதவியும் ஆதரவும் பெற நினைத்தே விமானத்தில் சென்றார். அதுவே அவரின் இறுதிப்பயணமாக அமைந்துவிட்டது. 

டெல் மீ வொய் கட்டுரையைத் தழுவியது. 








கருத்துகள்