சென்னை புத்தக கண்காட்சி வரலாறு!
pixabay |
1976ஆம் ஆண்டு சென்னையில் முதல்முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள முகல் இ ஆசாம் என்ற பள்ளியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
2022ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக காட்சி 45 ஆவது ஆண்டாக நடைபெறும் புத்தக காட்சி ஆகும். பை பதிப்பகத்தில் கே வி மேத்யூ என்பவரே புத்தக காட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்தக காட் சி இயக்கத்தை சென்னையில் உருவாக்கியவர்.
தொடக்க காலத்தில் தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் இடம்பெறவில்லை. காரணம். இதற்கான கட்டணம்தான். பின்னாளில் தொகை குறைக்கப்பட்டது. பல தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் பங்கேற்றனர்.
இப்போது சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் அறுநூறு கடைகள் தமிழ் பதிப்பகங்களுக்கும் மீதியுள்ளவரை பிற மொழிநூல்களுக்கும் பதிப்பகங்களும் வழங்கப்படுகிறது.
பதிப்பகங்கள் அல்லாத எழுத்தாளர்களும் கூட இங்கே தனி ஸ்டால் போட்டு புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
2021ஆம்ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அப்போது கூட புத்தக காட்சியில் 700 ஸ்டால்கள் இருந்தன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தலைப்பில் நூல்கள் விற்பனையில் இருந்தன.
கடந்த பத்தாண்டுகளில் 12 கோடி முதல் 15 கோடி வரையிலான நூல்கள் விற்றுள்ளதாக பபாசி கூறுகிறது. 2021ஆம் ஆண்டை மட்டும் விட்டு விடுங்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக