இடுகைகள்

மாஃபியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலீஸ் அதிகாரியான தம்பியைக் காப்பாற்ற தன்னை பணயம் வைக்கும் மாஃபியா தலைவன்!

படம்
  பாய்  தெலுங்கு நாகார்ஜூனா, ரிச்சா, சோனு சூட் சிறுவயதில் செய்யாத தவறுக்காக சிறை சென்று பிறகு மாஃபியா தலைவான மாறுபவன் மீண்டும் தனது குடும்பத்தைக் காக்க முயலும் கதை.  பெரிய சிக்கலான கதைக்கரு கிடையாது. வெளிநாட்டில் உள்ள பாய் எனும் நாயகன், ஆந்திராவுக்கு வருகிறான். அவனது மாஃபியா ஆட்களை போலீஸ் அதிகாரி ஒருவர் வேட்டையாடுகிறார். ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அவர்களது ஆட்களைப் பற்றி யாரோ ஒருவர் மறைமுகமாக தகவல்களை அனுப்புகிறார்கள். அந்த கறுப்பு ஆட்டைப் பிடிக்கவே பாயை மாஃபியா தலைவர் அனுப்பி வைக்கிறார். மாஃபியா குழுவில் பாய் செல்வாக்கான ஆள். தலைவருக்கு அடுத்தபடியாக பிறர் மதிக்கும்படியான திறமை கொண்டவர். அடி உதையில் மட்டுமல்ல புத்தியிலும் கூர்மை அதிகம். இதனால், மாஃபியா தலைவருக்கு தனது இரு மகன்களை விட பாயை பிடித்திருக்கிறது. அவரையே அதிகம் புகழ்கிறார்.  பாய், இந்தியா வந்து மாஃபியா குழுவில் இருந்து விலகியவர்களை தேடிப்பிடித்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் அவரைக் காதலிப்பதாக கூறுகிறாள். அவள் நர்சரி ஒன்றை நடத்தி வருகிறாள். பாய், சிலமுறை சிக்கலான நேரத்தில் அவளுக்கு உதவியிருப்பார். அவ்வளவுதான்

மாஃபியா கூட்ட கொலையாளிக்கு கிடைக்கும் காதலும், அதை தக்க வைக்க செய்யும் போராட்டமும்! அந்தம் - ஆர்ஜிவி

படம்
                  அந்தம்  telugu இயக்கம் ஆர்ஜிவி நாகார்ஜூனா, ஊர்மிளா மடோன்கர் ஷெட்டி என்ற மாஃபியா தலைவரின் குழுவில் முக்கியமான ஆள், ராகவ். தலைவர் சொல்லும் ஆட்களை போட்டுத்தள்ளுவதோடு கடத்தல் வேலைகளை செய்து வருகிறான். எதிர்தரப்பில் உள்ள சங்கர் நாராயணன் என்பவரின் கூட்டத்தையே தனியாளாக நின்று அழிக்கிறான் ராகவ். இதனால் காவல்துறையில் உள்ள கிருஷ்ணா என்ற கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், ராகவை கைதுசெய்ய முயல்கிறார். இந்த நேரத்தில் ராகவிற்கு கிருஷ்ணாவின் தங்கை பாவனா மீது காதல் உருவாகிறது. இதன் விளைவுகள் என்னவாயின என்பதே கதை. இதே டெம்பிளேட்டை வைத்து பவன் கல்யாண் நடித்த பஞ்சா என்ற படத்தை விஷ்ணுவர்தன் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் பவன் சற்று ஸ்டைலாக காட்டப்பட்டிருப்பார். மற்றபடிமூலக்கதை அந்தம் என்ற படத்தைப் போலவே இருக்கும். சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கும். நகலை விட்டுவிடுவோம். அசலைப் பார்ப்போம். ராகவ், ஒரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஆனால் ஒருமுறை நகை காணாமல் போக அவனது குடும்பமே காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்க

பிழைப்புக்கு நகரம் வந்து பலே திருடர்களாகும் ரோமியோ ஜூலியட்!

படம்
  பலே தொங்கலு தெலுங்கு தருண், இலியானா இயக்கம் விஜய பாஸ்கர் சிற்றூர்களிலிருந்து ஆண், பெண் (ராம், ஜோதி)என இருவர் ஹைதராபாத்திற்கு ஓடி வருகிறார்கள். இந்த பயணத்தில் அவர்களின் பயணப்பை, ரயில் பயணத்தில் காணாமல் போகிறது. வேறுவழியில்லாமல் தங்களை ஏமாற்றிய நகரத்தை அவர்களும் திருடர்களாக மாறி ஏமாற்றுகிறார்கள். இந்த திருட்டுகளின் விளைவாக போதை மாஃபியா தலைவர், போலீஸ் என இரண்டுபக்கமும் வேட்டை தொடங்க காதல் ஜோடியின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை. தருண் (ராம்), ஆபீஸ் வேலைக்கு அப்பா சேர்த்துவிட முயல்கிறார். ஆனால் அவருக்கு 9 டு 5 என்ற வேலை பிடிக்கவில்லை. ஏதாவது வணிகம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அதில் என்ன செய்வது என்று அவரது அப்பாவிற்கு கூறத்தெரியவில்லை. எனவே, வீட்டிலிருந்து தப்பி நகரத்திற்கு வந்து ஏதாவது செய்ய நினைக்கிறார். இன்னொருபக்கம், ஜோதி எனும் இலியானா, இவருக்கு விளம்பர மாடல் ஆசை.வீட்டில் பாட்டி கல்யாணம் செய்து வைக்க முயல்கிறார்கள். எனவே அவர் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஹைதராபாத்திற்கு வருகிறார். இப்படிப்பட்ட குணாம்சம் கொண்ட இருவரும் ரயிலில் சந்திக்கிறார்கள். அங்கு

மாஃபியா உதவியுடன் குற்றவழக்குகளை ஆராயும் கேம்பிரிட்ஜ் பட்டதாரி!

படம்
  மை ரூம்மேட் இஸ் டிடெக்டிவ் சி டிராமா ராக்குட்டன் விக்கி 36 எபிசோடுகள் பார்க்க நன்றாகவே இருக்கின்றன. தலைப்பு சற்று பொருந்தி வரவில்லை. கொரிய டிராமாக்களைப் பார்த்து இப்படி தலைப்பு வைப்பார்கள் போல. லூ யாவோ என்பவரைத் தேடி காவல்துறை நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். தூங்கி எழுந்தவர், ஐயையோ என தப்பி ஓடுகிறார். ஆனால் எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சியோவோ, லூவின் மூக்கில் குத்தி அவரை லாக்கப்ப்பிற்கு அழைத்து செல்கிறார். வழக்கு இதுதான். அவர் தொழிலதிபர் ஒருவரை கொன்றிருக்கிறார் என காவல்துறை சந்தேகப்படுகிறது. முன்தினம் நடந்த விருந்தில், லூ கடன் கொடுத்த தொழிலதிபரை திட்டியது   அனைவருக்கும் தெரிந்த செய்தியாகிவிடுகிறது. எனவே, காவல்துறை லூவை முக்கிய குற்றவாளியாக கருதுகிறது. லூ, சாசோன் என்ற வெளிநாட்டு வங்கியில் பணியாற்றுகிறார். தனது மீதுள்ள குற்றத்தை அவரே துடைப்பதோடு குற்றவாளியையும் கண்டுபிடித்து கொடுக்கிறார். அதிலிருந்து இன்ஸ்பெக்ட்ர் சியோவோ, ஆலோசகர் லூ யாவோ, பத்திரிகையாளர் பாய் யூனிங் ஆகிய மூவரும் கூட்டணி போட்டு குற்றங்களை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற லூ, வாடகை

மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

படம்
  மிஸ்டீரியஸ் லவ் (2021) சீன டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.   ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது. பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.

மாஃபியாவை சட்டப்பூர்வமாக மாற்றும் அநீதியின் காவலன்! பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு

படம்
  பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு, காஜல், நாசர் பிஸ்னஸ்மேன் -தெலுங்கு அடடா... அப்பப்பா பாத்திரங்கள் - Character Sketch பிஸினஸ்மேன் சூர்யா பாய் (மகேஷ் பாபு) தெலுங்கு இயக்குநர் – பூரி ஜெகன்னாத்   சாதாரண ஆள், ஆந்திராவிலிருந்து மும்பைக்கு சென்று பெத்த மாஃபியா டான் ஆகும் கதை. அதற்கான காரண காரியங்களை இயக்குநர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள். அதெல்லாம் தாண்டி நாயக பாத்திரம் எந்தளவு உறுதியாக உள்ளது, என்னென்ன விதமான வலிகளைப் பொறுக்கிறது என்பதே,  படத்தைப் பார்ப்பவர்கள் எந்த வயதாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்க்க வைக்கிறது. பேச வைக்கிறது. ‘’குற்றவாளி கிடையாது. ஆனால் குற்றவாளி போல யோசிப்பவன்” என மும்பை கமிஷனர் அஜய் கோபத்துடன் கூறும் அளவுக்கு சூர்யா அநீதியின் தலைவனாக வேலை பார்க்கிறான். கமிஷனர் அஜய் பரத்வாஜ், ‘’இனி மும்பையில் இனி எந்த டானும் இல்லை’’ என பிரஸ் கிளப்பில் கூட்டம் வைத்து பேசியபிறகுதான், மும்பைக்கு ரயிலில் வந்து இறங்குகிறான் சூர்யா. காட்சி ரீதியாகவே அவர் சொன்னதை உடைப்பதற்குத்தான் நாயகன் வருகிறான். பூரி ஜெகன்னாத்தின் ஆக்ரோஷ ஹீரோக்களில் இன்றும் ரசிக்க வைக்கும் விதமாக இருக்கும்

15 வயது சிறுமியைக் காக்க மாஃபியா குழுக்களோடு போராடும் அடியாள்! தி என்ஃபோர்சர்

படம்
  தி என்ஃபோர்சர் 2022 மாஃபியா கும்பலில் வேலை செய்யும் அடியாள், அதற்கு எதிராக திரும்பினால் என்னாகும்…. படத்தின் கதையில் புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஏராளமான படங்களில் பார்த்த கதைதான். அண்டானியோ பண்டாரஸ் நடித்திருக்கிறார் என்பதே படம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம். பாராகுடா என்ற கூலிப்படை ஆளாக நடித்திருக்கிறார். கொலை, வெட்டுக்குத்து, மிரட்டல் வேலைகளை செய்து வருபவர் பாராகுடா. இவர் மனைவி ஓவியக்கண்காட்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகள் பள்ளி ஒன்றில் படிக்கிறாள். ஆனால் இவர்கள் யாருக்கும் பாராகுடா செய்யும் பாவ வேலை பிடிக்கவில்லை. ஆனால் பாராகுடா அதைவிட்டு வெளியே வரமுடியாத சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் ரிக்கி என்ற தெருச்சண்டை போடும் இளைஞரை சந்திக்கிறார். அதாவது, பாராகுடாவின் பெண் முதலாளி புதிய அடியாளை தனது நிறுவனத்திற்கு கொண்டு வர நினைக்கிறார். இதற்காக தெருச்சண்டை போடும் ரிக்கியை த் தேர்ந்தெடுக்கிறார். இவர், அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா, பாராகுடாவின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவானது என்பதே கதை. படத்தில் வன்முறையை விட மனிதர்களுக்கு இடையிலான பாச, நட்பு உணர்வுகளுக்கே இயக்குநர் ம