இடுகைகள்

சாட்ஜிபிடி 4 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்கு அவ்வளவுதான்.  அறி