இடுகைகள்

தகராறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரச்னைகளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் வாங்க! யொஹான் கால்டுங்கின் 'தகராறு'

படம்
  தகராறு யொஹான் கால்டுங் தமிழில் சுப உதயகுமாரன் விகடன் பிரசுரம் அணு உலைக்கு எதிராக போராடிய போராளியான சுப உதயகுமாரன்தான் நூலை அனுமதி பெற்று மொழிபெயர்த்திருக்கிறார். நூலை எழுதியவர் வேறு யாருமல்ல, அவரின் குருநாதர்தான். தந்தி போன்ற சுருக்கமான மொழியை தனக்கு புரிந்தவகையில் விளக்கியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  தகராறு என்பது என்ன, அதை எப்படி தீர்ப்பது, இதுபற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவது எப்படி, அங்கு நாற்காலிகள், மேசைகள், அலங்காரம் எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பது வரை நூலில் விளக்கமாக பேசப்படுகிறது. கூடுதலாக, எந்தெந்த உலக நாடுகளில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன, அதில் தீர்வு எப்படி கிடைத்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என நிறைய விஷயங்களை கால்டுங் விளக்கி உள்ளார்.  கால்டுங், அமைதி பேச்சுவார்த்தைக்காக பல்வேறு அரசு அமைப்புகளில் இடம்பிடித்த அறிவாளி. ட்ரான்ஸ்சென்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நூலில் மூல நூல் ஆசிரியரின் பகுதிகள் முடிந்தபிறகும் கூட சுப உதயகுமாரன் திருக்குறள் பகுதியை இணைத்துள்ளார். அதுவும் வாசிக்க நன்றாகவே இருக்கிறத