இடுகைகள்

வான் இயற்பியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியலுக்கு அங்கீகாரம் அளிக்கும் பிரெட் காவ்லி பரிசு! - 2024ஆம் ஆண்டு எட்டு நபர்கள் தேர்வு

படம்
                  பிரெட் காவ்லி பரிசு - எட்டு நபர்கள் தேர்வு  fred kavli prize பிரெட் காவ்லி என்ற நார்வே - அமெரிக்க தொழிலதிபரின் நினைவாக பிரெட் காவ்லி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நார்வேயில் 1927ஆம் ஆண்டு எரெஜ்போர்ட் என்ற இடத்தில் பிறந்தவர் பிரெட். 1956ஆம் ஆண்டு, பொறியியல் பட்டம் பெற்றபிறகு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தார்.  ஏவுகணைகளுக்கு சிப், சென்சார்களை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தார். ஓராண்டில் அங்கு தலைமை பொறியாளராக உயர்ந்து சாதித்தார். 1958ஆம் ஆண்டு, காவ்லிகோ என்ற பெயரில தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இதன் வழியாக விமானம் தொடங்கி வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனங்கள் வரையிலான பொருட்களுக்கு அழுத்த சென்சார்களை தயாரித்து விற்றார். பிரெட்டின் நிறுவனம் தயாரித்த சென்சார்கள், துல்லியமானவை, நிலையானவை, நம்பிக்கையானவை என்ற பெயரைப் பெற்றன. 2000ஆம் ஆண்டில் பிரெட், காவ்லிகோ நிறுவனத்தை 340 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார். கிடைத்த பணத்தை வைத்து காவ்லி பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி, உலகம் முழுக்க மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஆராய்ச்சிகளுக்கு உதவிகளை வழங்கத் தொடங