இடுகைகள்

சுதீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பகடிக்கலைஞர்- கேரள கார்ட்டூனிஸ்ட் சுதீர் நாத்

படம்
கேரளத்திலுள்ள திரிக்காகரா எனும் கிராமத்தில் பிறந்த சிறுவனுக்கு  வரைவது என்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அதற்கான தூண்டுதல் வேண்டுமே? 1986 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள கேலிச்சித்திரக் கலைஞர் நாதம் உரையாற்றியதைக் கேட்டதும் சிறுவன் மனதில் இத்துறைதான் தனது எதிர்காலம் என்பது முடிவாகத் தோன்றியது. நாதன்,  முதல்வர் கே.கருணாகரன் வரைந்த கேலிச்சித்திரத்தை எடுத்துச்சென்று அவரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். அதனை தன் வகுப்பில் காட்டி பெருமை கொண்டார். ஆனால் வகுப்பில் அச்சிறுவனே அதனை வரைந்ததாக நினைத்துக்கொண்டு பாராட்டினர். சரியோ தவறோ அந்த பாராட்டு அவரை நிறைய வரைய வைத்தது. இன்று சுதீர் நாத், நிறைய கேலிச்சித்திரங்களை வரைவதோடு அதனைப் பற்றி பிறருக்கு வகுப்புகள் எடுக்கிறார். அடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுகிறார். சுதீர் நாத் என்று பெயரும் புகழும் பெற்றவருக்கு பதினைந்து வயதானபோது, அவரின் அம்மா, அவரை கார்ட்டூனிஸ்டான யேசுதாசனிடம் அழைத்துச்சென்றார். அவர்தான் சுதீருக்கு அனைத்து அடிப்படை விஷயங்களையும் கற்பித்தார். 1987 ஆம் ஆண்டு சுதீர் வரைந்த அரசுக்கு எதிரான கார்ட்டூன்கள் மாநிலமெங்க