பழங்குடி மாணவன், தன் இன முன்னேற்றத்திற்காக படிக்க வந்து காதலில் வீழ்ந்து பின் வெல்லும் கதை!
விஜயம் ராஜா, கஜாலா சிங்கீதம் சீனிவாச ராவ் இசை ஶ்ரீலேகா பழங்குடி மாணவன் கல்லூரி தேர்வில் தங்கப்பதக்கம் வாங்க நினைத்து படித்து, பிறகு காதலில் விழுந்து அதில் இருந்து மீண்டெழுவதே கதை. சுரேஷ் பாபு தயாரித்துள்ள படம். ஆனால், மிகவும் வணிகமாக இருக்கிறது. படத்தில் ஒரே ஆறுதல், பழங்குடிகளின் உரிமைக்காக போராடுபவராக வரும் பாத்திரம் மட்டுமே. அப்பாத்திரம் மட்டுமே, மூடநம்பிக்கையை ஒழித்து பழங்குடி இனத்தை முன்னேற்ற வேண்டும் என நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக பிடித்து நிற்கிறது. நாயகன் ராஜூ, நாயகி, நாயகனின் நண்பர்கள் பாத்திரம் என அனைத்துமே ஒருகட்டத்தில் நகைச்சுவை, பாடல்கள், சுயநலமான எண்ணம் என மாறிவிடுகின்றன. படத்தில் வரும் கஜாலா பாத்திரம் லூசு நாயகிக்கான அத்தனை அம்சங்களைக் கொண்டது. அதை சற்று மாறுபட்டதாக அமைத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கலாம். இயல்பான கதாபாத்திரங்கள் அமையவே கூடாது என இயக்குநர் முடிவெடுத்தபிறகு ஏதும் சரியாக அமையவில்லை. கடைத்தெருவில் தொப்புள் தெரிய நாயகி உடையணிந்துகொண்டு சித்து பாத்திரத்தோடு வருவது, அதேநேரம் தற்செயலாக நாயகன் ராஜூ வந்து நாயகியை குழாய் ஒன்றில் காப்பாற்...