இறப்பை ஏற்படுத்தும் பாக்டீரிய நச்சு!

 

 

 

 







அறிவியலால் வெல்வோம்
மிஸ்டர் ரோனி

உணவில் நச்சுத்தன்மை எப்படி ஏற்படுகிறது?

உங்களின் ஜென்ம எதிரிகள் மதிய சோறு வாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டு சோற்றில் விஷம் வைக்கலாம். எனவே, உங்களின் நண்பர் என்ற போர்வையில் யார் அழைத்தாலும், அவர்களுக்கு நீங்கள் செய்த செயல்களை நன்றாக நினைத்துப் பாருங்கள். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை, அவமானத்தை, உயிரபாயத்தை சந்திக்க நேரும். இது தெரிந்து ஏற்படுவது. தெரியாமல் பல்வேறு எதிரெதிர் உணவுப்பொருட்களை உணவில் தாறுமாறாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. இது வயிற்றுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும். நிலப்பரப்பு சார்ந்து உணவுகள் மாறும். அதற்கேற்ப நீங்களும் மாறிக்கொள்ளவேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே வகையான உணவு என்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
தெரியாமல் உணவில் நச்சுத்தன்மை சேர்வது குழந்தைகள் வளருகிற வீட்டில் ஏற்படுகிற விபத்து. இதற்கு கவனமாக விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி.

இயற்கையில் இறப்பை ஏற்படுத்தும் வகையிலான நச்சு எது?

பாட்டுலினல் என்ற நச்சு, குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த நச்சு உடலில் பரவும்போது, தசைகள் நலிவடைகின்றன. உடல் உறுப்புகள் மெல்ல செயலற்றுப்போகின்றன. கண் பார்வை மங்குகிறது, பேச்சு வராது, மயக்கம் நேரும். மூச்சு விடுவதற்கு உதவும் தசைகள் செயலிழக்கும்போது மரணம் நேரிடுகிறது. பாட்டுலிசம் என்ற அழைக்கப்படும் நச்சு மரணம் இருபத்தைந்து சதவீதம் பேருக்கு நேரிடுகிறது.
குளோஸ்டிரியம் பாக்டீரியா, ஆக்சிஜன் இல்லாத இடத்தில் வேகமாக வளருகிறது. அமிலத்தன்மை குறைந்த உணவுப்பொருட்களில் எப்போதும் இருக்கிறது. எனவே, காற்று புகாதவாறு அடைக்கப்பட்ட இறைச்சி, காய்கறி புட்டிகளை கடைகளில் வாங்கினால் அவற்றை நன்றாக சூடு செய்து பயன்படுத்தவேண்டும். காளான், வேர்க்கடலை, சோளம், பீன்ஸ் ஆகிய காய்கறிகளில் குளோஸ்டிரியம் உள்ளது. எனவே, இவற்றைக் கவனமாக வேகவைத்து உண்ண வேண்டும். இக்காய்கறிகள் அதிக அமிலத்தன்மை இல்லாதவை.

குளோஸ்டிரியம் பாக்டீரியாவால் ஏற்பட்ட தசை நலிவை சரிசெய்ய, அதன் நச்சையே சிறிதளவு பயன்படுத்துகிறார்கள். ஸ்ட்ராபிஸ்மஸ், பிளெபாரோஸ்பாசம், ஹெமிஃபேசியல் ஸ்பாசம் ஆகிய நோய்களுக்கு பாக்டீரிய நச்சு மருந்தாக பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதித்துள்ளது.

தென் அமெரிக்க இந்தியர்கள் எதிரிகளை கொல்ல பயன்படுத்திய நச்சு என்னென்ன?

ஆயுகாஸ் மற்றும் பிற பழங்குடி இனத்தவர்கள் தங்களின் அம்புகளில் பிசுபிசுப்பு கொண்ட தாவர நச்சை பயன்படுத்தி எதிரிகளை, விலங்குகளை வேட்டையாடினர். இதற்கு கான்டோடென்ட்ரான் டோமென்டோசம், ஸ்ட்ரைகோனோஸ் குயான்னென்சிஸ் ஆகிய கொடிகளில் இருந்த நச்சைப் பயன்படுத்தினர்.

மனிதர்களைக் கொல்லும் காளான்களில் முக்கியமானது எது?

அமனிட்டா பாலோய்டெஸ் என்ற காளான் குடும்பம், மனிதர்களைக் கொல்லும் நச்சுத்தன்மை கொண்டது. இறப்பு சதவீதம் 50 சதவீதம். ஆண்டுக்கு நூறுபேர் பாதிக்கப்பட்டால், அதில் தொண்ணூறு பேர் அமனிட்டா காளானால் பாதிக்கப்பட்டிருந்தனர் என மருத்துவ ஆய்வாளர்கள் தகவல் கூறினர்.

தேனீ கொட்டினால் அதற்கு உடனடி சிகிச்சை என்ன?


தோளில் பதிந்துள்ள கொடுக்கை முதல் வேலையாக வெளியே எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஒவ்வாமை இருந்தால் உடனே அவர் மருத்துவமனைக்கு செல்லவேண்டும். கொடுக்கை நீக்கியபிறகு, மற்றபடி ஆஸ்பிரினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் போதும். வலி, எரிச்சல் கட்டுப்படும்.
ஆஸ்பிரின், இபுபுரோஃபேன், அசிடாமைனோபென் ஆகிய வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்தலாம்.

#bee stings #amanita phallooids #fatality #mushroom #chondodendron tomentosum #strychonos quianensis #poisoning #common cause #natural toxin # clostridium botulinum #mortality
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்