பங்கு முறைகேட்டை விசாரிக்க வேண்டிய செபியின் தலைவரே குற்றவாளியானால்... ஹிண்டென்பர்க் அறிக்கை 2024

 

 


 

 


ஐபிஇ பிளஸ் பண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரியின் பெயர் அனில் அகுஜா. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகள் தலைவராக பணியாற்றியுள்ளார். பணி விலகிய ஆண்டு, 2017. அதானி பவர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். செபியின் தற்போதைய தலைவரான மாதபி புச், அவரின் கணவர் ஆகியோர், அதானியின் வெளிநாட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

அதானி, முறைகேடான பங்கு வர்த்தகத்தை செபியின் விசாரணை, தண்டனை பற்றிய பயமின்றி எப்படி செய்கிறார் என ஹிண்டென்பர்க் நிறுவனம் யோசித்தது. அதானி குழுமத்தில், செபி தலைவரான மாதபி புச்சின் பங்கு முதலீடு பற்றி தெரிய வந்ததும் விவகாரத்தை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

பெர்முடா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள வினோத் அதானியின் போலி நிறுவனங்களில் செபியின் தலைவரான மாதபி புச், அவரின் கணவர் தாவல் புச் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் ஹிண்டென்பர்க் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை.  

2015ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி, சிங்கப்பூரில் ஐபிஇ பிளஸ் பண்டில் புச் தம்பதியினர் செய்த முதலீடு பற்றிய தகவல் தெரியவந்தது. பங்கு முதலீட்டிற்கான நிதி ஆதாரம், சம்பளம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் மொத்த சொத்து மதிப்பு, பத்து மில்லியன் டாலர்கள். ஐஐஎப்எல் இதைப்பற்றி தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மாதபி புச் செபி அமைப்பில் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என அவரின் லிங்க்டுஇன் கணக்கு தகவல் தருகிறது. 2017ஆம்ஆண்டு, மார்ச்மாதம் 22ஆம் தேதி, மாதபியின் கணவர் தாவல், மொரிஷியசில் உள்ள முதலீடுகள் பற்றி அதை நிர்வாகம் செய்யும் டிரிடென்ட் டிரஸ்ட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதம், மாதபி செபியில் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக எழுதப்பட்டது. அது, குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் பண்டில் (“GDOF”) டாவல், அவரது மனைவி செய்த முதலீடு தொடர்பானது.
2018ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம்தேதி, மாதபியின் தனிப்பட்ட மின்னஞ்சலில், ஜிடிஓஎப் நிறுவனத்தின் அமைப்பு பற்றிய தகவல் உள்ளது. அதில், ஜிடிஓஎப் செல் 90 என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, முன்னர் கூறியதுபோலவே மொரிஷியசில் உள்ள முதலீட்டு நிதியைப் பற்றியதுதான். வினோத் அதானி உருவாக்கிய சிக்கலான குழப்பபான நிதி அமைப்பு கொண்ட போலி நிறுவனங்களில்தான் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் மாதபியின் மொத்த பங்கு மதிப்பு 872,762.25 டாலர்களாக இருந்தது. பின்னர், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி, முழுநேர செபி உறுப்பினராக நியமிக்கப்பட்டபிறகு, தனது ஜிமெயில் கணக்கிலிருந்து இந்தியா இன்போலைனுக்கு மின்னஞ்சல் ஒன்றை மாதபி எழுதி அனுப்பினார். அதில், வணிகத்தை தனது கணவர் பெயர் மூலம் செய்ய கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றம், அதானி குழும விசாரணையில் செபி முறைகேடு எதையும் கூறவில்லை என்று தகவல் கூறியிருந்தது. வெளிநாட்டில் போலி நிறுவனங்களை தொடங்கி பங்கு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை செபி பிடிக்கவேண்டுமெனில், அதன் தலைவரான மாதபி தன்னையே முதலில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும். செபியின் தலைவரே அதானி குழும நிறுவன மோசடியில் தொடர்புடையதாக இருப்பதால், அந்த அமைப்பு, முறையாக விசாரணையில் ஈடுபடாமல் இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்