பெண்கள் வாசிப்பது என்பது முக்கியமான அரசியல் செயல்பாடு! - ஆகிருதி மந்த்வாணி

 

 

 

 

 

 

 




 

நேர்காணல்
எழுத்தாளர், ஆய்வாளர் ஆகிருதி மந்த்வாணி

இலக்கியம் அல்லது க்ரைம் சார்ந்த நூல்கள் அல்லாமல் நடுநிலை இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பியது ஏன்?

இந்தி கிரைம் எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதக் நூல்களைப் பற்றித்தான் முதலில் ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படித்தான்ஆராய்ச்சியும் தொடங்கியது. அவரது நூல்கள் வாசிக்க நன்றாக இருக்கும். விலையும் கூட அதிகம். ஆனால், அவரது நூல்களை வாசிக்கிறேன் என்று யாரும் தைரியமாக கூற மாட்டார்கள். மறைத்து வைத்து படிப்பார்கள். இப்போது அதை வெளியில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தி மொழி இதழ்களை பற்றி பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேசியமொழி இந்தி என்ற அடிப்படையில் உருவானது. தேசியவாத கண்ணோட்டம் கடந்த நடுநிலை இதழ்களை, பொதுஅறிவு தகவல்களை வழங்கும் வார, மாத இதழ்களை மக்கள் வாசித்துள்ளனர். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வாசிப்பார்கள். எனவே, நான் இடைநிலை இதழ்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது சரியென தோன்றியது.

இடைநிலை இதழ்களின் வெளியீடு, அவற்றை வாசித்த பெண் வாசகர்களைப் பற்றி விரிவாக கூறுங்கள்.

இதழ்களுக்கு பங்களித்த, அவற்றை வாங்கிப்படித்த பெண்களைப்பற்றித்தான் நான் ஆர்வம் கொண்டேன். சுதந்திரத்திற்கு முந்தைய இதழ்கள், பெண்கள் என்றால் ஆண்களுக்கு, குடும்பத்திற்கு வேலைகளை சேவையாக கருதி செய்யவேண்டும் என்ற கருத்தில் வெளியாயின. தனக்காகவோ, நாட்டுக்காகவே பணியாற்றுவது பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை. இதுபோன்ற இதழ்களில் பெண்களில் கதைகளை, பயண கட்டுரைகளை எழுதினர். அழகு குறிப்புகளை பகிர்ந்தனர். இதழ்களின் பரவலான வெற்றிக்கு இந்திய அஞ்சல்துறை வலுவாக இருந்தது முக்கியமான காரணம். இதனால் நிறைய இதழ்களை பெண்கள் வாசிக்க முடிந்தது.

சரிதா இதழ் 1945ஆம் ஆண்டும், தர்மயுகம் இதழ் 1949ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது. இரு இதழ்களிலும் தேசியவாத போக்கு இல்லாத தன்மை உங்களை ஆச்சரியப்படுத்தியதா?

குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள விஷயங்களில் வரலாற்று ஆய்வாளர்கள், தங்கள் எதிர்பார்ப்பை திணிக்க கூடாது. தனிப்பட்ட வகையில் இரு இதழ்களிலும் தேசியவாத உணர்வு இல்லாதது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், இந்த இயல்பு வாசகர்களை அந்தளவு ஈர்த்திருக்குமா என்று தெரியவில்லை. 1950களில் நேருவின் கொள்கைகள், அதற்கு எதிர்மறையாக இந்துத்துவ இயக்கங்களின் கொள்கைகளைப் பற்றி பேசி வந்தனர். சில வாசகர்களுக்கு, இதழ் தன்னை நேரு அல்லது இந்து அமைப்புகளின் கருத்தியல் என கூறாமல் இருப்பது பிடித்திருக்காது. சரிதா இதழில் சமஸ்கிருதமயமான இந்தி பயன்படுத்தப்பட்டது. மற்றபடி இந்தி மொழியை விரும்புபவர்கள் இதழை விருப்பமாக வாசித்திருப்பார்கள்.

எக்ஸ் தளத்தில் பெண்கள் நூல்களை வாசித்துக்கொண்டிருப்பதை புகைப்படங்களாக பதிவிட்டிருக்கிறீர்கள். இந்த முயற்சி எப்படி தொடங்கியது?

பெண்கள் வாசிப்பது பற்றிய விரக்தி எனக்கு இருந்தது. அதன் வெளிப்பாடாக எனது நண்பர்களோடு ஆராய்ச்சி செய்து பெண்கள் படிப்பதைப் பற்றி புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனது பாட்டி நூல்களை வாசிப்பது பற்றிய புகைப்படத்தைக் கூட தேடிவந்தேன். அப்போதுதான் வரலாற்று ஆய்வாளர் தேவ்யானி வழியாக நடிகை மீனாகுமாரி நூல் வாசிக்கும் புகைப்படம் கிடைத்தது. இணையதளத்தில் பெண்கள் வாசிப்பதை பகிர்வதன் வழியாக, அவர்களுக்கு நூல்களை வாசிக்கும் உரிமை உள்ளது என்பதை பதிய வைக்கமுடியும் என்பதை நம்புகிறேன். நவீன காலத்தில் பெண்கள் வாசிப்பது கூட ஆழமான அரசியல் செயல்பாடாக மாறியுள்ளது.


ஸ்ருதி சோனல்
டைம்ஸ் ஆப் இந்தியா

#aakiriti madhwani #sarita #dharmyug #women #reading #non jingoism #hypernationalism #book #magazine #journals #print #literary reading #hindi periodivals #middlebrow

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்