இடுகைகள்

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் மின்னூல் வெளியீடு - தரவிறக்க முகவரி

படம்
இனிய உறவுகளுக்கு, கொரோனா பாதிப்புக்கு நிறுவனங்கள் தரும் நிதியை மத்திய அரசு பிரதமரின் நிதித்திட்டத்திற்கு அனுப்பக் கோரியுள்ளது. இதன்வாயிலாக, அனுப்பும் நிதியை சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் வரவு வைப்பதாக அரசு கூறியுள்ளது. இதனால் மாநில அரசுக்கான நிதித்திட்டத்திற்கு நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது சிஎஸ்ஆர் எனும் சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி. அத்திட்டத்தை எம்முறையில் செய்யலாம், அதிலுள்ள வகைகள், இத்திட்டத்தின் நோக்கம் என்ன, திட்டத்திற்கு செலவு செய்வதன் மூலமாக நிறுவனங்கள் எப்படி வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளன, கால ஓட்டத்தில் தம்மை எப்படி தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன என்பதை பற்றிய விவரிக்கிறது சமூக பொறுப்புணர்வுத் திட்டம் எனும் மின்னூல். சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி ஆங்கிலத்தில் ஒரு டஜனுக்கும் மேலான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்த எண்ணிக்கை குறைவு. இந்த மின்னூல் எளிமையான முறையில் சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி விளக்குகிறது. அதனை பயன்படுத்தி வணிகத்தை எப்படி மேம்படுத்துவது என்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. சமூக பொ

சிஎஸ்ஆர்: கடைபிடிக்கவேண்டிய வெற்றி விதிகள்

படம்
glocal thinking 9 வெற்றி விதிகள் இந்தியாவில் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான நிதியை தேசியப் பேரிடர் பிரச்னைகளுக்கும் வழங்கலாம் என அறிவித்திருக்கிறது . இந்திய அரசு . இதனால் பல்வேறு பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்கு தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியை வழங்க உள்ளன . இம்முறை வணிகம் பாதிப்பு , பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஊழியர்களுக்கு முழு சம்பளம் தருவதே சிக்கலாக உள்ள நிலைமை . இதில் பொதுமக்களுக்கான செலவுகள் என்பதை நிறுவனங்கள் கடைசியாகத்தான் யோசிப்பார்கள் . சில தன்னார்வலர்கள் , கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி , பருப்பு , சோப்பு என அவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர் . சமூக பொறுப்புணர்வுத் திட்டம் என்பது காகிதத்தில் இருப்பதோடு , நடைமுறையிலும் வருவது முக்கியம் . ஆனால் பெரும்பாலும் அதில் நிறைய நிறுவனங்கள் சொதப்பிவிடுகின்றன . காரணம் , சமூகப் பிரச்னைகளை எப்படி தேர்ந்தெடுப்பது , அதில் கவனம் குவிப்பது சார்ந்த சந்தேகங்கள்தான் . அதற்கு சில உதாரணங்களையும் விதிகளையும் இங்கே பார்ப்போம் . சமூக பிரச்னைகளை தேர்ந்தெடுங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த

சிஎஸ்ஆர்: சமூக பிரச்னைகளுக்கான பிரசாரம்

படம்
optimy wiki 5 சமூகப் பிரச்னைகளுக்கான பிரசாரம் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவையை அல்லதுத பொருட்களை தயாரித்து வழங்கும் பணியை செய்துவருகின்றன . சமூகப் பிரச்னைக்கு அந்நிறுவனம் முன்னின்று பிரசாரத்தை முன்னெடுக்கும்போது அது நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதாக இருக்கவேண்டும் . ஆனால் நிறுவனத்தின் பொருட்களை அங்கே விளம்பரம் செய்யக்கூடாது . அது தவறான அணுகுமுறை . உதாரணத்திற்கு நகரங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள இளம் வயதினர் , இரவு உணவின்றி உறங்கச்செல்லுகின்றனர் என்பது சமூகப் பிரச்னை . இப்பிரச்னை சார்ந்து பிரசாரம் , விளம்பரங்கள் அமையவேண்டும் . இதில் இணைந்துகொள்ளும் நிறுவனங்களை விளம்பர பதாகையில் குறிப்பிடலாம் . நேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதியை ஏற்கலாம் . மக்களிடம் இதற்கான விழிப்புணர்வுக்காக அவர்களிடம் மனுக்களை சமூக வலைத்தளங்களில் , மின்னஞ்சலில் அனுப்பச் செய்யலாம் . அவ்வளவே இதில் செய்யமுடியும் . இதிலுள்ள அம்சங்களை பார்ப்போம் . விழிப்புணர்வு முக்கியம் குறிப்பிட்ட வழித்தடத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன . அதற்கு காரணம் , அங்கு வே