இடுகைகள்

படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படி - குறுங்கதை நான்கு

         படி ! டேய் ராம் , பாத்து போ , நிலைப்படி முட்டிடப் போகுது என எச்சரித்தாள் கனகம் . இன்று மட்டும் இப்படி எச்சரிப்பது , இதோடு நான்காவது முறை . புதிதாக வீடு மாறியதில் நிலைப்படியை மட்டும் சரியாக கணிக்கமுடியவில்லை . காலையில் யாரோ வாசலில் கூப்பிட்டார்கள் என வேகமாக வந்ததில் , கனகத்திற்கு இருமுறை தலை இடித்துவிட்டது . அந்த வலிதான் எச்சரிக்கைக்குக் காரணம் . எச்சரித்த 30 நிமிடங்களில் கதவருகில் ராமின் அலறல் கேட்டது . ” குனிஞ்சு வா ன்னு சொன்னா கேட்கிறானா ?” என்று அலுத்துக்கொண்டு எழுந்து சென்றாள் . 2 வெங்கட் எங்கே ? இன்னைக்கு அவனோட ரூமை காலி பண்றேன்னு சொன்னானே ? என்று லஷ்மியம்மா , பாலாஜியைக் கேட்டார் . பாலாஜி , அதைக் கவனிக்காமல் , பப்ஜி ஜூரத்தில் " உன் பக்கத்துல வந்துட்டான் , சுடு என கத்திக்கொண்டிருந்தான் . அப்போது வெளியே இருந்து கார்த்தி படிக்கட்டில் ஏறி உள்ளே நுழைந்தான் . லஷ்மியம்மாவைப் பார்த்ததும் , ” கொஞ்சம் திங்க்ஸ்தான் இருக்கு , எடுத்துக்கிறேன் . நியூஸ்பேப்பரை எடைக்குப் போட்டுட்டு வர்றேன் . அதான் லேட்” என்றான் . ” அதுக்கு இவ்வளவு நேரமா ?” என்றவரை எ...