இடுகைகள்

லூக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய்வாய்ப்பட்ட காதலனுக்கு, காதலி கொடுக்கும் அன்பு பரிசு! - லூக்கா - மலையாளம்

படம்
  லூக்கா -மலையாளம் லூக்கா மலையாளம் டோவினோ தாமஸ், ஆஹானா இயக்குநர் – அருண் ஜோஸ்   அதீத காதலும் அதன் விளைவுகளும்…. இப்படித்தான் இந்தப்படத்தின் கதையைக் கூற வேண்டும். லூக்கா என்ற ஓவியர், ஓவிய கண்காட்சி ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தோழி மூலம் பங்கேற்க வருகிறார் நிஹா. அங்கு வாய் சும்மாயிருக்காமல் இதெல்லாம் ஒரு படைப்பா என கேலி பேச, லூக்காவிற்கும் நிஹாவிற்கும் முட்டிக்கொள்கிறது. பிறகு மெல்ல சமாதானமாகி நட்பு கொள்கிறார்கள். பிறகு இருவருக்குமான கடந்தகாலம் தெரிந்துகொண்டபிறகு காதல் உருவாகிறது. லூக்காவின் பெற்றோர் முன்னமே துர் மரணங்களை சந்தித்தவர்கள். நிஹாவிற்கும் பாலியல் வல்லுறவு சார்ந்த மோசமான அனுபவம் இருக்கிறது. அதுவும் அவளின் மாமா மூலமாகவே. இதையெல்லாவற்றையும் மறக்க வைப்பதாக காதல், லூக்காவின் கலை இருக்கிறது. இப்போது சொன்னதெல்லாம் படத்தின் பின்பகுதியில் நாம் அறிவது. படத்தின் தொடக்கமே லூக்கா அவனது வீட்டில் இறந்துகிடக்கிறான். அவன் எப்படி இறந்தான், அவனது பின்னணி, அவனது நட்பு, எதிரிகள் என காவல்துறை அதிகாரி தேடிவருகிறார். அப்படி தேடும்போது நிஹா என்ற பெண் எழுதிய டைரி அவருக்கு கிடைக்கிறது