இடுகைகள்

பிட்ஸ்- வழுக்கைத் தலை கழுகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்ஸ்: வழுக்கைத்தலை கழுகு!

படம்
வழுக்கைத்தலை கழுகு ! அமெரிக்காவின் லோகோ என்பதை தாண்டிய சுவாரசியங்கள் கழுகில் உண்டு . வழுக்கைத்தலை கழுகு என்றாலும் உண்மையில் இக்கழுகுகள் வழுக்கையல்ல ; அதன் இறகுகள் அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன . ஆண்டுக்காண்டு இறகுகளின் வண்ணம் மாறிக்கொண்டே வரும் . ஹாலிவுட்டில் வருவது போல கழுகின் வசீகரமாக இருக்காது . பலவீன அலறல் , பிளிறல் வழுக்கை கழுகின் அடையாளம் . பார்க்க ஜென்மேன் போல தெரிந்தாலும் ஆஸ்பிரேஸ் பறவைகளை விரட்டி மீன்களை திருடித் தின்பதில் அப்படியொரு ஆனந்தம் வழுக்கை கழுகுக்கு . காளை , வாத்து , நண்டுகள் உள்ளிட்ட டிஷ்களை சாப்பிடும் இக்குழு மீன்கழிவுகளையும் முகம்சுளிக்காமல் சாப்பிடும் . ஏகபத்தினி ராமனாய் ஒரே பெண் இணையோடு காதலித்து வாழ்ந்து தன் குஞ்சுகளை சமத்துவமாய் இரையூட்டி பாதுகாத்து வாழும் கழுகினம் இது . நியூயார்க்கிலுள்ள கழுகு 38 வயதுவரை வாழ்ந்ததே அதிகபட்ச சாதனை . தெலுங்கு பட செட் போல 4 அடி ஆழம் , 5 அடி அகலத்தில் கூடுகட்டி குஞ்சு பொறித்து வாழும் . புளோரிடாவிலுள்ள கழுகு கூடு 20 அடி ஆழம் , 9.5 அடி அகலத்தில் 2 டன்களுக்கும் அதிக எடையில் உருவாகியிருந்தத