இடுகைகள்

பழம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

படம்
 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா? அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது.  தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந...

உணவுக்குப் பின்னர்/ முன்னர் எப்போது நொறுக்குத்தீனியை சாப்பிடலாம்? - ஆசையோடு சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!

படம்
  பொதுவாகவே, எனக்கு உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதில் அலர்ஜி. ஆனாலும், அம்மாவுக்கு ஓட்டுநராக சிலசமயங்களில் விழாவுக்கு போய், வண்டிக்கு அருகில் பாதுகாத்து நிற்பது வழக்கம். இந்தவகையில் பெரியம்மா ஒருவரின் பேத்திக்கு பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. அவர் பெருநகரில் டீ கடையோடு இணைத்து ஹோட்டல்   ஒன்றை வைத்திருக்கிறார். அதை மெஸ் என்று கூறலாம். மைதாமாவைப் பயன்படுத்தி புதுமையாக தோசை, போண்டா, வடை சுடுவதில் பெரியம்மா கடை மாஸ்டர்கள் விற்பன்னர்கள்.   பெரியம்மா, பெருநகரில் ஹோட்டல் மூலம் ஏராளமாக சம்பாதித்தார். இதன் காரணமாக, அவருக்கு, ஏராளமான ஆட்கள், நலம்விரும்பிகளாக நண்பர்களாக சேர்ந்துகொண்டனர்.   பேத்தியின் விழாவிற்கு ஏராளமான ஆட்கள் வந்து, இருசக்கரம், கார் என வசதிப்படி வந்து சிறப்பித்தனர். மண்டபத்தின் சாப்பிடும் பந்தி விரைவில் நிரம்பிவிட்டது. அப்படியிருந்து போட்டி போட்டு   சாப்பிட்டு வந்த சித்தி ஒருவர், எனது அம்மாவிடம் ‘’எல்லாம் நல்லாத்தான் இருந்துதுக்கா. ஆனா ஒரு குறை. ஐஸ்க்ரீம் தரலியே?’’ என்றார். ‘’ஒரு ஐஸ்க்ரீமில் என்னங்க, வெளியில் வாங்கிக்கொள்ளலாம் வாங்க’’ என்று நான் ...

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்!

படம்
  natashapehrson.com உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள் இன்று ஏராளமான டயட்கள் நடைமுறையில் உள்ளன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் சில உணவுப்பொருட்களுக்கு உரிய தனித்தன்மைகள் உண்டு. அந்த வகையில் அவை ஒருவரின் உடலை மெலிதாக்குகிறது. பழக்கமாக்கிடுங்க என விளம்பர பாணியில் கூற முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். யோகர்ட் யோகர்ட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் பழக முயற்சிக்கலாம். அதில், குறைந்தபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் அதில் இருக்க வேண்டும். லாக்டோபேசில்லஸ் பல்கேரியஸ், ஸ்ட்ரெப்டோகாகஸ் தெர்மோபிலஸ் ஆகியவை பாக்டீரியாக்களுக்கு உதாரணம். யோகர்டை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஜிம்மில் செய்யும் தசை அழகு பயிற்சியை ஆதரித்து வளப்படுத்தும். யோகர்ட்டை பிளெயின் என்ற வகையில் வாங்கி பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட ஃபிளேவர் வகையில் வாங்கினால் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். யோகர்டில் சர்க்கரைக்கு பதிலாக பழங்களை இனிப்புக்காக சேர்த்து சாப்பிடலாம்....

வௌவால்களின் நிறைய இனங்கள் இருப்பது உண்மையா?

படம்
giphy மிஸ்டர் ரோனி வௌவால்களின் எப்படி  இத்தனை இனங்கள் உள்ளன? உலகம் முழுக்க 5 ஆயிரம் வௌவால் இனங்கள் உள்ளன. ஏறத்தாழ பாலூட்டி இனங்களில் ஐந்தாவது இடத்தில் வௌவால்கள் உள்ளன. நிறைய இனங்கள் இருந்தாலும் இவை அதிகம் ஒன்றோடொன்று தொடர்பின்றி உள்ளன. அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் நகரில் செய்த ஆய்வுப்படி, வௌவால் இனங்கள் பெருகி இருந்தாலும் ஒன்றாக இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவற்றின் உணவுப்பழக்கம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம் குறிப்பிட்ட வௌவால் ஒரு பழத்தை சாப்பிடுகிறது என்றால் பிற வௌவால் அதனை சாப்பிடும் என்று சொல்ல முடியாது. இதனால் இத்தனை இனங்கள் இருந்தாலும் கூட  அகில உலக வௌவால்கள் சங்கம் தொடங்கவில்லை. நன்றி - பிபிசி