இடுகைகள்

அவல நகைச்சுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரிட்ஸ் கிராண்ட் ஹோட்டலில் நடக்கும் பார்ட்டியில் பழிக்குப்பழி சம்பவங்கள்! - ஹேப்பி பர்த்டே

படம்
  ஹேப்பி பர்த்டே தெலுங்கு வெண்ணிலா கிஷோர், சத்யா, லாவண்யா திரிபாதி, நரேஷ் அகஸ்தியா ஹேப்பி என்ற கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு பிறந்தநாள். அதை அவர், ரிட்ஸ் கிராண்ட் எனும் ஹோட்டலில் கொண்டாட நினைக்கிறார். ஜாலியாக பார்ட்டி செய்ய நினைக்கிறார். ஆனால், ஹோட்டலுக்குள் நுழைந்து பார்த்தால் அங்கு முழுக்க குடும்பங்கள் அதுவும் வயதான ஆட்களாக வந்திருக்கிறார்கள். எனவே, புஷ் பப் எனும் இடத்திற்கு ஹேப்பி செல்ல, அங்கு அவளுக்கு பாரில் உள்ள ஆள் மதுவில் மயக்க மருந்தைக் கலக்கி கொடுக்கிறார். இதனால் அவள் குத்துப்பாட்டு ஒன்றை வேகமாக ஆடிமுடித்து மயங்குகிறாள். பின்னர், காரில் அடைக்கப்படுகிறாள். அவளுக்கு என்னவானது|?   மயக்க மருந்தை மதுவில் கலந்து கொடுப்பவன் யார்? என்பதற்கான விடை தேடினால் படத்திற்குள் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஹேப்பி பர்த்டே, வழக்கமான தெலுங்குப்படமல்ல. படம் முழுக்க அவல நகைச்சுவை காட்சிகளும், வசனவழி நகைச்சுவையும் நிறைந்துகிடக்கிறது. படத்தை முழுமையாக கையில் எடுத்து சாதித்திருப்பது வெண்ணிலா கிஷோர்தான். அவரின் பாத்திரமே சற்று வேறுபட்டது. அதை அவர் எப்படி நடித்திருக்கிறார்

தனித்தீவில் பனிரெண்டு பணக்காரர்களுடன் இறுதி விருந்து - தி மெனு

படம்
  மெனு ஆங்கிலம் தனியாக ஒரு தீவு. அதில் ஹோவர்தன் எனும் புகழ்பெற்ற உணவகம் உள்ளது. அதனை நடத்தும் சமையல்கலைஞர் பனிரெண்டு ஜோடிகளை   தனது உணவகத்திற்கு விருந்திற்கு அழைக்கிறார். விருந்து நாள் முழுக்க நடைபெறுகிறது. அதில் விருந்தினர்கள் சந்திக்கும் பல்வேறு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்தான் கதை. ஒரு உணவை நாம் சாப்பிடுகிறோம், ருசிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிற படம், தீவிரமான தொனியில்   காட்சிகளைக் கொண்டிருந்தாலும் அவல நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. ஒருவருக்கு 1250 டாலர்கள் என்ற கட்டணத்தை ஏற்றுக்கொண்டுதான் அங்கு பலரும் வருகிறார்கள். அவர்கள் பலருமே தாங்கள் சாப்பிடுவது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள். அதாவது சாப்பாடு பற்றிய கவனம் குறைந்தவர்கள், அல்லது அறவே கவனம் இல்லாதவர்கள். சமையல் குழு, தலைமை சமையல்காரரின் கைத்தட்டலுக்கு உடல் விறைத்து பிறகு இயல்பாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு ராணுவக்குழு போலவே இயங்குகிறார்கள். அப்படி ஒரு கச்சிதம். படத்தில் வரும் கைதட்டல் ஒருகட்டத்தில் ஹிப்னாடிசம் போல நமக்கும் வேலை செய்வதாக தோன்றுகிறது. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் விட இயல்பாக இருக்க

சட்டவிரோத கேசினோவில் பணியாற்றும் கஞ்சத்தனமான பௌன்சரின் கதை! - தி கிரேட் கேங்ஸ்டர்

படம்
                தி கிரேட் கேங்ஸ்டர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் கேங்ஸடர்களுக்கு இடையிலான போட்டிதான் கதை . தொடரின் முதல் காட்சியே கேசினோ ஒன்றின் வாசலில் பாடிகார்டு ஒருவர் கடுமையாக அடிவாங்குகிறார் . அவரை காப்பாற்றாமல் அவரது பார்ட்னர் அமைதியாக நிற்கிறார் . ஏன்டா அப்படியே நிற்கிறே என்றால் , நீ உதவி வேணும்னு கேட்கவே இல்லையே என்று அவன் சொல்கிறான் . சரி எனக்கு உதவி செய் என்கிறான் . சரி என்றவன் அங்கு ரௌடித்தனம் செய்பவர்களின் முகரையைப் பெயர்க்கிறான் .. யெஸ் வேறுயார் அவன்தான் காட்டெரும் உடம்பு கொண்ட நாயகன் லெஸ் நார்டன் . இவன்தான் ஊரில் வந்த பிரச்னை காரணமாக உயிர்பிழைக்க சிட்னியை ஒட்டிய நகருக்கு வந்து கேசினாவில் பௌன்சராக இருக்கிறான் . எதற்கு காசு வேண்டுமே ? அதற்குத்தான் . கேசினாவின் முதலாளி பிரைஸ் கேசிலியைப் பொறுத்தவரை தான்தான் அங்கு ராஜா . அதற்கேற்ப அங்குள்ள காவல்துறை சார்ஜென்ட் டெம்பர் , நாடாளுமன்ற உறுப்பினர் , மேயர் என அனைவருக்கும் காசை இறைத்து தனக்கு தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டிருக்கிறார் . அவருடைய குழுவில் லெஸ் சேர்கிறான் . அவன் வந்தவுடன் பிரைசுக்க

இந்தியாவை மகிழ்விக்கும் தனிக்குரல் கலைஞர்கள் இவர்கள்தான்! - இணையத்தைக் கலக்கும் புதிய பிரபலங்கள்

படம்
😆 1 bhargav kenny virdas praveen தனிக்குரல் கலைஞர்கள் இன்று இணையம் எங்கும் பிரபலமாக உள்ளனர். தமிழில் அலெக்ஸ் பின்னி எடுப்பது போல இந்தியாவெங்கும் தனிக்குரல் கலைஞர்கள் பல்வேறு தீம்கள் எடுத்து காமெடியில் மக்களை மறக்கவைக்கின்றனர். இதில் சினிமா போல பெரிய சென்சார் விஷயங்களை யாரும் செய்வதில்லை. உதாரணத்திற்கு வீர்தாசை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வடிவம் மேற்குலகு சார்ந்தது என்றாலும், வீர்தாஸ் இதனை இந்தியாவிற்கு ஏற்றபடி சிறப்பாக மாற்றி வெற்றிகண்டிருக்கிறார். kanan மிஸ்டர் ஃபேமிலி மேன் பிரவீன் குமார் அமேஸான் ப்ரைம் தமிழில் வரும் தனிக்குரல் கலைஞரின் படைப்பு. நடுத்தர வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் ஒருமணி நேரம் நிகழ்ச்சியாக செய்கிறார். பெரும்பாலானோர் வாழ்க்கைதான். அதிலுள்ள சுவாரசியத்தைக் கண்டறிந்து பேசுவதுதான் பிரவீனின் கிரியேட்டிவிட்டி. குங்பூ போண்டா பேக்கி அமேஸான் ப்ரைம் பார்க்கவ் ராமகிருஷ்ணன் என்பதுதான் பேக்கியாக சுருங்கிவிட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் 30 பிளஸ் ஆட்களின் சந்தோஷம், கலவர விஷயங்களை நிகழ்ச்சியில் சுவைபட பேசுகிறார். பஞ்சகச்சம் கட்டி, போ டை கட்டி வ

போதையேறி தடம் மாறும் நண்பர்களின் கதை! - மது வடலாரா

படம்
மது வடலாரா - தெலுங்கு இயக்கம் - ரிதேஷ் ராணா இசை - காலபைரவா பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்தபடி மேன்சனில் தங்கியிருக்கும் இருவர், அதிகப் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். இதற்காக இவர்கள் செய்யும் செயல் அவர்களை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டார்களா என்பதுதான் கதை. ஆஹா படம் நேர்கோட்டில் நகர்வதில்லை. நான் லீனியரில் மாறி மாறி நகரும் படம் காமெடியோடு செல்வதால் பார்க்க முடிகிறது. ஸ்ரீசிம்கா, சத்யா ஆகியோரின் காமெடிதான் படம் பார்க்க உதவுகிறது. சிறிய கதாபாத்திரங்களில் வரும் அதுல்யா, நரேஷ் ஆகிய கதாபாத்திரங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. ஐயையோ படம் ஒருகட்டத்தில் அபார்ட்மென்ட்டிலுள்ள வீட்டில் தேங்கிவிடுகிறது. இதனால் சற்று சோர்வாகிறது. சிம்கா மயங்கி கிடக்கும் காட்சி, பின் அவரை நரேஷ் கொலை சம்பவத்தில் தொடர்புபடுத்துவது போல வரும் காட்சிகள் சோர்வடைய வைக்கின்றன. அவல நகைச்சுவையாக முடியும் க்ளைமேக்ஸ் நன்றாக இருக்கிறது. புதிய முயற்சி என்றாலும் முடிந்தவரை சீராக உழைத்திருக்கிறார்கள். கோமாளிமேடை டீம்