இடுகைகள்

மார்லன் ஜேம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீங்கள் மட்டும்தான் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? - எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ்

படம்
  எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் நேர்காணல் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் தனது முதல் நாவலை எழுதியபோது அதற்கு பெரும் வரவேற்பு, மாலை மரியாதையெல்லாம் கிடைக்கவில்லை. ஜான் குரோவ்ஸ் டெவில் என்பதுதான் நூலின் பெயர். இந்த நூல் பதிப்பாளர்களால் 78 முறை மறுக்கப்பட்டுள்ளது. கடும் விரக்திக்குள்ளான மார்லன், எழுதிய கையெழுத்து பிரதி, நண்பர்களின் கணினியில் இருந்த பிரதி என அனைத்தையும் அழித்தார். ஆனால் ஒரு ஒரு கணினி பிரதி மின்னஞ்சலில் தப்பி பிழைத்தது. பின்னாளில் 2015ஆம் ஆண்டு எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்க்ஸ் என்ற புனைவை எழுதி   மேன் புக்கர் பரிசை வென்றார். நூலில், இசைக்கலைஞர் பாப் மார்லியை ஒருவர் கொலை செய்ய முயல்வதை புனைவாக்கியிருந்தார். அதற்குப் பிறகு டார்க் ஸ்டார் எனும் தொடர்வரிசை நாவல்களை எழுத தொடங்கினார். பிளாக் லியோபேர்ட், ரெட்வோல்ஃப் என இரண்டு நாவல்கள் ஓடிடியில் தொடராக தயாரிக்கப்படவிருக்கின்றன. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவிற்காக வந்தவரிடம் பேசினோம். மரபான வரலாற்றை எப்படி கற்பனையான புனைவாக மாற்றுகிறீர்கள்? நான் சிறுவயதில் இருந்து பல்வேறு வகையான கதைகள், கட்ட