இடுகைகள்

பஸ்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி, அரச பயங்கரவாதம் என இரண்டுக்கும் இடையில் உயிர்பிழைக்கப் போராடும் ஆதிவாசிகள்!

படம்
  வாழும் பிணங்களாகிவிட்ட ஆதிவாசி மக்களின் கதை மரணத்தின் கதை ஆசுதோஷ் பரத்வாஜ் தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பக்கம் 333. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர், தண்டகாரண்யம் ஆகிய காட்டுப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை எப்படி, மரணத்தின் கதையாக மாறியது என்பதை நூல் விரிவாக விளக்குகிறது. இந்த நூல், அபுனைவு வகையைச் சேர்ந்தது. ஆனால் நூலை வாசிக்கும்போது அதை உணர முடியாது. புனைவு நூலின் மொழியில் அபுனைவு நூல் என புரிந்துகொள்ளுங்கள். தமிழில் அரவிந்தன் நூலை சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். ஆசுதோஷ் பரத்வாஜ், நேரடியாக களத்திற்கு சென்று செய்திக்கட்டுரைகளை எழுதி அனுப்பி பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு,  ஏராளமான வெளிநாட்டு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், நூல்களை சுட்டிக்காட்டி கட்டுரை நூலாக தொகுத்து எழுதியிருக்கிறார். அதுவே நூலுக்கு தனித்த தன்மையை அளிக்கிறது. 2000 தொடங்கி 2021 வரை ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். இவர் ஒரு பத்திரிகையாளர் என்றாலும் அதில் நடைபெறும் செயல்கள், துரோகங்கள், நக்சல் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகள், கிராமத்து செய்தியாளர்...