இடுகைகள்

முதலாளித்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி

மேற்குலக நாடுகள் தம் நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும்! - அமிதவ் கோஷ், எழுத்தாளர்

படம்
  அமிதவ் கோஷ் எழுத்தாளர் தி லிவ்விங் மவுன்டைன் என்ற புதிய நாவலை எழுதியுள்ளார். இதில், மேற்குலத்தனமாக ஆக்ரோஷ வணிக திட்டங்களால் எப்படி பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்துள்ளார். அவரிடம் பேசினோம்.  மனிதர்களால் ஏற்படும் இயற்கை மீதான பாதிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஆந்த்ரோபோசீன் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இன்று பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதனை பெருமளவில் உருவாக்குபவர்கள், மேற்குலக நாடுகள்தான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு அனைவரையும் பாதிக்கிறது.  மேற்குலகில் தொழில்துறையினர் உருவாக்கிய மாடல் அங்கு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதேமாடல் இந்தியாவில் செயல்பட வாய்ப்புள்ளதா? சிறுபான்மையான சமூகத்தில் வேண்டுமானால் மேற்குலக மாடல் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் காந்தி தொழில்மயமாதலின் ஆபத்தை உணர்ந்திருந்தார். 1928ஆம் ஆண்டில் இதைப்பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். மேற்குலக நாடுகளைப் பற்றி நாமும் தொழில்மயமானால் உலகம் முழுக்க வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியது போலவே சூழல் மாறும் என்றார். மக்களி

முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்! - திரைப்பட இயக்குர் இவான் அயர்

படம்
    இவான் அயர் இயக்குநர் இவான் அயர் இவர் இயக்கியுள்ள மீல் பத்தார் எனும் படம் முதலாளித்துவ சமூகத்தில் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பிரச்னை பற்றி பேசுகிறது . இவர் சண்டிகர் நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் . கடந்தாண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் உங்கள் படம் மீல் பத்தார் திரையிடப்பட்டது . அப்படம் பற்றி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் , எங்கே செல்லவேண்டும் என்பது பற்றி கூறுவதாக கூறினீர்கள் . கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் . படத்தலைப்பிற்கு அர்த்தம் மைல்கல் என்பது . மைல்கல் என்பதுதானே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் . எவ்வளவு தூரம் போக முடியும் என்பதைக் கூறுகிறது . இதற்காகவே படத்திற்கு மீல் பத்தார் என தலைப்பு வைத்தேன் . ஆனால் படத்தில் ஐம்பதாயிரம் மைல்களை கடந்தபிறகு அவன் , தான் என்ன சாதித்தோம் என்பதே அவனுக்குதெரியாமல் இருக்கிறது . நிலையாமை பற்றித்தான் இங்கு பேசுகிறேன் . டெல்லியில் நடைபெற்ற குழு வல்லுறவு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 2018 இல் சோனி என்ற படத்தை உருவாக்கினீர்கள் . உங்களது இரண்டாவது படத்தை எப்படி இந்த முறையில் உருவாக்க முடிந்தது ? பஞ்சாபி

பராக் ஒபாமா விரும்பி படித்த நூல்கள் இவைதான்!

படம்
பராக் ஒபாமா விரும்பிய புத்தகங்கள்! தகவல் யுகத்தில் மனிதர்கள் எப்படி பொருட்களாக மாறுகிறார்கள். அவர்களை எப்படி கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை ஆசிரியர் சோசனா கூறியுள்ளார்.  இந்தியா முழுக்க பல்வேறு வணிக குழுக்கள் வியாபாரம் செய்தன. அதற்காக பல்வேறு நாடுகளை காலனியாக்கி ஆட்சி செய்தன. அது பற்றிய வரலாற்றை ஆசிரியர் கூறுகிறார். மொகலாயர் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனி வரையில் இந்த வரலாறு நீள்கிறது.  1890 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான செவ்விந்தியர்களின் வாழ்க்கை பதிவாகி உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை த் தாக்குதல்களை நூல் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஆண்ட்ரேவின் சுயசரிதை. இதில் அவரின் வாழ்க்கை, விளையாட்டில் ஈடுபட்ட அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்.  நன்றி - எகனாமிக் டைம்ஸ்