அதீதசுயமோக வெறியால் துண்டாடப்படும் குடியரசு!
வினோதரச மஞ்சரி ஐந்தாம் வரிசை இருக்கையும், அதீத சுயமோகமும் கூலிப்படை ஊடகங்களில் வேலை செய்து பிறகு, அவை தொழிலதிபர்களின் கைகளுக்கு போனபிறகு வெளியே வந்த பத்திரிகையாளர்களில் பர்கா தத், ரவீஷ் குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். ரவீஷ் குமார், யூட்யூபில் தனி சேனல் ஒன்றைத் தொடங்கி இந்தியில் அரசியல் விவகாரங்களை அவருடைய அனுபவங்கள் வழியாக அலசி பேசிக்கொண்டிருக்கிறார். பர்காதத் மோஜோ எனும் யூட்யூப் சேனலைத்தொடங்கி நடத்தி வருகிறார். நேர்மையான, பாகுபாடற்ற செய்திகளை விரும்புவர்கள் எவரும் இந்த சேனல்களை அணுகி செய்திகளை புரிந்துகொள்ள முயலலாம். ரவீஷ்குமார் யூட்யூப் சேனலில் குடியரசு விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கும் பின்னால் ஐந்தாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது பற்றி பேசியிருந்தார். அதில் முக்கியமானது, தற்போதைய பிராமண இந்து மதவாத கட்சியின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமான வீடியோக்கள், அதில் நாம் அறிந்துகொள்ளும் செய்தி. ஒருவர் அதிகாரத்திற்கு வந்து அதை வைத்து என்ன செய்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்பதே முக்கியம். இன்று எதிர்க்கட்சி த...