இடுகைகள்

முதிர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவின் கல்விக்கொள்கையை மாற்றிய உளவியலாளரின் ஆராய்ச்சி!

படம்
  ஜெரோம் ப்ரூனர் போலந்து நாட்டு அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறந்தவர் ஜெரோம் ப்ரூனர். பிறக்கும்போது இவருக்கு கண்பார்வை இல்லை. பிறகு அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைத்தது. இரண்டு வயதில் பார்வை கிடைத்தவர், பனிரெண்டாவது வயதில் தனது தந்தையை புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். ஜெரோமின் அம்மா, கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. ட்யூக் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்த ஜெரோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை முடித்தார்.  இரண்டாம் உலகப்போரின்போது ஜெரோம் அமெரிக்க அரசின் உளவுத்துறையில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு ஹார்வர்டில் அறிவாற்றல் சார்ந்த ஆய்வு நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிறகு, இங்கிலாந்திற்கு சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்து வந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியவர், தொண்ணூறு வயதில் கூட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  முக்கிய படைப்புகள் 1960 the process of education  1966 studies in cognitive growth இருபதாம் நூற்றாண்டில் டெவலப்மென்டல் சைக்காலஜி துறை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.