இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புளோரிடாவை நடுங்க வைத்த காதல் சைக்கோ - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - காதலைக் கொன்றேன்! அமெரிக்காவில் வெர்மாண்ட்டில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று பிறந்தார் டெட் பண்டி. இப்படித்தான் போலீஸ் கூறுகிறது. இயற்பெயர் தியோடர் ராபர்ட் கோவெல். அம்மா, தங்கையுடன் வசித்த சிறுவன் தன் தந்தையைப் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம், திருமண உறவில் பிறக்கும் அதிர்ஷ்டம் டெட் பண்டிக்கு இல்லை, அவரின் சகோதரிக்கும் இல்லை. இப்படியொரு பெண்ணை வீட்டில் வைத்திருந்தார் அம்மா எலினார் லூயிசின் அப்பா. டெட்டின் தாத்தா. ஆனால், தினசரி எலினாரையும் டெட்டையும் அடித்து துவைப்பது மட்டுமே சமூகத்தின் அழுத்த த்திலிருந்து தப்பிக்க உதவியது. இதனால் அங்கிருந்து தன் சகோதர ர்களின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தார் எலினார். அங்குதான் எலினாருக்கு பிடித்த சமையல்காரர் மன(ண)த்துணையாக,கிடைத்தார். அம்மா, ஜானி பண்டி என்பவரைத் திருமணம் செய்தார்.அது டெட் பண்டிக்கு பிடிக்கவில்லை. காரணம், இரண்டாவது தந்தை அழகாகவும் இல்லை. அவர் கையில் பெரியளவு பணமும் இல்லை. இதை அவர் தன் பெண்தோழியிடம் சொல்லிச் சிரித்தார். இயல்பிலேயே வாட்ட சாட்டமான ஆள். வசீகரமான தோற்றம் என பள்ளியிலேயே புகழ்பெற்றிருந்தார்

நாடோடி வாழ்க்கையின் மகிழ்ச்சி! - டேஸ் ஆஃப் ஹெவன்

படம்
சினிமா விமர்சனம் டேஸ் ஆஃப் ஹெவன் (ஆங்கிலம்) இயக்கம் - டெரன்ஸ் மாலிக் ஒளிப்பதிவு: நெஸ்டர் அல்மென்ட்ரோஸ், ஹாஸ்கெல் வெக்ஸ்லர் இசை: என்னியோ மோரிகோன், லியோ கோட்கே எந்த பொறுப்புமின்றி எதையும் என்னுடையது என்று சொல்ல முடியாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்களா? அதுதான் டேஸ் ஆஃப் ஹெவன் சொல்லுகிற வாழ்க்கை. அமெரிக்காவின் சிகாகோவில் வாழும் பில் நொடியில் கோபம் கொள்ளும் முரடன். அதனால் வேலை செய்யும் தொழிற்சாலையில் முதலாளியை குமட்டில் குத்தி நினைவிழக்கச் செய்கிறான். அப்புறம் வேலை எப்படி அங்கு இருக்கும்?  உடனே தன் தங்கை லிண்டாவை கூட்டிக்கொண்டு கூடவே காதலி அப்பியுடன் டெக்ஸாஸ் செல்கிறான். அங்கு மூவருமாக பணக்கார பண்ணைக்காரரின் கோதுமை வயலில் வேலை பார்க்கின்றனர். அங்கு சந்திப்பவர்களிடம் அப்பியை தன்னுடைய தங்கை என்று பில் சொல்லிவிடுகிறார். பணக்கார விவசாயி, அப்பியை முதல் பார்வையில் இருந்து காதலிக்கிறார். அப்போது அதனை சில நிகழ்ச்சிகள் மூலம் அறிகிறார் பில். அப்போது பணக்கார விவசாயி குறித்த சில செய்திகளை அறிகிறார். உடனே அவரிடமிருந்த பணத்தை ஆட்டையைப் போல முடிவு செய்கிறார். இதற்காக காதலி அப்ப

கீபோர்டு டேட்டா!

படம்
உலகில் பயன்படுத்தப்படும் கீபோர்டுகளில் 104 கீக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கீபோர்டுகளில் 104 கீக்கள் உண்டு. க்வெர்டி கீபோர்டு கண்டறியப்படும் முன்பு 51 வகை கீபோர்டுகள் கண்டறியப்பட்டிருந்தன. ஒரு நிமிடத்திற்கு எத்தனை வார்த்தைகளை நீங்கள் டைப் செய்வீர்கள். மார்க் கிஸ்லிங்பரி என்பவர், ஒரு நிமிடத்திற்கு 360 வார்த்தைகளை டைப் செய்தார். 1946 ஆம் ஆண்டு ஸ்டெல்லா பாஜூனாஸ் ஐபிஎம் டைப்ரைட்டரில் 216 வார்த்தைகளை ஒரு நிமிடத்திற்கு டைப் செய்தார். டைப்ரைட்டிங் பழகியவர்கள் ஒரு நிமிடத்திற்கு டைப் செய்யும் வேகம் சராசரியாக 60-90. ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர்களை டைப்ரைட்டிங் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் டைப் செய்த சராசரி வேகம் 52. -க்வார்ட்ஸ்

ஓபன் சோர்ஸ் ஆப்கள்!

படம்
ஓபன் சோர்ஸ் ஆப்ஸ்! விண்டோஸ், ஆப்பிள், கூகுள் ஆப்ஸ்களுக்கு நிகராக ஓப்பன் ஆபீசிலும் நிறைய ஆப்ஸ்கள் பயனர்களுக்கு ஒளி, ஒலி, புகைப்படம், குறுஞ்செய்தி ஆகிய பயன்பாடுகளுக்கு உதவுகின்றன. MPDroid An Android controller for the Music Player Daemon (MPD) இசையைப் பெற்று ஸ்பீக்கர்கள் வழியாக கொண்டாட சூப்பர் வழி. எம்பிட்ராய்டு ஆப்பை டவுன்லோடு செய்வதுதான். இணையத்திலிருக்கும் ரேடியோக்களை கேட்பது முதல் உங்கள் மெமரிகார்டிலுள்ள பாடல்களை ரசிக்க வைப்பது வரையிலான பயன்கள் இதில் அனேகம். RadioDroid An Android internet radio tuner that I use standalone and with Chromecast ஸ்பெஷலாக ரேடியோக்களை கேட்டு ரசிப்பவர்களுக்கானது ஆப்பை இன்ஸ்டால் செய்து இயக்கி ஹெட்போனை செருகினால் போதும். ஸ்பானிஷ் ரேடியோவைக் கூட தங்கத்தமிழ் மண்ணில் கேட்டு ரவுசு பண்ணலாம்.  Signal A secure messaging client for Android, iOS, and desktop அப்படியே வாட்ஸ் அப்பின் நகல் போல. ஆனால் பாதுகாப்பும், செய்திக்கான பாதுகாப்பும் மீட்டருக்கு மேல் உள்ளது. அதனால் நம்பி இன்ஸ்டால் பண்ணுங்க, நல்லா வாழுங்க.  ConnectBot Andr

ஆர்பிஐ - கருவூல உண்டியல்

படம்
கருவூல உண்டியல் இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும். 91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன. 91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன. பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது. செய்தி: ஆர்பிஐ, ஷா அகாடமி

காமெடி திருடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

படம்
காமெடி திருடர்கள்! உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதைத் திருடிக் கொள்ளையடித்து சென்று சோக்காளியாக வாழ்வது. திருடர்களின் அசகாயர்களும் உண்டு, அசடுகளும் உண்டு. அதில் சிலர்... கேட்காத காது! ஜெர்மனியில் நடந்த திருட்டுக் கதை இது. பெர்லினில் உள்ள வங்கியில் நுழைந்த திருடர் துப்பாக்கியைக் காட்டி பணத்தை பேக்கில் நிறைக்கச் சொன்னார். கேஷியரும் வியர்த்து வழிந்தபடி,  பணத்தை பேக்கில் போட்டார். அப்போது பேக் நிரம்ப, இன்னொரு பேக் வேண்டுமா என ஊழியர் கேட்டார். அதற்கு, அத்திருடர், கையில் வைத்திருக்குக்கும் துப்பாக்கி ஒரிஜினல்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார். காது டமாராமா? என புன்னகைத்தவர் உடனே போலீசை அழைக்கும் அலாரத்தை ஒலிக்கவிட, திருடர் மாட்டிக்கொண்டார். இலவச வலை! இங்கிலாந்தின் டெர்பிஷையரில் இருந்த சிலருக்கு தபாலில் வந்த கடிதம் ஆச்சரியமளித்தது. அவர்கள் போட்டியில் வென்றுள்ளதாகவும், அதற்குப் பரிசாக பீர் வழங்கப்படும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் உச்சி குளிர்ந்து போயினர். சொன்ன இடத்திற்கு வந்தவர்களை போலீஸ் லத்தியில் முட்டிக்கு முட்டி தட்டி கெட்டியாய் காரில் ஏற்றி

கோல்டுமேன் சூழல் பரிசு 2019!

படம்
கோல்டுமேன் சூழல் பரிசு 2019 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆறுபேர் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆளுமைகள் இதில் அடக்கம். 1989 ஆம் ஆண்டு தொடங்கிய கோல்டுமேன் சூழல் பரிசுக்கு இந்த ஆண்டு 30 வயது ஆகிறது. இதுவரை 89 நாடுகளைச் சேர்ந்த 194 சூழலியலாளர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். லைபீரிய காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்திய வழக்குரைஞர், மங்கோலியாவில் காடுகளை பாதுகாக்க முயற்சித்த சூழலியலாளர், பால்கன் பறவைகளைக் காப்பாற்ற முயற்சித்து வரும் வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த உயிரியலாளர், சிலியைச் சேர்ந்த பழங்குடி தலைவர். இவர் நீர்மின்நிலையம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். கடல் சூழலியலாளர் ஒருவர் அமெரிக்காவில் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தைத் தடுத்து வருகிறார். நன்றி: குளோபல் ஈகோகிரான்ட்ஸ் - ஈகோவாட்ச்

ஸ்பெயின் தேர்தல் 2019: என்ன மாற்றம் எதிர்பார்க்கலாம்?

படம்
ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் கட்சி 126 சீட்டுகள் வென்று சாதனை செய்துள்ளது. ஆட்சி அமைக்க 176 சீட்டுகள் தேவை என்பதால் சோசலிஸ்ட் கட்சி பிறகட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. மத்திய வலதுசாரி கட்சி மிக மோசமான சரிவைச் சந்தித்து 66 சீட்டுகளை வென்றுள்ளது. தேசியவாத கட்சி வாக்ஸ் 24 சீட்டுகளை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் ஊக்கத்துடன் செயல்பட்டு வந்த கட்சி சோசலிஸ்ட் கட்சிதான். ஆட்சியிலிருந்து கட்சி ஊழலால் தன் ஆதரவை இழந்தது. இதன்விளைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் தோல்வி காண தேர்தல் நடத்தப்பட முடிவானது.  பசுமை திட்டங்களை சோசலிஸ்ட் கட்சி தீட்டியுள்ளது. 2050 க்குள் 90 சதவீத கார்பன் அளவைக் குறைப்பது. 2040 க்குள் இயற்கை வாயு வண்டிகளை அதிகரிப்பது, பிற வாகனங்களின் பதிவுகளை குறைப்பது. கரிம வாயுப்பொருட்களுக்கான அரசு மானியத்தை வெட்டுவது ஆகியவற்றை கட்சி முன்மொழிந்து செயல்பட உள்ளது. சோசலிஸ்ட் கட்சித் தலைவர் சான்செஸை, பொடேமோஸ் கட்சி தலைவர் பாப்லோ இக்லெசியாஸ் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் 37 பேருக்கு தூக்கு!

சவுதி அரேபியாவில் 37 பேர்களுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஷியா பிரிவு முஸ்லீம்கள். இவர்களில் கணிசமானவர்கள் ஆண்கள். இதோடு வலைப்பூ எழுதியவர்களும் இதில் உண்டு. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பதினான்கு பேர் கைது செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஆம்னஸ்டி அமைப்பு இணைந்து தகவல் தெரிவிக்கின்றன. இதில் போராட்டக்காரர்களை சித்திரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்திருக்கிறது காவல்துறை.  ஷியா சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கான கருவியான மரண தண்டனையைக் கருதுகிறது. அண்மையில் சவுதியைச் சேர்ந்த வலைப்பூ எழுத்தாளர்கள், வாஷிங்டன் போஸ்ட் எழுத்தாளர் கஷோகி கொல்லப்பட்டதைப் பற்றி எழுதியதற்காக கைது செய்யப்பட்டனர். டிச. 2018 தகவல்படி, பதினாறு பத்திரிகையாளர்கள் சவுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குடிமக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது நாம் அறியவேண்டிய விஷயம். - குளோபல் வாய்சஸ்

மோட்டரோலா ரேசர் வி4!

படம்
மோட்டரோலாவின் அடுத்த போனாக ரேசர் வி4 என்ற போன் வரவிருக்கிறது. இதன் வடிவமைப்பு குறித்த புகைப்படங்கள் சீன இணையதளங்களில் கசிந்துள்ளன. சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு என்ற போனுக்கு போட்டி என இதைக்கூறலாம். அந்த போனைவிட இது பாக்கெட்டில் எளிதாக வைத்துக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டே வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட போன் இது. வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை இதன் விலை 1500 டாலர்களாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. மோட்டரோலா போன் வெளியிட இது சரியான சந்தர்ப்பம் அல்ல என டெக் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் இப்போதுதான் சாம்சங், மடிக்கும் டேப்லட் வெளியிட்டனர். ஆனால் அதில் சிக்கல்கள் ஏற்பட மேம்படுத்தி வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர். நன்றி: ஃப்யூச்சரிசம்

அசுரகுலம்- சாலி சலான்

அசுரகுலம் -  சேலி சலான் சேலி சலான் ஒன்றும் செய்யவில்லை. கணவரை சுத்தியால் இருபதுமுறை தலையில் அடித்து கொன்றார். அப்புறம் குற்ற உணர்வு தாங்காமல் தற்கொலை செய்ய முயற்சித்தார். போலீஸ் அவரை கைது செய்தது. அவருக்கு மனநிலை பிரச்னை உள்ளதா என்று சோதித்தது. இறுதியில் தந்தையைக் கொன்றதைக் கண்டுகொள்ளாமல் அவரது மகன்களே தாயை பிணையில் எடுக்க முயற்சித்தனர். நடந்தது என்ன? சாலி தன் பதினைந்து வயதில் 22 வயதான ரிச்சர்டைச் சந்தித்தார். பேசினார்கள், பழகினார்கள். உள்ளம் கலந்தால் அப்புறம் என்ன அச்சம்? திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பிள்ளைகளும் தாம்பத்திய சந்தோஷத்தின் அடையாளமாக கிடைத்தார்கள். 31 ஆண்டுகள் ஆனபிறகு கருத்து வேறுபாடு ஏற்பட ஓராண்டு இருவரும் பிரிந்து இருந்தனர். பின்னர் சமரசம் ஏற்பட்டது. இச்சம்பவங்களை நான் உங்களுக்கு சொல்லுவது 2010 ஆண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது இருவரும் சாலியின் பெற்றோர் வீடு அருகே சந்தித்தனர். அந்த வீட்டை விற்றுவிட ரிச்சர்டு விரும்பினார். சாலியும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அந்த வீட்டில் தங்கிய ரிச்சர்டு மனைவியிடம் பன்றி இறைச்சியும் முட்டையும் சமைத்து

அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்!

படம்
அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்! டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஆராய்ச்சியாளர்கள் குழு 27 டிகிரி முதல் -196 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிராபீன் டாட்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட தெர்மோமீட்டர் இது. இதில் மைக்ரோ கெல்வின் அளவிலான மாறுதலையும் கண்டுபிடிக்க முடியும். இந்த தெர்மோமீட்டரை ஷேக் எஸ் இஸ்லாம் என்ற நானோசயின்ஸ்  தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த இயக்குநர் தலைமையிலான குழு கண்டுபிடித்திருக்கிறது. செல்சியஸ் வெப்பநிலையில் மாறும் மாறுதல்களை 300 மில்லி செகண்ட்ஸ் வேறுபாட்டில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது இது. ஓராண்டில் ஏறத்தாழ 50 சுழற்சி முறைகள் உண்டு. இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் முறையில் தெர்மோமீட்டர் செயல்படுகிறது. நன்றி: நானோஸ்கேல் அட்வான்சஸ் படம் - செய்தி: தி இந்து

காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் கிரிக்கெட் பந்தின் சுழற்சி மாறுபடுமா? உள்நாடோ, வெளிநாடோ ஆட்ட மைதானம் கிரிக்கெட் பணியின் பலத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும். அப்போதுதான் உள்நாட்டு அணி வெல்ல முடியும். எனவே இதில் தட்பவெப்பநிலையும் கூட்டுசேர்கிறது. இதைக் காரணமாக கூறினாலும் பந்து ஸ்விங் ஆவது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை மழைபெய்து களம் ஈரமானால் பந்து எல்லைக்கோட்டை தொடுவது தாமதமாகும். அவ்வளவே. மற்றபடி இந்த நேரத்தில் அறிவிக்கப்படும் டக்வொர்த லீவிஸ் முறை யாருக்கும் புரியாத சீக்ரெட் விதி. நன்றி: பிபிசி படம்: பின்டிரெஸ்ட்

மூளையின் எண்ணங்கள் பேச்சாக...

படம்
மூளையின் எண்ணங்கள் பேச்சாக... அண்மையில் மூளையின் எண்ணங்களை அப்படியே நாம் புரிந்துகொள்ளும் விதமாக பேச்சாக்கும் கருவியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். இதற்காக குழந்தைகளின் கதைகளைத் தேர்ந்தெடுத்து இம்மாடலைத் தேர்ச்சியடையச் செய்துள்ளனர். கருத்துகளைப் புரிந்துகொண்டு, அதனைப் பேச்சாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், 69 சதவீத வார்த்தைகள் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளன. மேலும் 25 வாய்ப்புகள் இதற்காக அளிக்கப்பட்டுள்ளன. உரையாடல்கள்  மற்றும் அதன் ஒலிகள் என்பதை வகைப்படுத்துவது கடினமான ஒன்று. மூளையிலுள்ள பேச்சு மையங்கள் சிக்னல்களை ஒலியாக மாற்றுவது ஆகியவற்றை செய்ய முயற்சிக்கிறோம் என்கிறார் கோபால அனுமன்சிபள்ளி. -நியூஸ்அட்லஸ்

படுகொலையை நினைவுபடுத்தும் விளம்பரம்

படம்
ஜெர்மன் கேமரா கம்பெனி லெய்கா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில் வெளியிட்ட விளம்பரத்தில் சீனாவின் தியான்மென் சதுக்க வன்முறைக்காட்சியை கேமராவில் படம்பிடிப்பது போல விளம்பரத்தை உருவாக்கி வெளியிட்டது. ஜூன் 4 வரை சீனாவில் தியான்மன் சதுக்க படுகொலைகளைப் பற்றிய செய்தியை யாரும் பார்க்க முடியாதபடி தடுப்பது கம்யூனிச அரசின் வழக்கம். லெய்காவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி உருவான விளம்பரம் இது. ஹன்ட் என்ற பெயரில் உலகம் முழுக்க நடந்த வன்முறை நிகழ்வுகளை புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்திருந்தனர். அதில் 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று தியான்மன் சதுக்க படுகொலைகள் புகைப்படமும் ஒன்று. இதில் போராடிய மாணவர்களை ஒடுக்க சாலைகளில் டாங்குகள் செல்கின்றன. இந்த விளம்பரம் பிரேசிலில் அண்மையில் வெளியானது. விளம்பரப்படத்தை நாஸ்கா - சாச்சி அண்ட் சாட்சி என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த விளம்பரம் வெளியானதும், சீனர்கள் தேசியவாதத்தில் குதித்தனர். இது சீனாவுக்கு பெரிய அவமானம். ஹூவெய் போன் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட லெய்கா கேமரா நிறுவனம் இப்படி செய்யலாமா எனவும் பல கருத்துகள் இணையத்தில் குவியத் தொடங்கின

டைம் 100: மகத்தான தலைவர்கள்

படம்
டைம் 100 - சாதனை தலைவர்கள் மகாதீர் முகமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற 93 வயதிலும் போராடி வருகிற தலைவர். முன்னாள் மலேசிய பிரதமர். நடப்பு பிரதமராக மலேசியாவை வெற்றிப்பாதையில் நடத்திச்செல்ல முயன்றுவருகிறார். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதானார். மே 2018 இல் நடந்த தேர்தலில் மகாதீர் முகமதி அமோகமாக வென்றார். விரைவில் சிறையிலிருந்து வெளிவந்துள்ள அன்வர் ரஹீமிடம் தன் ஆட்சிப்பொறுப்பை அளிக்கவுள்ளார் மகாதீர் முகமது. ரென் ஸெங்பெய் இப்படிச்சொன்னால் அவரது ஊரிலேயே கூட அடையாளம் தெரியாது. சீனாவின் பெருமையை உலகெங்கும் ஒலிக்க வைத்த கம்பெனி ஹூவெயின் ஓனர் என்றால் அவரா என்பீர்கள். 1987 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 600 டாலர்களில் தொடங்கிய கம்பெனி, இன்று இந்தியாவுக்கு 5 ஜி சேவையை வழங்கப்போகிறது. உலகில் 170 நாடுகளில் கடையைப் போட்டு ஸ்மார்ட்போன்கள் முதல் தொலைத்தொடர்பு வசதிகள் வரை தரும் நிறுவனம் இது. ஆனால் சீனாவுக்காக ஹூவெய் பிறநாடுகளை உளவு பார்ப்பதாக வதந்தி பரவ நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை தடை செய்ய முயற்சிக்கின்றன. சீ

ஹலோ சொல்லலாமா? அகிலின் இளமைத் தாண்டவம்

படம்
ஹலோ (தெலுங்கு, 2017) இயக்கம்: விக்ரம் கே குமார் கேமரா: பி.எஸ்.வினோத் படத்தொகுப்பு:  பிரவின் புடி அனுப் ரூபென்ஸ் சின்ன வயதில் உருவான காதல், இளம் பருவத்தில் ஒன்றாக சேர்வதுதான் படம் சொல்லும் கதை. தெருவில் வாழும் சிறுவன் சீனு, தெருவில் இந்திப் பாடல்களை வாசித்துக் காட்டி பானிபூரி சாப்பிட்டு வருகிறான். அதாவது படத்தில் அப்படித்தான் காட்டுகிறார்கள். அங்கே அதே கடையில் பானிபூரி சாப்பிட சிறுமி ஜூன்னு(மைரா தண்டேகர்) வருகிறாள். அவளுக்கும் சீனுவுக்கும் இடையில் ஒருவித இணக்கம் வருகிறது. இசையை வாசித்துக் காட்டும்போது, ஜூன்னு அவனை இடைமறித்து நீயே ட்யூன் ஒன்றை உருவாக்கு.அதுதானே டேலண்ட் என்று சொல்லிவிட்டு பானிபூரியை சாப்பிட்டு போய்விடுகிறாள். நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நாமும் பரஸ்பரம் அக்கறை காட்டுவோம் அல்லவா? அதேதான் இங்கும் நிகழ்கிறது. அப்போது சீனு, ஜூன்னு இருவரும் பிரியும்போது என்ன நிகழ்கிறது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை. விக்ரம் குமாரின் மேக்கிங், படம் பார்க்கும் அனுபவத்தை மிக இனிமையாக்குகிறது. அதுவும் வினோத்தின் ஒளிப்பது படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ர

மைக்ரோசாஃப்டின் இன்டெலி மவுஸ்- 20 ஆண்டு கொண்டாட்டம்

படம்
மைக்ரோசாப்ட் மவுஸூக்கு இருபது வயது ஆச்சு! முதலில் நாம் எப்படி ஒரு மவுஸைப் பயன்படுத்தி வந்தோம் தெரியும் அல்லவா?  மவுசை அசைத்து எம்எஸ் பெயிண்டில் ஒரு கோடு போட, மவுஸ் பேடு தேவை. அதில் வாரத்திற்கும் ஒருமுறையேனும் துடைத்து வைத்திருக்கும் லேட்டரல் திங்கிங் மனம் தேவை.  இல்லையென்றால் மவுசும் நகராது நம் வேலையும் இம்மியளவுகூட முன்னே நகராது. அப்போதுதான் அறிமுகமானது மைக்ரோசாஃப்ட் ஆப்டிகல் மவுஸ். கீழே எல்இடி விளக்குடன் குண்டுமணி இல்லாத ஒரே மவுஸ். இன்றுவரை சந்தையை மாற்றிய கண்டுபிடிப்பு அதுவே.ஆனால் அப்போது அதன் விலை 75 டாலர்கள் - 100 டாலர்கள் வரை கேட்டனர்.  அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் நடைபெற்ற காம்டெக்ஸ் என்ற எலக்ட்ரானிக் ஷோவில்(சிஇஎஸ் போலத்தான்) அறிமுகமானது இந்த மவுஸ். இதற்கு பெயர் இன்டெலி மவுஸ்.  இந்த மவுசின் தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் ஸெராக்ஸ் கணினி நிறுவனத்தோடு இணைந்து சந்தைப்படுத்தியது. ஆண்டு 1981. அப்போது அதன் விலை 16, 500. இன்று அதன் விலையை ஒப்பிட்டால், 45 ஆயிரம் டாலர்கள் வரும். ஆனால் இவையெல்லாம் வணிக கணினிகள். இதனைப் பயன்படுத்துவதற்கான மவுஸ் பேடுகள் கூட

அம்மை ஊசி போடுங்க - அமெரிக்கா அட்வைஸ்!

படம்
படை எடுக்கும் அம்மை! மீண்டும் தொற்றுநோய்களின் படையெடுப்பு தொடங்கிவிட்டது. இதோடு மக்கள் தொற்றுநோய் தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளைக் கொண்டது என்று கூறி அதனைத் தவிர்க்கும் செயல்பாடுகளை சில தன்னார்வ குழுக்களுடன் சேர்ந்து செய்து வருகின்றனர். பல்வேறு அறிவியல் சோதனைகளிலும் பக்கவிளைவுகள் பாதிப்புகள் உண்டு. ஆனால் இன்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டபின்புதான், பல்வேறு தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இயற்கை மருத்துவர்கள் நோயின் தோற்றமும் முடிவும் குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டன. அது இயல்பாக தோன்றி இயல்பாக முடிவுக்கு வந்துவிடும் என்று கூறுகின்றனர். மரணத்தை ஏற்றுக்கொள்வது சரி. ஆனால் இது பக்கத்து வீட்டுக்கார ருக்கு ஏற்படும் வரைதான். உங்கள் தந்தைக்கோ, தாய்க்கோ அம்மை தாக்கும் அபாயம் ஏற்பட்டால், அல்லது தாக்கினால் இதேபோல கொண்ட கொள்கையில் உறுதியோடு இருக்க முடியுமா? சாத்தியமில்லை. தற்போது அமெரிக்கா 1989 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் தடுப்பூசி அவசியம் என்று அறிவித்துள்ளது. இம்மாதம் அமெரிக்கா - இஸ்ரேல் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும பெண்மணிக்கு தொற்றுநோய் கண்டறியப்பட்ட

டைம் 100 - திறமைக்கு மரியாதை

படம்
டைம் 100 கல்விக்கரம் - FRED SWANIKER ஆப்பிரிக்கர். இன்று அங்கு 60 சதவீத மக்கள்தொகையினர் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்தான். அங்குள்ள இளைஞர்களுக்கு கல்வி அளித்து அவர்களை தலைவர்களாக்கும் கல்வி முயற்சியை ஃபிரெட் ஸ்வானிகர் தொடங்கியுள்ளார். சொல்லாத கதைகள் - LYNN NOTTAGE மனிதநேயம் பேசும் கதைகள், நாடகங்களுக்கான உழைப்புதான் லின் நோட்டேஜின் பெயர் சொல்லும் படைப்புகளுக்கான காரணம். இவரின் ஸ்வெட் எனும் நாடகத்திற்காக நாடு முழுவதும் அலைந்து அதனை உருவாக்கினார். இதற்கு அங்கீகாரமாக இரண்டாவது முறையாக புலிட்சர் பரிசைப் பெற்றுளார் லின். இனவெறி, மதம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயம் பேசும் படைப்புகளை உருவாக்க முனையும் லின்னின் உழைப்பு ஆச்சரியமானது. பாராட்டப்பட வேண்டியது. பெண்களுக்கான குரல் Aileen Lee பலரும் கூகுளில் பெண்களுக்கு மதிப்பில்லை, ஊதியம் குறைவு என்று பேசுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் அய்லீன் லீ ஆல் ரெய்ஸ் என்ற தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி பெண்கள் பலருக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார். ஆண்களின் நெருக்கடிகளால் தவித்த பெண்களுக்கு தன்னம்பிக்கை தந்துள்ளார். TA

அசுரகுலம் - சிறுமி எங்கே?

படம்
 காதலி ... காதலே அழி! 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம். இங்கிலாந்தைச் சேர்ந்த  டேனியல்லா ஜோன்ஸ், அன்று மாலை வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. நேரம் ஆக ஆக அவரின் அம்மா லிண்டாவுக்க பதற்றம் அதிகரித்தது.தன் கணவர் ஆண்டனியிடம் புலம்பியவர்,  மகளின் தோழிகளுக்கு போன் போட்டு பேசியவர், ஒருகட்டத்தில் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். பள்ளி முடிந்து  கிளம்பிய டேனியல்லா பள்ளி அருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நீல நிற வேன் அருகே நின்று ஒருவரிடம் பேசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். யார் அவர் என்று பார்த்தால், அவர் டேனியல்லாவின் மாமா, ஸ்டூவர்ட் கேம்ப்பெல். போலீஸ் அங்கே இங்கே தேடியும் நானோ அளவுகூட ஆதாரம் கிடைக்கவில்லை. ஸ்டூவர்ட்டின் ஹிஸ்டரியை அப்போது கூட போலீஸ் தோண்டவில்லை. நமது போலீஸ் போல காதலா, கள்ளக்காதலா என டாஸ் சுண்டிப்போட்டு பார்ப்பதற்குள் சித்திரவதைக்குள்ளான டேனியல்லா பரலோகம் போயிருந்தார். அதை உறுதிப்படுத்தக்கூட போலீசுக்கு பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. அங்கும் இங்கும் தேடிப்பார்த்த போலீஸ் ஒருகட்டத்தில் ஸ்டூவர்ட்டின் மீது சந்தேகம் வந்து அ

புயல் பாதிப்பால் செக்ஸ் தொழிலுக்கு மாறும் மொசாம்பிக் மக்கள்!

படம்
மொசாம்பிக் நாட்டை இடாய் எனும் புயல் தாக்கியதால் பெரும் சேதம் விளைந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து வாழ்வாதாரம்  சிதைந்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிபெற்று தராமல் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் கற்பை விலைபேசி உயிர்வாழும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் ஒரு மூட்டை அரிசிக்காக. இடாய் தாக்கியுள்ள இடங்களில் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற தங்கள் கற்பையே இழக்க முன்வந்துள்ள அவலம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்கிழக்கு ஆசியப்பகுதி இயக்குநர் டேவா மாவ்ஹிங்கா கூறியுள்ளார். பெய்ரா, மணிகா, சோஃபாலா ஆகிய ஆகிய கிராமங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக 1.85 மில்லியன் பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் ஐ.நா மொசாம்பிக் அரசுடன் இணைந்த உணவு, குடிநீர் உள்ளிட்ட  தேவைகளை செய்ய முன்வந்துள்ளது. ஆனால் சுயநலவாதிகளான உள்ளூர் தலைவர்கள், அங்கு இடர்ப்பாட்டில் சிக்கி பட்டினியில் சிக்கிய பெண்களை தம் காமவெறிக்கு பலியாக்கி உள்ளனர். அங்குள்ள பெண் ஒரு

பென் ஃபிராங்க்ளின் எஃபக்ட் தெரியுமா?

படம்
உளவியல் கருத்துகள் பென் பிராங்க்ளின்  ஒருவரிடம் நீங்கள் உதவிகேட்டு அவர் செய்தால், மெல்ல அவருக்கு நீங்கள் பிடித்தமானவராக மாறுவீர்கள் என்பதுதான் தியரி. 1791 ஆம் ஆண்டு பிறந்த தியரி என்பதால் இன்றைக்கு செட் ஆகுமா என்றெல்லாம் தெரியாது. இதைப்போலவே உள்ள சில தியரிகள். பார்னம் எஃபக்ட் பீச்சில் நடந்துபோகிறீர்கள். அப்போது அங்குள்ள கைரேகை பார்க்கும் அம்மா, உங்களுக்கு கைரேகை பார்க்க அழைக்கிறார். அவர் சொல்வது உங்களது வாழ்வை படம்பிடித்தது போல உள்ளது. அதாவது உங்களை நல்லவர், பிறருக்கு உதவுபவர் என்று கூறுகிறார். அது உண்மையோ இல்லையோ உடனே அந்த பாராட்டை நீங்கள் ஏற்கிறீர்கள் அதுதான் பார்னம் எஃபக்ட். மார்த்தா மிட்செல் எஃபக்ட் ஒருவர் நீங்கள் நொறுங்கிப் போகும் உண்மையைச் சொல்கிறார். ஆனால் அதனைத் தவிர்க்க அவரை பைத்தியம் என பிரசாரம் செய்தால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த தியரி சொல்லுகிறது. அமெரிக்க அதிபர் நிக்சனின் அட்டர்னி மனைவி மார்த்தா, வெள்ளை மாளிகையில் நடந்த கூத்துகளைப் பற்றி பத்திரிகைகளிடம் சொன்னார். உடனே அவரை குடிபோதையில் உளறுகிறார் என கேரக்டரை சிதைத்து செய்தியை அமுக்கினர்.

ஈகுவடார் அரசு.. பனாமா பேப்பர்ஸ் விவகாரம்

படம்
பனாமா பேப்பர்ஸ்.... இந்திய தொழிலதிபர்கள் அனைவரும் தங்கள் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று உரக்க சொன்ன ஒரு செய்தி. மெல்ல ஊடகங்கள் இதனை மறக்க வைத்துவிட்டன. ஏனெனில் ஊடகங்களை நடத்துபவர்களே பெரிய தொழிலதிபர்கள். அல்லது தொழிலதிபர்களின் பங்குகள் அதில் உள்ளன. விளம்பரம் தருகிறார்கள். அரசியல் லாபம் என பல்வேறு விஷயங்கள் இதில் உண்டு. பெட்ரோ ஈகுவடார் என்ற கம்பெனியில் நடந்த தில்லுமுல்லுகளை கொண்டுவந்ததில் பத்திரிகையாளர் மோனிகா அல்மெய்டாவுக்கு முக்கிய பங்குண்டு. அவரிடம் பேசினோம். உங்களது ஈகுவடார் பத்திரிகையாளர் குழு என்ன சவால்களை எதிர்கொண்டது? இன்று இணையத்தில் ஈகுவடார் என்று டைப் செய்ததில்,  பதினாறாயிரம் வார்த்தைகள் முடிவுகள் கிடைக்கும். நீங்கள், வழக்கு தொடர்பான க்ளூக்களை தேடி பொறுமையாக இருந்து உண்மையைத் தேடுகிறோம். நாங்கள் வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை எடுத்துள்ளோம். இதுதொடர்பான ஆளுமைகளை நேர்காணல் செய்துள்ளோம். இதனை நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்தாலே உண்மை தெரிந்து விடும். அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் உண்மை பேச தயங்குவதால் நிறைய தாமதம் ஆகிறது. நாங்கள் இதுதொ

இங்கிலாந்தை மிரள வைத்த பிளாக் பாந்தர்!

படம்
இங்கிலாந்தின் பிளாக் பாந்தர். இந்த பிளாக் பாந்தர், காமிக்ஸ் நாயகர் போல அரசைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. தபால் வங்கியைத் தாக்கி அங்கிருந்த பணவிடைத்தாள்களை பைசாவாக்க முயற்சித்தார். அதையும் கூட சாகசவெறிக்கு அடையாளமாக செய்தார்.அம் முயற்சியில் மூன்று பேரை கொன்றார். ஆனாலும் கூட பெரிய லாபம் கருதி அதை  செய்யவில்லை. அவர் பெயர் டொனால்டு நீல்சன் அவருக்கு அது பிடித்திருந்தது செய்தார். 1970 களில் தபால் ஆபீசுகள், வீடுகளில் புகுந்து திருடி சாகசம் செய்தார். பெரியளவு அதனால் லாபம் சம்பாதிக்கவில்லை. ஆனால் மின்னல் வேகத்தில் நுழைந்து திருடிவிட்டு தப்பித்து ஓடுவதை பார்த்தவர், பிளாக் பாந்தர் திருடன் என பெயர் வைத்தார். அப்போது கூட போலீஸ் பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. அப்போதே மூன்று தபால் அதிகாரிகளை கொன்றிருந்தார். அதனை ஒருவர்தான் செய்திருப்பார் என்று கூட போலீஸ் யோசிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்டுவிட்டது. அது காசு கிடைக்கும் என்று பதினேழு வயது பெண்ணைக் கடத்தியது. புகழ்பெற்ற பணக்கார ரின் மகள் என்றால் சும்மாவா? உடனே பேப்பரில் கடத்தியது சார்? காதல் காரணமா? காம

அசுர குலம் - ரிச்சர்டு ராமிரெஸ்

இரவில் பாய்ந்த கரும்புலி! 1980களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பலரின் தூக்கத்தை ஒருவர் கெடுத்துக்கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்கும் கனவுக்கண்ணன் அல்ல. கொலைகாரர். அவரின் குறி, பெரும்பாலும் ஆன்டிகள்தான். மத்திய வயதிலுள்ளவர்கள் ஃபிளாட்டில் தூங்கும்போது உள்ளே நுழைந்து மெல்ல சித்திரவதையை தொடங்குவார். எல்லாம் ஷங்கரின் கருடபுராணம் போலத்தான். மெல்ல அடித்து உதைத்து துவண்டு பயந்து வீறிடுபவர்களை மெல்ல ரசித்து கொல்வது ராமிரெசின் பாணி. கொலையான உடல்களில் கண்கள் இருக்காது. பற்கள் உடைக்கப்பட்டிருக்கும். இந்த பாணி, சாத்தானின் சித்திரவதை என்று கூறப்பட்டிருப்பதை ஒத்திருக்கும் என கிசுகிசுக்கிறது எஃப்பிஐயின் கோப்புகள். ராமிரெசின் வருகை தந்த பயத்தினால் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்தவர்கள் பலர், படுக்கையில் படுக்காமல், ஆண் தனியாக பெண் தனியாக தூங்கி உயிரைக்காப்பாற்றிய கதைகள் வெகு பிரபலம். பின்னே உசுரு போனா வருமா? தடயம் லேது! அத்தனை கொலைகளிலும் பிணங்களை தூக்கி வந்து மார்ச்சுவரியில் போட்ட போலீசாருக்கு நயா பைசா துப்பு கூட கிடைக்கவில்லை. மிச்சம் ஒன்றுதான். அவர் அவியா என்ற ஷூக்களை அணிந்தார் என்ற

ஆங்கிலம் பொதுமொழியானது எப்படி?

படம்
ஆங்கிலம் என்பது பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ளது. லத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து பெறப்பட்ட வார்த்தைகள் மூலம் ஆங்கிலம் வலுப்பெற்றுள்ளது. ஜெர்மனியிலிருந்து வந்த பழங்குடியான ஆங்கெலஸ் என்பவரின் பெயரிலிருந்துதான் இங்கிலீஷ் என்ற வார்த்தை உருவானது. ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டிராத நாடுகள் இவை. Anguilla Antigua and Barbuda Australia Bahamas Barbados Belize Bermuda Botswana The British Virgin Islands Cameroon Canada (except Quebec) Cayman Islands Dominica England Fiji Gambia Ghana Gibraltar Grenada Guyana Ireland, Northern Ireland, Republic of Jamaica Kenya Lesotho Liberia Malawi Malta Mauritius Montserrat Namibia New Zeland Nigeria Papua New Guinea St. Kitts and Nevis St. Lucia St. Vincent and the Grenadines Scotland Seychelles Sierra Leone Singapore Solomon Islands South Africa Swaziland Tanzania Tonga Trinidad and Tobago The Turks and Caicos Islands Uganda United Kingdom Vanuatu Wales Zambia Zimbabwe

பதினைந்து வயதில் தொழிலதிபர்!

படம்
15 வயசு தொழிலதிபர்! இங்கிலாந்தைச் சேர்ந்த பதினைந்து வயது மாணவர் கணக்குத் தணிக்கை நிறுவனம் தொடங்கி சாதனை புரிந்துள்ளார். ரன்வீர்சிங் சந்து என்ற மாணவர் தன் முதல் தொழில்முயற்சியைத் தொடங்கியபோது அவரின் வயது 12 . இப்போது தன் சக நண்பர்களின் தொழில் முயற்சிகளுக்கும் கணக்கு ஆலோசகராக உதவிவருகிறார். ஒரு மணிநேரத்திற்கு 50 பவுண்டுகளை கட்டணமாக பெற்று வருகிறார். 2016 ஆம் ஆண்டு இணையத்தில் அக்கவுண்ட்ஸ் தொடர்பான படிப்பை நிறைவு செய்தார் ரன்வீர்சிங். எதிர்காலத்தில் தொழிலதிபராக மாறுவதே என் ஆசை, லட்சியம் என கூறியிருக்கிறார். தன் தந்தையின் இடத்தில் ஆபீசை போட்டு பத்து வாடிக்கையாளர்களை பிடித்து கம்பெனியை நடத்தி வருகிறார். எப்படி படிப்பையும் தொழிலையும் சமாளிக்கிறீர்கள் என ஆர்வமாக கேட்டதற்கு, படிப்பும் தொழிலும் வேறுவேறானவை. இதில் மன அழுத்தங்கள் ஏற்படவில்லை என தில்லாக பேசுகிறார் சிங். சில ஆண்டுகளுக்கு முன்பே டெக் பிசினஸ் விருதைப் பெற்றுவிட்டார் சிங். படம்-செய்தி:  நன்றி: தி இந்து

இமெயிலை சீனர்கள் வெறுப்பது ஏன்?

படம்
இமெயிலை வெறுக்கும் சீனர்கள்! வேறென்ன? ரேடியோ காலத்தில் டிவி வந்தப்பிறகு அதைத்தானே உலகமே விரும்பியது அதே கதைதான். சீனாவில் பெரும்பாலும் வீசாட் ஆப்பை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துகின்றனர். பொதுவாக இந்தியாவில் சில ஆப்களை பயன்படுத்த ஃபேஸ்புக் ஐடி கொடுக்காமல் இமெயில் கொடுத்தால், ஓல்டு ஸ்கூலா என்று கேள்வி வரும். வேறு வழியில்லை. நிலைமை அப்படி... அமெரிக்காவில் பார்த்தால் வேலை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு இரண்டுக்குமாக அவர்கள் சுவரே எழுப்பியிருக்கிறார்கள். இந்தியர்கள் அப்படி நினைப்பதில்லை. சீனர்களும்கூடத்தான். இன்று ஆபீஸ், வீடு என இரண்டையும் வீசாட், க்யூக்யூ ஆப் வழியாக கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாளை இதுவும் எளிமையான தொடர்புக்கு மாறலாம். இப்போது இது. 1999 ஆம் ஆண்டு சீனாவில் டெஸ்க்டாப் மெசேஜ் ஆப்பாக இருந்த ஐசிக்யூவை க்யூக்யூ என்ற ஆப்பாக டென்சென்ட் நிறுவனம் மாற்றியது. இன்று டென்சென்ட் சீனாவில் இரண்டாவது பெரிய டெக் நிறுவனமாக மாறி நிற்கிறது. 802 மில்லியன் பேர் சீனாவில் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இமெயிலை ப் பயன்படுத்த சீனாவில் உள்ள தடை என்பது மொழிதான். ஆங்கிலம்

பகிர்ந்து வாழ்வதே மில்லியனிய லட்சியம்!

படம்
பகிர்ந்து வாழ்வோம் - தப்பே இல்லை! நீங்கள் சொந்தமாக வீடு வைத்திருந்தால் பெருமையாக இருக்கும். ஆனால் அதற்கான பராமரிப்பு என்ற விஷயம் வரும்போதுதான் செலவு தேள் கடித்தாற்போல கடுகடுக்கும். மாருதி காரே வைத்திருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையேனும் அதனை ஓட்டிப் பார்ப்பது, சர்வீஸ் செய்வது என செலவுகள் இழுக்கும். இப்போது இப்படி யோசியுங்கள். சென்னையில் கட்டி வைத்த வீடுகளில் ஒன்றை வாடகை அல்லது லீசுக்கு பேசி வாடகைக்கு பர்னிச்சர்களை தரும் ஸ்டார்ட்அப்களில் பணம் கட்டி பொருட்களை வாங்கினால் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்களே கொண்டு வந்து கொடுத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொண்டும் சென்றுவிடுவார்கள். மேலும் இதற்கு நமக்கு தேவைப்படுவது தேய்மானச்செலவு மட்டுமே. இன்று வேலை காரணமாக அங்குமிங்கும் ஏரியாவாரியாக அலையும்போது நாம் வாங்கி குவிக்கும் பொருட்கள் பெரும் சுமை. 1980 களில் ஒருவரிடம் என்ன இருக்கும்? நிலம், வீடு, தங்கம், கால்நடை என இருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் லேப்டாப், ஹெட்போன், உடைந்த திரை கொண்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள். எங்கேனும் செல்வதற்கு சைக்கிளில் செல்வார்கள். வாழ்க்கை சுமை க

மினிமலிச வாழ்க்கை - இது அமெரிக்க கருத்து

படம்
ஹாஸ்டல் வாழ்க்கைதான் செட் ஆகும்! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அப்படித்தான் வேலை பார்த்து வருகின்றனர்.  காரணம், குறைந்து வரும் சேமிப்பு, கடன் தொல்லைகள்தான் காரணம். அமெரிக்காவில் கல்வி கற்கவும் மாணவர்கள் வங்கியில் கடன் வாங்கித் தீரவேண்டும். இதன் காரணமாக, தனி வீடு எனும் கௌரவத்தில் மாட்டினால் டவுசர் கிழிந்துவிடும். பின்னே இஎம்ஐ கட்டுவதா? அல்லது நிம்மதியாக வாழ்வதா? எனவே அமெரிக்கர்கள் இப்போது ஒன்றாக வேலை செய்யும் கோ வொர்க்கிங் ஆபீஸ் போல, ஒன்றாக தங்கும் ஹாஸ்டல்களில் தங்கத் தொடங்கியுள்ளனர். இதனை பாட்ஷேர் என்று அழைக்கின்றனர். என்ன ஸ்பெஷல்? காலேஜ் படிக்கும்போது அல்லது ஸ்கூல் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருப்பீர்கள். குறைந்தபட்சம் அந்த வாழ்க்கையை நண்பர்கள் மூலமாவது அறிந்திருப்பீர்கள். செலவு குறைவாக இருக்கும். பாத்ரூம் முதல் பத்து ரூபாய் பெப்சோடன்ட் பேஸ்ட் வரை ஷேர் செய்து சட்டையை கடன் வாங்கி கெத்து காமித்து நண்பேன்டா சொல்லியிருப்பீர்கள். அதேதான். அமெரிக்க இளஸ் மனஸ் முழுக்க மெல்ல செலவு குறைக்கும் பட்ஜெட் திட்டத்தில் இறங்கியுள்ளனர். மினிமலிச வாழ்க்கை வாழ்வதற்கான ஏக்கம் உள்ளவர

சீரியல் கொலைகாரர்களின் குணம்

சீரியல் கொலைகாரர்களின் குணங்கள் உடனே இது அனைவருக்கும் பொருந்தாது என கூவாதீர்கள். பொதுவாக ஆராய்ச்சி, மற்றும் விசாரணை அடிப்படையில் இதனைக் கூறுகிறோம். சக்திசாலி நான் பொதுவாக தான் செய்த மூர்க்கமான கொலைகள், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சீரியல் கொலைகாரர்களை அடித்துக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். அது ஒரு சந்தோஷம். தான் ஆற்றல் மிக்கவான இருக்கிறேன் என்பதை நீங்கள் கேள்வி கேட்பது உணர வைக்கிறது. எனவே அவர்கள் அதனை தீவிரமாக விரும்புகிறார்கள். சூழ்ச்சிவாதிகள் வரலாற்றில் இது நடப்பதுண்டு. ராட்சசன் படத்தில் சில க்ளூக்களை வேண்டுமென்றே விட்டுச்செல்வது, மெல்ல கொலையின் தீவிர குளிரை எதிரிகளின் மனதில் செலுத்துவது, தவறான தகவல்களை கசியவிட்டு அலைய வைப்பது என்பதை சீரியல் கொலைகாரர்கள் செய்வார்கள். செய்தார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? அது அவர்களை முக்கியமானவர்களாக மாற்றுகிறது. அந்த விளையாட்டு அவர்களுக்கு பிடித்திருக்கிறது. தற்பெருமை தவறு சீரியல் கொலைகாரர்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஸ்மார்ட்தான். ஆனால் வாய் அத்தனையையும் கெடுக்கும். யெஸ் சனி நாக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்த டிராவர்

டிக் டொக் தடை என்னாகும்?

படம்
தேர்தல் பரபரப்பிலும் தமிழக அரசு, ஆபாச வீடியோக்களை பரப்புகிறது என சீன வீடியோதளமான டிக் டொக்கை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த சர்ச்சை தொடங்க சங்கடத்திற்குள்ளான கூகுள், ஆப்பிள் தங்களின் வலைத்தளங்களிலிருந்து டிக் டொக் செயலியை நீக்கியுள்ளன. 120 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த செயலியால், தமிழ்நாட்டில் இளம்பெண் ஒருவர் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தற்கொலை செய்துகொண்டார். நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் விரைவில் நம்பிக்கையான தீர்ப்பு வரும் என சீன நிறுவனம் பைட்டான்ஸ் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஐடி அமைச்சர் மணிகண்டன், பல்வேறு புகார்களைச் சந்தித்ததால் அதனை தடைசெய்வதாக அறிவித்துவிட்டார். உலகம் முழுக்க 500 மில்லியன் மக்கள் இந்த டிக் டொக் செயலியைப் பின்பற்றி வருகின்றனர். வெறுப்பு, செக்ஸ் தொடர்பான வீடியோக்களை தடுக்கும் பொறுப்பை டிக் டொக் ஏற்காத நிலையில் அதன் மீதான தடை இன்னும் பல நாடுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நன்றி: குளோபல் வாய்ஸ்

கோபாட் என்ன செய்யும்?

படம்
ஒன்றாக வேலை செய்வோமா? ஆட்டோமேஷன் வந்துருச்சா? வேலை போய்டுமே, என் அப்பாவின் வேலையைக் காப்பாத்துங்க என்று நினைக்க அவசியமில்லை. சீனாவில் கோபாட்(Cobot) என்ற எந்திரங்களை உருவாக்கி வருகிறார்கள். வால் இ படத்தில் பார்த்திருப்பீர்களே குப்பைகளை கட்டியாக மாற்றி அடுக்குமே சின்ன ரோபோ அதுபோலத்தான் ஐடியா. இது மனிதர்களுடன் இணைந்து வேலை பார்க்கும். பிரேக் டைமில் சமூக அக்கறையை தம் அடித்தபடியே கேட்கும். லன்சில் தன்னை சார்ஜ் செய்துகொண்டே தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் என்ற காலாவதி பேச்சுக்களை கர்ம சிரத்தையாக கேட்கும் ரோபோ இது. அதிக  காலமில்லை நண்பர்களே. இன்னும் 2020 களில் இதன் ஆட்டம் ஆரம்பம்.  சீனாவில் இந்த வகை ரோபோக்களின் சந்தை மதிப்பு 190 மில்லியன்களாக உயரவிருக்கிறது.  நேபாளத்தில் ஒரு ஓட்டல்காரர், வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலத்தில் ஜோக் சொல்லுமளவு பயிற்சியளித்து பயன்படுத்தி வருகிறார் என்றால் ஆச்சரியம்தானே. ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவுடன் இயங்கத் தொடங்கிவிட்டன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓலா, உபர் டாக்சிகள் கணினி மூலம் இயங்கத் தொடங்கிவிடும். பெட் பிராணிகளிலும் எந்திரன்கள் நு