இடுகைகள்

ஜென் ஹூவாங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது!

படம்
  jenson huang nvidia ceo வயது 61 என அவரே சொன்னால்தான் தெரிகிறது. கறுப்பு ஜெர்கினும், ஷூக்களுமாக உற்சாகமாக பேசுகிறார். அவரோடு பேசும்போது அவரை நாம் நேர்காணல் செய்கிறோமா அல்லது அவர் நம்மைப் பற்றி விசாரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை. அந்தளவு பேச்சில் பல்வேறு விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ஏஐ சிப்களை உருவாக்கி வரும் என்விடியா முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று. கூகுள், அமேசான், மெட்டா, ஏஎம்டி ஆகிய நிறுவனங்களுக்கு கடும்போட்டியை சந்தையில் அளித்து வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்யும் இயக்குநர், எந்த மேடையிலும் சோர்ந்து அமர்ந்திருந்தது இல்லை. அவரிடம் பேசினோம்.  நீங்கள் பத்திரிகையாளர் ஆக விரும்பினீர்களா? ஒருகாலத்தில் அப்படி நினைத்தேன்.  என்ன காரணத்திற்காக? அடோப்பின் நிறுவனர் சாந்தனு நாராயண், நான் மதிக்கும் முக்கியமான வணிக தலைவர்களில் ஒருவர். அவர் பத்திரிகையாளராள ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஏனெனில், அந்த வேலை வழியாக கதைகளை சொல்ல விரும்பினார்.  வணிக்கத்திற்கு கதை சொல்வது முக்கியம் என்று கூறவருகிறீர்களா? ஆமாம், நிறுவனத்தின் நிலைப்பாடு, கலாசார உருவாக்கம் ஆகியவை கதை சொல்லல்தா