இடுகைகள்

ஆறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்மைக் காலத்தில்

பிடித்த பிடியை விடாத உப்புநீர் முதலைகள்!

படம்
 உப்புநீர் முதலைகள் அறிவியல் பெயர் குரோகோடைலஸ் போரோசஸ்  ஆயுள் 70 ஆண்டுகள் இவைதான் உலகிலேயே ஊர்வனவற்றில் பெரிய உயிரினம் 23 அடி தூரத்திற்கு வளரும் உப்புநீர் முதலை என பெயரிட்டு அழைத்தாலும் உப்புநீர், நன்னீர் என இரண்டிலுமே வாழும் இயல்பு கொண்டவை.  நீருக்கு அடியில் ஒருமணி நேரம் இருக்கும் திறன் கொண்டது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதி, நியூகினியா தீவுகள், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உப்புநீர் முதலைகளை எளிதாக பார்க்கலாம்.  முதலைகள் 64 முதல் 68 பற்களைக் கொண்டிருக்கும். இவை கீழே விழுந்தாலும் எளிதில் முளைத்துவிடும் தன்மை கொண்டவை. வலுவான தாடைகளைக் கொண்டவை. ஒருமுறை இரையைக் கடித்தால் அப்பிடியை எளிதில் விடாது.  source Time for kids 

காக்கையைப் போன்ற பெரிய நீர்க்காகம்!

படம்
  நீர்ப்பறவைகள் பெரிய நீர்க்காகம் அறிவியல் பெயர்: பெரிய நீர்க்காகம் ( ) குடும்பம்: பாலக்ரோகோரசிடே (Phalacrocoracidae) வேறு பெயர்கள்: கருப்பு பறட்டை, கருப்பு நீர்க்காகம், பெரிய நீர்க்காகம் சிறப்பம்சம் காக்கையைப் போல இருந்தாலும் கழுத்தும் வாலும் அதனை விட நீளம். நீருக்கடியில் மூழ்கி மீன்களை பிடித்து உண்ணும். இறக்கைகளை மரக்கிளைகளில் விரித்து காய வைக்கும். வாத்தைப்போல கால்களில் சவ்வு உண்டு. ஆண் காகங்கள், பெண் காகங்களை விட அளவிலும் எடையிலும் பெரியது.  எங்கு பார்க்கலாம் ஆறு, குளம் , குட்டை, ஏரி, சதுப்புநிலம், கடற்புரங்களில் பார்க்கலாம்.  ஆயுள் 11 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை  7 ஐயுசிஎன் பட்டியல் அச்சுறுத்தும் நிலையில் இல்லாதவை (LC) எழுப்பும் ஒலி கீக் (Kik)... குவாக்(Cuvak)... https://en.wikipedia.org/wiki/Great_cormorant https://www.iucnredlist.org/species/22696792/155523636 https://www.allaboutbirds.org/guide/Great_Cormorant/lifehistory பட்ம் - விக்கிப்பீடியா

கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!

படம்
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!  கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும்  நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த  மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது. மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 லட்சம் டன் வண்ட

ஆற்றைக் காக்கும் கருப்பு நிற பந்து! - ஆவியாதலைத் தடுக்கும் சிந்தனை

படம்
  தெரியுமா? கருப்பு நிற பந்து வறட்சியான, சூரிய வெப்பம் அதிகம் கொண்ட பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாக்கும் தேவை உள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நீர்நிலைகளில் நீர் ஆவியாதலைக் குறைக்க கருப்பு நிற பந்துகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ஷேட் பால்ஸ் (shade balls)என்று பெயர்.  இப்பந்துகள் நீர் ஆவியாதலைக் குறைப்பதோடு, பாசிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, சூரிய வெப்பத்தால் நீரில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களும் குறைகிறது. இதனால் நீரை குடிநீராகவும் பயன்படுத்தமுடியும்.  கருப்பு பந்துகளை பயன்படுத்துவதால், நீர் ஆவியாதலின் அளவை 85 முதல் 90 சதவீதம் வரை குறைக்கலாம். அதேசமயம் பிளாஸ்டிக் பந்துகளை நீரில் மிதக்கவிடுவது, காலப்போக்கில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  கருப்புநிற பந்துகள், பாலிமர் பாலிஎத்திலீனால் (polymer polyethylene) என்ற வேதிப்பொருளால் உருவாக்கப்படுகிறது. இவை எத்திலீன் (Ethylene)மூலக்கூறுகளைக் கொண்டவை. இப்பொருட்களைக் கொண்டு பைகள், பாட்டில்கள் உருவாக்கப்படுகின்றன.    தகவல் Super Science Encyclopedia Book pinteres

சிவப்புநிற ஏரிப்படுகை - இறந்துபோன மரங்களின் கூடு

படம்
  சிவப்பு நிற மணல் மேடுகளைக் கொண்ட ஏரிப்படுகைகள்! டெட்வ்லீ சோசஸ்வ்லீ  நமீபியாவில் உள்ள நிலப்பகுதிகளைப் பற்றித்தான் வாசிக்கப் போகிறோம்.  இங்குள்ள டெட்வ்லீ  (deadvlei) மற்றும் சோசஸ்வ்லீ (sossusvlei)என்ற இரு ஆற்றுப்படுகைப் பகுதிகளும் முக்கியமான நிலப்பரப்புகள் ஆகும். இதனைச் சுற்றிலும் சிவப்பு நிற மணல் மேடுகள் அமைந்துள்ளன. நமீப் பாலைவனம், தெற்கு ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக நீண்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதி, நமீபியாவில் உள்ளது.  இங்குள்ள மணல் சிவப்பு நிறத்திற்கு, அதிலுள்ள கனிமமான இரும்பு காரணமாகும்.  நீர்வளம் இல்லாத காரணத்தால், வண்டல்மண் ஏரிப்படுகை காய்ந்து வெடித்துப்போய் காணப்படுகிறது. இதில் வளர்ந்த மரங்களும் கூட சூரியனின் வெப்பத்தால் பட்டுப்போய் நின்றுகொண்டிருக்கின்றன. இந்த இறந்து போன மரங்களை அகாசியா மரங்கள் (Camel thorn) என்று அழைக்கின்றனர். இவை 1000 ஆண்டுகளைக் கடந்தும் வாழ்பவை என இயற்கை செயல்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். உலர்ந்து வெடித்துப்போயுள்ள நிலப்பரப்பில் வண்டல் மண்ணும் உப்பும் வெவ்வேறு விதமாக வடிவங்களில் காணப்படுகின்றன.  சோசஸ்வ்லீ (sossusvlei) கனமழை பெய்து சாவ்சாப் ஆற

நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

படம்
  மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்! நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது.  2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன.  2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொ

ஆற்றில் பயணிகளை முதுகில் சுமக்கும் யமராஜா! உத்தர்காண்ட்டில் புதுமை மனிதர்!

படம்
        sample picture cc       யமராஜா உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திவானி ராமுக்கு ஐம்பது வயதாகிறது . அவர் பங்காபானி பகுதியில் வசிக்கிறார் . பருவகாலங்களில் மக்கள் ஆற்றைக் கடக்க முப்பது ஆண்டுகளாக உதவிவருகிறார் . ஊர் மக்கள் அவரை யமராஜா என்று அழைக்கின்றனர் . சிலசமயம் இந்த வேலைக்கு எருமையில் ஏறி வருவதால் இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது . ஆற்றைக்கடக்க நினைப்பவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கும் துணிச்சல்காரர் இவர் . ஆற்றில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண பணியல்ல . வழுக்கும் பாறைகள் , நீரின் கணிக்கமுடியாத வேகம் என நிறைய பிரச்னைகள் உள்ளன . பதினான்கு வயதில் ராமுவுக்கு அவரது தந்தை ஆற்றில் நடக்க சொல்லித் தந்திருக்கிறார் . பல்வேறு பருவகாலங்களில் தனது பணியை நிறுத்தாமல் செய்துவருபவருக்கு , இப்போது அவரின் மகனும் துணையாக இருக்கிறார் . தனது சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் தாண்டி அதிக பணத்தை எப்போதுமே ராம் நாடியதில்லை . பல்வேறு தொழிலாளர்கள் , அதிகாரிகள் , சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இலவசமாகவே ஆற்றைக் கடக்க உதவுகிறார் . தற்போது ஆற்றைக் கடக்க அரசு இப்போது

காந்தி தீர்த்து வைத்த ஆற்றுநீர் பஞ்சாயத்து! - காந்தி 150!

படம்
காந்தி @ 150 காந்தி இன்று வாழ்ந்தால் இந்தியாவில் நடைபெறும் பூசல்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என கண்ணை மூடி யோசித்தால் என்ன தோன்றுகிறது? அப்படியே பலரும் தூங்கிச் சாய்வார்கள். ஆனால் இந்த கான்செஃப்டில் நாங்கள் யோசித்து ஓர் கட்டுரை எழுதினோம். இது ஓகே ஆனால் அடுத்து அணு உலையோ என்று கூட பயம் வந்தது. பயப்படாதடா சூனா பானா என்று முதுகை நாமே தட்டிக்கொடுத்து சமாளித்து எழுதிய ராவான கட்டுரை. இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களில் முக்கியமானவை, நதிகள். இவை குறிப்பிட்ட மாநிலங்களில் உருவாகி, அவை செல்லும் பாதையிலுள்ள பல்வேறு மாநிலங்களை வளப்படுத்துகிறது.  உதாரணத்திற்கு காவிரி நதி. கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி எனுமிடத்தில் காவிரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி தோன்றிய இடத்திலிருந்து பாய்ந்து சென்று கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களை வளப்படுத்துகிறது. பின்னர், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை வளப்படுத்தி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல்லாண்டுகளாக காவிரியின் நீர்வளத்தை பங்கிடுவதில் கர்நாடகம் - தமிழகத்திற்கிடையே கருத்துவேறுபாட