நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

 











நிலங்கள், மலைகள் வரலாறு! 


புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். 


தொன்மைக் காலத்தில் எழுதப்பட்ட புவியியல் சார்ந்த தகவல்கள் இன்று கிடைக்கிறதா என்றால் குறைவானவையே அழிவில் தப்பி பிழைத்திருக்கின்றன. அதில் கிரேக்கர்கள், சீனர்கள் ஆகியோரின் பதிவுகள் முக்கியமானவை.கிரேக்கர்களின் பயண வாழ்க்கையை ஹோமரின் இலியட், ஒடிஸி ஆகியவை விளக்குகின்றன. இந்த காவியங்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. காவியங்கள் என்றாலும் கூட நிலப்பரப்புகளை அறிவியல் அறிக்கை போல தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். 


இவர்களுக்கு பிறகு யார் என்றால் ஆசியர்களான நம்மவர்கள் வருகிறார்கள். பதினைந்து, பதினாறு, பதினேழு ஆகிய நூற்றாண்டுகளில் பயணம் செய்வதோடு கிடைக்கும் பல்வேறு உயிரின மாதிரிகளையும் சேகரித்து வைத்தனர். இதனை பயணம் தவறாது செய்து வந்தது முக்கியமானது. 


இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பயணம் செய்வது, பயணவழிகளை எளிதாக விரல் நகர்த்தல்களில் கண்டுபிடிக்கும் அளவுக்கு கணினி தொழில்நுட்பம் அதை எளிமையாக்கிவிட்டது. நாம் இன்று மயிலாப்பூரிலுள்ள என்ஏசி நகைக்கடை அல்லது நித்யாமிர்தம் உணவகம், சாந்தி காலனியிலுள்ள ஐஏஎஸ் அகாடமி என்றால் கூட எளிதாக கூகுள் மேப்பில் கண்டுபிடித்து சென்று சேர்வது எளிது. தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என நீங்கள் கற்றிருந்தால் போதுமானது. 


குறிப்பிட்ட வழிபாட்டுத்தலங்கள், சாலைகள், நினைவுத்தூண்கள் ஆகியவற்றை நாட்டிலுள்ள மக்கள் அவர்களின் வரலாறு சார்ந்து புரிந்துகொள்ளும்போதுதான் அவை மதிப்பிற்குரியதாகின்றன. உயரமாக கட்டுவதால் அனைத்து தூண்களும் வரலாற்று மதிப்பு பெற்றுவிடாது. இன்று உலகத்திலுள்ள நாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இந்த தொடர்பு மூலம் வரலாறு தொடர்பான நிறைய தகவல்களை நாம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இது நேர்மறையானது. 


ஜியோகிராபி என்ற ஆங்கிலச்சொல்லுக்கு, அறிவியல் பூர்வமாக பருப்பொருள் ரீதியாக உலகம் மற்றும் மனிதர்களின் மக்கள்தொகையை ஆய்வு செய்வது என்று பொருள். இதிலும் இப்போது இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை, பிசிக்கல் ஜியோகிராபி, ஹியூமன் ஜியோகிராபி.


ஆன்சர் புக் -ஃபாஸ்ட் ஃபேக்ட்ஸ் அபவுட் அவர் வேர்ல்ட் 




கருத்துகள்