விவாகரத்து வழக்குரைஞருக்கும் காதலர்களை சேர்த்து வைக்கும் பெண்ணுக்குமான மோதல் - பிளான் ஏ, பிளான் பி

 


















பிளான் ஏ, பிளான் பி
நெட்பிளிக்ஸ் - இந்தி 


திருமணமானவர்களுக்கு வேகமாக விவாகரத்து பெற்றுத்தரும் வழக்குரைஞருக்கும், காதலர்களை அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து ஒன்றாக சேர்த்து வைக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் மோதல் காதல் இன்னபிற சம்பவங்களே கதை. 


ஷேர்ட் ஸ்பேஸ் எனும் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்கள், பொதுவான கிச்சன் என உள்ள இடத்திற்கு இருவர் வாடகைக்கு வருகிறார்கள். ஒருவர், சுக்லா எனும் விவாகரத்து பெற்றுத் தரும் வழக்குரைஞர் - ரிதேஷ் தேஷ்முக். இன்னொருவர் தமன்னா. இருவரின் கொள்கைகளே வேறுபாடனவை என்பதால், இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. சுக்லா அவரது மனைவியுடன் வாழாமல் தனியாக வாழ்கிறார். அவரது மனைவி அவரது முதலாளியுடன் பாலுறவு கொண்டுவிடுகிறார். இதை சுக்லா அறிந்துகொண்டுவிடுகிறார். இதனால் மனைவியை விட்டு பிரிந்துவிடுகிறார். ஆனால் மனைவிக்கு     குற்ற உணர்ச்சியை உருவாக்கும்படி    விவாகரத்து தருவதில்லை. இதேபோல தமன்னாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. ரிதேஷ், தமன்னா என இருவரும் தங்கள் தனிப்பட்ட பிரச்னை கடந்து எப்படி வாழ்க்கையில் ஒன்றாக சேருகிறார்கள் என்பதே இறுதிக்காட்சி. 


பிரேக் அப், பிற ஆணுடன் பாலுறவு, விவாகரத்து,சாடிஸம், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என படம் நிறைய விஷயங்களைக் கூறுகிறது. இதில் கூறப்படும் கருத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உரையாடல் காட்சிகளை நகைச்சுவையாக அமைத்திருக்கிறார்கள். 

பாடல், இசை என படத்தில் கொண்டாட்டமான தன்மை குறையாமல் உள்ளது. படத்தின் மையக் கதையை பொறுத்தவரை கொரிய டிவி தொடர்களை நினைவுபடுத்துகிறது. ஏதாகிலும் சரி ஜாலியாக பார்க்க ஒரு படம். அந்த விஷயத்தில் படம் உறுதியாக இருக்கிறது.


எதிர்முனைகள் ஈர்க்கும் 

கோமாளிமேடை டீம் 


 


கருத்துகள்