இடுகைகள்

சர்க்கரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

      மருந்து = நஞ்சு ஓமியோபதி ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும். தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது. சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய...

சாமுவேல் ஹானிமன் எழுதிய ஆர்கனான் ஆஃப் மெடிசின் தமிழில்... நூல் விமர்சனம்

படம்
    ஆர்கனான் சாமுவேல் ஹானிமன் தமிழில் வி ஆர் மூர்த்தி, எஸ்என்கே மூர்த்தி கும்பகோணம் ஓமியோபதி இன்ஸ்டிடியூட் விலை ரூ.3 தமிழ்நாடு அரசின் மின்னூலகத்தில் கிடைத்த ஓமியோபதி நூல். நூலை தரவிறக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், கோப்பின் அளவுதான் அதிகமாக உள்ளது. அதை நிர்வாகம் சற்று குறைத்தால், அல்லது வேறு கோப்பு வடிவில் நூல்களை வழங்கினால் நன்றாக இருக்கும். டேட்டா செலவு சற்று குறையும். நூலைப் பார்ப்போம். இந்த நூல், ஜெர்மனியைச்சேர்ந்த ஓமியோபதியின் தந்தையாகிய சாமுவேல் ஹானிமன் எழுதியது. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதற்கு ஆறு திருத்தப்பட்ட பதிப்புகள் வந்துவிட்டன. அதாவது, அவரது ஆயுள்காலத்திலேயே.. அந்த நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நூலின் மொழி, எழுதப்பட்ட காலத்தில் உள்ள வடமொழி, தமிழ் சங்கமமாக உள்ளது சிலசமயங்களில் உறுத்தலாக உள்ளது. மறுக்க முடியாது. ஆனால், நூலின் அடிப்படை விஷயத்தை மருத்துவர் ஹானிமன் கூற விரும்பியதை அறிந்துகொள்வது அந்தளவு கடினமாக இல்லை. நூலில், ஓமியோபதி மருத்துவத்தின் அடிப்படை என்ன, அது எப்படி செயல்படுகிறது., நோயைத் தீர்க்கிறது, அதற்கான மருந்துகளை எப்...

புகையிலை அளவுக்கு சர்க்கரையும் ஆபத்தான பொருள்தான் - ஆராய்ச்சியாளர் டேவிட் சிங்கர்மேன்

படம்
    டேவிட் சிங்கர்மேன் ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா பல்கலைக்கழக பேராசிரியர் சர்க்கரை, தொடக்கத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரின் பொருளாக இருந்து பிறகே அனைத்து மக்கள் பயன்படுத்தும் பொருளாக மாறியது. அதைப்பற்றி விளக்கி கூறுங்களேன். வரலாற்று ரீதியாக பார்ப்போம். தொடக்கத்தில் சர்க்கரையை ஒருவர் பயன்படுத்தினால், அதில் செய்த உணவை சாப்பிடுகிறார் என்றால் அது, அவரின் செல்வ வளத்தைக் குறிப்பதாக இருந்தது. கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் சர்க்கரை என்பது அனைவரும் பயன்படுத்தும் விதமாக விலை குறைந்து கிடைக்கிறது. தொடக்கத்தில் கரும்பில் தயாரிக்கும் சர்க்கரை எளிதாக அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. ஐரோப்பியர்கள், சர்க்கரை விலையில் கிடைத்த லாபத்தை பேராசையோடு அடையாளம் கண்டனர். லாபத்தை அதிகரிக்க அதை பெருமளவு தோட்டமாக போட முடிவெடுத்தனர். இப்படித்தான் ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்கா, லூசியானா, அட்லாண்டிக் தீவுகளான மெடெய்ரா ஆகியவற்றில் கரும்பு தோட்டங்களை அமைத்தனர். இதில் வேலை செய்ய அடிமைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர். இவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதமும் கொடூரமாக இருந்தது. மனித தன்மையோடு அடிமைகள்...

ஸ்கிம்டு பாலில் உள்ள சர்க்கரை அளவு, பூமியிலுள்ள தனிநபருக்கான நீரின் அளவு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
               அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ஆடை நீக்கிய பாலில் எத்தனை கிராம் சர்க்கரை இருக்கும்? ஆடை நீக்கிய பால், ஆரோக்கியமானது. இதில் கால்சியம் உள்ளது. இச்சத்து, உடலிலுள்ள எலும்பு, பற்களுக்கு நல்லது என கூறப்படுகிறது. கொழுப்பு குறைவு என்பதால், இதை டயட்டை கடைபிடிப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதில் பலரும் மறந்துவிடுவது, சேர்க்கப்பட்டிருக்கும் பத்து கிராம் சர்க்கரை பற்றி.... ஒரு கிளாஸ் பாலில் பத்து கிராம் சர்க்கரை உள்ளது. பாலில் சேர்த்து உண்ணும் உணவுகள், பிரெட், சூப் ஆகியவற்றில் சர்க்கரை மறைவாக உள்ளது. இதையும் ஒருவர் கவனமாக பரிசீலித்து உணவுமுறைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மூத்திஸ் என பழங்களில் செய்து விற்கப்படும் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம். எந்தளவு என்றால் கார்பன்டை ஆக்சைடு கரைக்கப்பட்ட கோலாக்களை விட அதிகம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதை பழரசமாக மாற்றி பதப்படுத்தி குடிப்பதில் நார்ச்சத்து இருக்காது. ஆனால் சர்க்கரை அதிகம் இருக்கும். வாழைப்பழம், மாம்பழம், திராட்சை ஆகியவற்றில் சர்க்கரை அளவு அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க...

இனிக்கிற சர்க்கரை பொய்கள் - பெருநிறுவனங்கள் எப்படி குழந்தைகளை திட்டமிட்டு கொல்கின்றன?

படம்
  சர்க்கரையை மறைக்கும் சாமர்த்திய பொய்கள்! பீடியாஸ்யூர் உணவு கிரிட்ஸோ சூப்பர்மில்க் - தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு பெப்சி கோ நிறுவனத்தின் முன்னணி குளிர்பான பிராண்டின் பெயர் ஸ்டிங் எனர்ஜி. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பானத்தை குடித்தவர் வீசும் விசிறிக் காற்று, உடல் பருமனான முதலாளி ஒருவரை அப்படியே அந்தரத்தில் தூக்கி பின்னால் தள்ளி வீழ்த்தும். அந்தளவு ஆற்றல் ஸ்டிங்கில் பொதிந்து உள்ளது என கூறுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், பானத்தில் உள்ள அதிகளவு சர்க்கரைதான். ஆனால் அதை விளம்பரத்தில் கூறினால், ஸ்டிங்கை யார் வாங்குவார்கள்? எனவே, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குகிறது என சொல்லி விற்கிறார்கள். இருநூறு மில்லி பானத்தின் விலை ரூ.20. குழந்தைகள் குடிக்க கூடாது என சிறிய எழுத்தில் பாட்டிலில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் அதை குடிக்க தடையாக இருப்பதில்லை. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என வாங்கிக் குடித்து வருகிறார்கள். மனதிற்கு ஊக்கம், உடலுக்கு சக்தி என்பதை மக்கள் அப்படியே நம்புகிறார்கள். இதை விளம்பரங்கள் மூலம் திரும்ப திரும்பச் சொல்லி பெருநிறுவனங்கள் மக்களை ...

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்...

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின...

கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

படம்
  நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம்.  சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.  தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை ரூ.60 ஆயிரம் கோடி - 2008 2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13 2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை  36 ஆயிரம் கோடி 2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 30 ஆயிரம் கோடி  இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.  கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள...

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செ...

குப்பை உணவுகளை அடையாளப்படுத்தும் இந்திய அரசு!

படம்
  குப்பை உணவுகளுக்கு ரெட் சிக்னல்  உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் கொண்ட பொருட்களை சிவப்பு நிற லேபிளில் அடையாளப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(FSSAI), கடைகளில் விற்கும் உணவுப்பொருட்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. உணவு குறித்த கருத்தரங்கில் புதிய உணவுப்பொருட்களுக்கான விதிகளை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆலோசகர் அனில் அறிவித்தார்.  விதிகள் புதிது இதன்படி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்கள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படும். இவ்விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.  தற்போது சந்தையில், விற்கப்படும் உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இனி கூடுதலாக அவற்றில் இடம்பெற்றுள்ள பகுதிப்பொருட்களைப் பொறுத்து அவற்றின் நிறமும் மாறுபடும்.  உடல்பருமன், வேதிப்பொருட்கள் ஆகியவை கொண்ட உணவுப்பொருட்களால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கலோரிஅட்டவணை கூட உணவுப்பொருள், மக்கள் உடல்நலனுக்கு ஏற்றதா என்று அடையாளம் காண உதவவில்லை. புதிய முறை, மோசமான உணவுப்பொருட்க...

பௌர்ணி நிலவு ஒளி மனிதர்களின் மனநிலையை பாதிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியம் ! ரியல் : கதிர்வீச்சிலும் கூட சமாளித்து வாழும் என்று கூறப்படுவது , கரப்பான் பூச்சி . மனித இனத்திற்கு பாக்டீரியா , ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தியபடி வாழும் இந்த பூச்சி இனம் , பத்தாயிரம் ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்து வருகிறது . மரம் , இலை ஆகியவற்றை உண்டு , நைட்ரஜன் சத்தை நிலத்திற்குப் பெற்றுக் கொடுக்கிறது . இயற்கையின் உணவுச்சங்கிலியில் கரப்பான் பூச்சி முக்கியமானது . எனவே , அவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம் . அதன் இனத்தை ஹிட் ஸ்ப்ரே அடித்து கொல்ல நினைக்காதீர்கள் . தற்போதைக்கு இம்முயற்சி சாத்தியமல்ல . உலகிலுள்ள அனைத்து மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யத்தொடங்கினால் சூழல் மேம்படும் ! ரியல் : நிச்சயமாக சூழல் மேம்படும் . இந்திய குடிமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயன்றால் , கழிவுகளை நிலத்தில் கொட்டுவது குறையும் . இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் கழிவுகள் உருவாகின்றன . இந்த எண்ணிக்கை 2030 இல் ...

உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? தெற்கு அமெரிக்காவில் முதல் பயிராக விளைவிக்கப்பட்டு ஏழாயிரம் ஆண்டுகளாகிறது. உருளைக்கிழங்கு பல்வேறு பட்டினி, பஞ்ச காலங்களில் முக்கியமான உணவுப்பொருளாக இருந்திருக்கிறது. அப்படி இல்லாத காலங்களில் தீனிப் பொருளாக சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளது. இன்றும் சமோசாவில் உருளைக்கிழங்கை விட்டால் கதி மோட்சமில்லை. பெருமளவு விலை ஏறாத காய்கறி இது ஒன்றுதான். அதனால்தான் எப்போதும் ஓட்டல் சாம்பாரில் இதனை மிதக்க விடுகின்றனர். உருளைக்கிழங்கு புகழ்பெற்றதற்கு காரணம் அதிலுள்ள ஸ்டார்ச்தான். இதில் விட்டமின் சி, பி6, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. நார்ச்சத்து அதிகம். வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். பொரித்தால் கொழுப்பு ஏறிவிடும். உருளைக்கிழங்கிலும் பின்னர் நமது உடலிலும்தான். கேக், ஐஸ்க்ரீம், சாலட், பிஸ்கெட் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு நிலைய வித்வான் போல எப்போதும் இருக்கும். காரணம் அனைத்து காய்கறிகளை விட காசு குறைவு. மாவுச்சத்து அதிகம். 1995ஆம்ஆண்டு விண்வெளியிலும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட...

கேரமல் சாக்லெட்டுகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி உப்பும், சர்க்கரையும் கலந்த சாக்லெட்டுகளை அதிகமாக சாப்பிடுவது ஏன்? காரணம், உப்பும் சர்க்கரையும் கலந்த சாக்லெட்டுகள் மூளையில் ஏற்படுத்தும் மகிழ்ச்சிகர உணர்வுதான். வட இந்திய உணவு, தென்னிந்திய உணவு என சாப்பிட்டு சோர்ந்த வயோதிக அன்பர்கள்,  கேரமல் சாக்லெட்டுகள், அதே டேஸ்டில் அமைந்த ஐஸ்க்ரீம்களில் சொக்கிப்போவது இதனால்தான். இதனை ரோனி, சேட்டா கடையில் காபி பைட் வாங்கி சாப்பிட்டுவிட்டு சொல்லவில்லை. 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. செய்தியும் படமும்  - பிபிசி -லூயிஸ் விலாஸன்

பெட்ரோல் டேங்கில் சர்க்கரை போட்டால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வாகனங்களின் டேங்கில் சர்க்கரையைப் போட்டால் இஞ்சின் சேதமாகுமா? கொட்டும் சர்க்கரை வீணாகும். அடுத்து பர்சின் பணம் காலியாகும். நிறைய படங்களைப் பார்த்துவிட்டு அந்த பாதிப்பில் கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் சர்க்கரை என்பது பெட்ரோல், டீசலில் கரையும் தன்மை கொண்டதல்ல. லிட்டர் அளவில் ஒரு டீஸ்பூன் என்பது பிரச்னை அல்ல. ஆனால் பாரி சுகர் போன்ற பாக்கெட்டுகளை வாங்கி கிலோ கணக்கில் கொட்டினால் டேங்க் முழுக்க நிறையும் சர்க்கரை வண்டி இயக்கத்திற்கான பெட்ரோல், டீசலை வண்டிக்கு செலவிட விடாது. மற்றபடி மெக்கானிக் உங்களது பர்சின் கனம் குறைக்கச்செய்யும் வித்தைகள் இதில் வராது. இஞ்சின் போயிடுச்சு சார் என்று கூறுவது சும்மா ஹம்பக். டேங்கை சுத்தம் செய்தால் போதும். பத்மினி கார் முதல் போர்ச் கார் வரை பிரமாதமாக ஓடும்.

சர்க்கரை சாப்பிடும்போது என்னாகிறது?

படம்
birdee சர்க்கரை சாப்பிடும்போது என்னவாகிறது? சர்க்கரை பிடிக்காதவர்கள் யார் உண்டு. அனைவருக்கும் சர்க்கரை மீது தனி ஆசை உண்டு. அமெரிக்காவின் பென்சில்வேனியா, உலகின் சாக்லெட் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவு புகழ்பெற்றது. சர்க்கரை உணவுகளை சாப்பிடத் தொடங்குவதால் ஏராளமான பிரச்னைகளை உடலுக்கு ஏற்படுகின்றன. இதன் பாதிப்புகள் பலருக்கும் ஏற்பட, அதன் தாக்கத்தை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர். நரம்பியல் அறிவியலில், உணவு என்பது இயற்கையான பரிசாக கூறப்பட்டுள்ளது. உயிரினமாக நாம் வாழ்வதற்கு, சாப்பிடுவதும், பாலுறவும்  முக்கியமானது. மூளையின் முன்புறத்திலுள்ள நியூக்ளியஸ் அகும்பென்ஸ், சாக்லெட் கேக்கை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இதிலுள்ள டோபமைன் எனும் ஹார்மோன், கேக்கின் சுவையை மூளையில் பதிந்து வைத்துக்கொண்டு மீண்டும் அதனை உண்ணுமாறு தூண்டுகிறது. இதிலும் கூட இனிப்பை மட்டுமே அதிகம் தேர்ந்தெடுப்போம். காரணம் ஆதிகாலத்து உணர்வுதான். இயல்பாகவே இனிப்பு என்பது சரியான உணவாகவும், கசப்பு என்பது விஷம் எனவும் நம் மூளையில் பதிந்துள்ளது. இது பல்வேறு தலைமுறையாக நம் ஜீனில் பதிந்து ...

அதிகரிக்கும் உடல்பருமன் ஆபத்து!

படம்
cheryl masterson/pinterest  உடல்பருமன் ஆபத்து! உடல் உழைப்பு சாராத பணியாளர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதாக எகனாமிக்ஸ் அண்ட் ஹியூமன் பயாலஜி இதழின் (Economics and Human Biology) ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணிதவியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இது விவசாயிகள், மீனவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு  ஏற்படும் உடல் பருமனை விட அதிகமாக உள்ளது. பாடி மாஸ் இன்டக்ஸ்(BMI) எனும் கணக்கீடு மூலம் மனிதர்களின் எடை, உயரம் ஆகியவை அளவிடப்படுகின்றன.  இதில் பொறியாளர் பிரிவினரின் பிஎம்ஐ 1.17 கி.கி. ஆக உள்ளது. இருபிரிவினருக்கான பிஎம்ஐ வேறுபாடு 1.51 கி.கி. ஆக உள்ளது. 18.5 கி.கி.( ஊட்டச்சத்துக் குறைபாடு), 18.5 கி.கி. - 25 கி.கி(இயல்பான உடல் எடை), 25 கி.கி. - 30 கி.கி.(உடல் பருமன் ) என கணக்கிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).  உடல் உழைப்பு குறைவு, தனிநபர் வருமானம் உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இருபது ஆண்டுகளி...