இடுகைகள்

டாப்சி பானு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை தரும் திரைப்பட கலைஞர்கள்! - டைகர் ஷெராஃப், டாப்சி பானு, ரன்வீர் சிங்

படம்
  ரன்வீர் சிங் குழந்தை போன்ற கலைஞன்! ரன்வீர் சிங் இந்தி நடிகர் அமெரிக்க நடிகர் போல பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்வதோடு, இயல்பாகவும் அப்படித்தான் இருக்கிறார். அனைத்து விருது வழங்கும் விழாவிலும் கேமரா ரன்வீரைத்தான் சுற்றி சுழன்று கொண்டிருக்கும். உடையாகட்டும். கெட்டப் ஆகட்டும் தன்னைச்சுற்றி மட்டுமே பலரது கவனம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். பார்க்க மட்டுமல்ல பேச்சும் அப்படித்தான்.  வளரும்போது, பத்மாவதி படத்தில் இரக்கமே இல்லாத மன்னராக வில்லனாக நடித்தார். கல்லி பாய் படத்தில் வளர்ந்து வரும் ராப் பாடகராக மனங்களை கொள்ளையடித்தார். லூட்டெரா படத்தில் காதலித்து ஏமாற்றுபவராக நடித்திருப்பார். பேண்ட் பாஜா பாரத் படம்தான் அறிமுகப்படம். அதில் காட்டிய எனர்ஜியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  சினிமாவில் செய்யும் வேலையை நான் எனது முதல் நாள் அல்லது கடைசி நாள் என்று நினைத்துத்தான் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு இக்கலைத்துறையில சலிப்பே ஏற்படுவதில்லை. இக்கலையில் உள்ள எல்லையற்ற தன்மையே என்னை ஈர்க்கிறது. தினசரி நான் இங்கு நடக்கும் விஷயங்களை அனுபவித்து வருகிறேன்.  சிறு குழந்தை போன்ற ஆர்வத்துட

என்னுடைய கதாபாத்திரத்தை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்!

படம்
என்னுடைய படத்தை மக்கள் பார்க்கவேண்டும். டாப்சி பானு, திரைப்பட நடிகை நீங்கள் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என முடிவு செய்கிறீர்கள்? அது எளிதானதுதான். மக்கள் என்னுடைய படத்தைப் பார்க்கவேண்டும் என நினைக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் படத்தைப் பார்க்க தோராயமாக 500 ரூபாயை செலவிடுகிறார்கள். அப்பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்காது. நேரத்தையும் பணத்தையும் எனக்காக அவர்கள் செலவிடுவதற்கான நம்பிக்கையை கதாபாத்திரங்கள் தரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.  யாருடைய வழிகாட்டுதலும் இன்றி இந்தி திரைப்பட உலகில் நீங்கள் முன்னணிக்கு வந்துள்ளீர்கள். இதனை எப்படி நினைக்கிறீர்கள்? நான் நடுத்தர வர்க்க குடும்பத்திலிருந்து வந்தவள். அந்த வாழ்க்கையை நான் பார்த்து வந்ததால், அதுபோன்ற கதைகளை என்னால் உயிர்ப்புடன் செய்ய முடிகிறது. மேலும், நான் திரைப்பட ரசிகர்களை நம்புகிறேன். அவர்களின் ஆதரவினால்தான் என்னால் இங்கு வெற்றி பெற முடிந்தது. பல படங்களில் ஒரே மாதிரி கதாபாத்திரங்களை நடிக்கிறோம் என்று தோன்றியுள்ளதா? இல்லை. என்னுடைய ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமாக கதாபாத்திரங்களைக் கொண்டது. இப