இடுகைகள்

யுனிசெப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 ஆயிரம் நன்கொடை வழங்கலாமே! கடிதங்கள்

படம்
             மருந்தே உணவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இந்த வாரம் ஊருக்கு சென்று அம்மாவுடன் ஈரோடு சித்த மருத்துவமனைக்கு சென்றேன் . எனக்கு ஒவ்வாமை மருந்துகளுடன் அம்மாவுக்கு தலைசுற்றல் பிரச்னைக்கு கிலோ கணக்கில் கஷாயம் , மாத்திரைகள் , லேகியங்களை வாங்கி வந்தோம் . அம்மாவுக்கு நரம்புரீதியான பிரச்னை தீவிரமாகிக்கொண்டே வருகிறது . அலோபதி அவளுக்கு பெரிதாக கேட்கவில்லை . எனவே நானே சித்தமருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன் . எந்த பிரச்னைக்கும் அடுத்தவர்களை மட்டுமே குறைசொல்லும் அற்புத குணம் கொண்டவள் , என்னுடைய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டாள் . சித்த மருந்துகளை சாப்பிடுவதில் உள்ள பிரச்னை பத்தியம்தான் . மருந்து கால் பகுதி , பத்தியம் முக்கால் பகுதி என சாப்பிட்டால் உடலின் தன்மையே சில மாதங்களுக்கு பிறகு மாறிவிடுகிறது . எனக்கு கத்தரிக்காய் , கிழங்கு வகைகளை தவிர்க்க சொல்லிவிட்டதால் ஹோட்டலில் அவற்றை பரிமாறுவதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது , இவற்றை சாப்பிட்டு . நானே சமைத்து சாப்பிட்டு வருவதால் அதிக சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்க

இந்தியாவில் பாதிக்கும் மேலான பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னை உள்ளது! - யுனிசெப் ஊட்டச்சத்துத்துறை தலைவர் அர்ஜன் டி வக்த்

படம்
      அர்ஜன் டி வக்த்   அர்ஜன் டி வக்த யுனிசெப் ஊட்டச்சத்து துறை தலைவர் ஆந்திரம் , தெலுங்கானாவில் யுனிசெப் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க என்ன வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ? நாங்கள் இந்திய அரசின் போஷான் அபியான் என்ற திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறோம் . தெலங்கானா , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாங்கள் பல்வேறு செவிலியர்கள் நர்ஸ்கள் ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வருகிறோம் . இவர்களோடு இணைந்து குழந்தைகளுக்கு உணவு , தாய்ப்பால் அளிப்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம் . யுனிசெப் அமைப்பு , உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஐசிடிஎஸ் அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது . கர்நாடகம் , ஆந்திரம் , தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பொது விநியோக முறையை மேம்படுத்தி வருகிறோம் . குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைப்பது எப்படி ? குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆப்டிமல் நியூட்ரிஷன் என்று கூறும் வகையில் உணவுகளை வழங்கவேண்டும் . அதுதான் அவர்கள் பிழைத்திருக்கச் செய்யும் . இதோடு தாய்ப்பாலை ஊட்டுவது . இது குழந்தைக்கு பிழைத்திர