இடுகைகள்

அயர்லாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயன்ட் காஸ்வே - அரக்கர்களின் மோதலால் உருவான பாறைவடிவம்

படம்
  தி ஜெயன்ட் காஸ்வே இடம் – வடக்கு அயர்லாந்து கலாசார தொன்மை இடமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1986 சற்று வெயில் இருக்கும் நாளாக சென்றால் நன்றாக சுற்றிப் பார்க்கலாம். கற்களில் ஈரம் இருந்தால் கால் பிடிமானமின்றி வழுக்கும். இதைப்பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். ஆனாலும் என்ன ரைமிங்காக, டைமிங்காக இப்போதும் எழுதலாம். கலாசார தொன்மை என்ற கோணத்தில் எழுதப்படும் கட்டுரை இது. அயர்லாந்தில் இருக்கும்போது முடிந்தால் ஜெயன்ட் காஸ்வே சென்று பாருங்கள். சூரிய உதயம் அட்லான்டிக் கடலில் வரும்போது, அருங்கோண கற்களில் சூரிய ஒளி மெல்ல படியும் காட்சி அற்புதமானது. பழுத்த இலை மரத்திலிருந்து காற்றின் வழியே இறங்கி நிலம் தொடுவது போன்ற காட்சி. கடல் அலைகள் வந்து கற்களில் மீது மோதும் ஒலியும் நீங்கள் கேட்க முடிந்தால் கவனம் அங்கு குவிந்தால் அதை நீங்கள் நினைவில் ஏதோ ஓரிடத்தில் பின்னாளிலும் வைத்திருக்கலாம்.   இரு அரக்கர்களுக்கு நடைபெற்ற போர் காரணமாக காஸ்வே உருவானதாக கூறுகிறார்கள். இதை உருவாக்கியவர் ஃபின் மெக்கூல். அயர்லாந்தை கடந்து செல்ல கற்பாலத்தை உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பிறகு தன்னை எதிரி பெனான

வரி குறைவாக லாபம் நிறைவாக சம்பாதிக்கும் டெக் நிறுவனங்கள்

படம்
கூகுள், ஆப்பிள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் வரி குறைவாக வசூலிக்கும் நாடுகளில்தான் தங்களது அலுவலகங்களை அமைக்கின்றனர். பில்லியன்களில் லாபம் சம்பாதித்தாலும் மில்லியன்களிலேயே வரி கட்டி வருகின்றனர். இதனைக் கவனித்த புதிய அரசுகள் டெக் நிறுவனங்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டுமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருகின்றனர். இங்கிலாந்தில்  2018ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம், 1.6 பில்லியன் டாலர்கள் லாபம் சம்பாதித்து, வரியாக 28 மில்லியன் டாலர்களைக் கட்டியுள்ளது. அதாவது அதன் மொத்த வருமானத்தில் 1.75 சதவீதம். இதே காலகட்டத்தில் கூகுள் நிறுவனம்  1.4 பில்லியன் டாலர்களை சம்பாதித்து 67 மில்லியன் டாலர்களை வரியாக கட்டியுள்ளது. உலகம் முழுக்க இருக்கும்  பன்னாட்டு வரி சதவீத அளவு என்பது பல்வேறு நாடுகளுக்கு வருவாயை ஈட்டித் தருவதில்லை என்கிறார் நிறுவனங்கள் சார்ந்த வல்லுநரான நீல் ரோஸ். மேற்சொன்ன டெக் நிறுவனங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல, இவை கிளை விரித்த அனைத்து நாடுகளிலும்  லாபம் அதிகமாகும், வரி குறைவாகவும் அமையும்படி லாபி செய்து வரிகளை திருத்தி சம்பாதித்து வருகின்றன. இதில்

கூகுள் அறிவியல் விருது! - மைக்ரோபிளாஸ்டிக் அகற்றும் கண்டுபிடிப்புக்காக...

படம்
வெப்பமயமாதல் உலகத்தை உருக்கி வருகிறது. இந்த  நேரத்தில்தான் இலண்டன் தெருக்களில் நடந்த சூழல் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கிரேட்டா துன்பெர்க் போன்ற சிறுமிகளின் மூலம் பலரும் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். தற்போது அயர்லாந்தைச் சேர்ந்த பதினெட்டு வயது இளைஞர்,கடலில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக்கை ஒழிக்கும் வழி சொல்லி கூகுள் அறிவியல் விருதை வென்றுள்ளார். ஃபியன் ஃபெரிரா என்ற இளைஞர் காந்தம் மூலம் பிளாஸ்டிக்குகளை அகற்றும் முறையைக் கண்டுபிடித்துள்ளார். காந்தம் கொண்ட நீர்மமான ஃபெர்ரோஃப்ளூட் மூலம் பிளாஸ்டிக் மூலக்கூறுகளை அகற்ற முடியும் என இவர் கூறுகிறார். மாதிரிக்கு செய்தும் காட்டியுள்ளார். கூகுள் அறிவியல் விழா 2019 நடைபெற்றது. இதில் உலகம் முழுக்க 100 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து இளைஞர்களாக 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கலிஃபோர்னியாவிலுள்ள மௌண்டன் வியூ கேம்பசில் தேர்வு நடைபெற்றது. முதலிடம் பெற்ற ஃபியனுக்கு  50 ஆயிரம் டாலர்கள் பரிசு அளிக்கப்படவிருக்கிறது. தனது வீடு அமைந்துள்ள பகுதியில் பாறை ஒன்றிருக்கிறது. அங்கு எண்ணெயில் அமிழ்ந்திருந்த பிளாஸ்டிக் உறை

வீல்சேரில் ஆர்ட் - கலக்கும் ஐரிஷ் சகோதரிகள்!

படம்
வீல்சேரில் ஆர்ட்! அய்ல்பே கீன், தன்னுடைய மாற்றுத்திறனாளி தங்கையின் வீல்சேரையே கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார். ஸ்பினை பைஃபிடா எனும் குறைபாட்டால் கீனின் சகோதரி பாதிக்கப்பட்டார். இதன்விளைவாக சக்கர நாற்காலியை நம்பியுள்ளார். இவரது சக்கர நாற்காலியை வண்ணமாக்கியுள்ளார் கீன். இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். டப்ளினைச் சேர்ந்த இஸ்ஸி வீல்ஸ் எனும் அமைப்பை இச்சகோதரிகள் தொடங்கியுள்ளனர். இவர்கள் சக்கர நாற்காலியில் பயன்படுத்தும் வண்ணச் சக்கரங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனை விற்க இவர் விளம்பரம் ஏதும் செய்வதில்லை. இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டும் விளம்பரத்தின் பணியை செவ்வனே செய்கின்றன. 2016 ஆம் ஆண்டு இஸ்ஸி வீல்ஸ் என்ற திட்டத்தை கல்லூரி புராஜெக்டாக தொடங்கினார் கீன். இவர் ஓராண்டாக தன் சகோதரியின் சக்கர நாற்காலியை எப்படி மேம்படுத்துவது என யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். கீன் மற்றும் இசபெல் இருவரும் இந்த அமைப்பு மூலம் வரும் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதியை அயர்லாந்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புக்கு வழங்கி வருகின்றனர். 35 நாடுகள