ஜெயன்ட் காஸ்வே - அரக்கர்களின் மோதலால் உருவான பாறைவடிவம்

 


தி ஜெயன்ட் காஸ்வே

இடம் – வடக்கு அயர்லாந்து

கலாசார தொன்மை இடமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1986

சற்று வெயில் இருக்கும் நாளாக சென்றால் நன்றாக சுற்றிப் பார்க்கலாம். கற்களில் ஈரம் இருந்தால் கால் பிடிமானமின்றி வழுக்கும்.

இதைப்பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். ஆனாலும் என்ன ரைமிங்காக, டைமிங்காக இப்போதும் எழுதலாம். கலாசார தொன்மை என்ற கோணத்தில் எழுதப்படும் கட்டுரை இது.

அயர்லாந்தில் இருக்கும்போது முடிந்தால் ஜெயன்ட் காஸ்வே சென்று பாருங்கள். சூரிய உதயம் அட்லான்டிக் கடலில் வரும்போது, அருங்கோண கற்களில் சூரிய ஒளி மெல்ல படியும் காட்சி அற்புதமானது. பழுத்த இலை மரத்திலிருந்து காற்றின் வழியே இறங்கி நிலம் தொடுவது போன்ற காட்சி. கடல் அலைகள் வந்து கற்களில் மீது மோதும் ஒலியும் நீங்கள் கேட்க முடிந்தால் கவனம் அங்கு குவிந்தால் அதை நீங்கள் நினைவில் ஏதோ ஓரிடத்தில் பின்னாளிலும் வைத்திருக்கலாம்.  இரு அரக்கர்களுக்கு நடைபெற்ற போர் காரணமாக காஸ்வே உருவானதாக கூறுகிறார்கள். இதை உருவாக்கியவர் ஃபின் மெக்கூல். அயர்லாந்தை கடந்து செல்ல கற்பாலத்தை உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பிறகு தன்னை எதிரி பெனான்டூனர் தொடர்ந்து வராதவாறு கற்களை வீசி தடுத்திருக்கிறார். அப்படி உருவானதுதான் காஸ்வே என்கிறார்கள்.

60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கற்களின் அமைப்பு. மொத்தம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கற்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இங்கு கஃபே, பப் எல்லாம் உண்டு. உங்களுக்கு  அங்கேயும் சென்று இளைப்பாற தோன்றினால் பர்சில் பணம் தேறினால் செல்லலாம். காஸ்ட் வே கற்களை மெல்ல நிதானமாக பார்க்கவேண்டுமெனில் நடந்து செல்லலாம். நடந்து சென்றால் எட்டு கி.மீ நடக்க வாய்ப்புள்ளது. அப்படியே நடந்து. டன்செவரிக் காஸ்டிலை என்று பார்க்கலாம்.

வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் ஹெரிடேஜ் சைட்ஸ் நூல்  

 

 

 

 

 


கருத்துகள்